Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-அமெரிக்கா உறவுகள்
   Posted On :  04.04.2022 12:45 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்

இந்திய-அமெரிக்கா உறவுகள்

அமெரிக்கா உடனான முறையான அரசியல் உறவு இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் தொடங்கியது. முதன் முதலாக 1940ஆம் ஆண்டு தாமஸ் வில்சன் மற்றும் சர் கிரிஜா சங்கர் பாஜ்பாய் ஆகிய தூதர்களை பரிமாறிக் கொள்வது நிகழ்ந்தது. இது டில்லியில் தூதரக அலுவலகத்தை நிறுவுவதற்கு காரணமாகியது.

இந்திய-அமெரிக்கா உறவுகள் 

வரலாறு


அமெரிக்கா உடனான முறையான அரசியல் உறவு இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் தொடங்கியது. முதன் முதலாக 1940ஆம் ஆண்டு தாமஸ் வில்சன் மற்றும் சர் கிரிஜா சங்கர் பாஜ்பாய் ஆகிய தூதர்களை பரிமாறிக் கொள்வது நிகழ்ந்தது. இது டில்லியில் தூதரக அலுவலகத்தை நிறுவுவதற்கு காரணமாகியது.


 எனினும் 1946ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஹாரி S. ட்ருமன் என்ற குடியரசுத்தலைவரின் தலைமையின்கீழ்தான் இந்திய-அமெரிக்காவுக்கு இடையே முழுமையான முழுநேர தூதரக உறவுகள் தோன்றியது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் மேலும் இது வலுப்படுத்தப்பட்டது.


பிரிவினையின் பொழுது, காஷ்மீர் ஓர் முடியரசாக இந்தியாவுடன் இணைந்தது. இதனை பாகிஸ்தான் எதிர்த்தது. இது குறித்து பாகிஸ்தான், இந்தியாவுடன் காஷ்மீரின் இணைப்பு சட்டவிரோதமானது, கட்டாயத்தினால் செய்யப்பட்டது என்று கூறியது. 1948ஆம் ஆண்டு இந்த சிக்கல் ஐக்கிய நாடுகளின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, இதன் விளைவாக இந்தியபாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNCIP) நிறுவப்பட்டது. இதில் இந்தியா கடுமையாக ஏமாற்றம் அடைந்தது. "இது முழுவதும் தவறான நடவடிக்கை" என்றும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் செயற்பாட்டினையும் இந்தியா விமர்சித்தது. தொடர்ந்து நேரு ஐக்கிய நாடுகளுக்கு தன்னுடைய முதற்பயணத்தை மேற்கொண்டார்.

இரண்டு அரசுகளின் தலைமைகளுக்கு இடையே தனித்த ஒத்துணர்வு இல்லாமல் போனதாலும், பரஸ்பரம் இருவரும் குறைக்கூறிக் கொண்டதாலும், இந்தியஅமெரிக்கா இடையிலான உறவு மேலும் விரிசலடைந்தது. சீட்டோ (SEATO) மற்றும் சென்டோ (CENTO) எனப்படும் அமெரிக்கா வழங்கிய (தென்கிழக்கு ஆசிய ஒப்பந்தம் அமைப்பு மற்றும் மத்திய ஒப்பந்தம் அமைப்பு) நேச உடன்படிக்கை அமைப்பு மேலும் உறவை மேம்படுத்தவில்லை. இந்த அமைப்பில் பாகிஸ்தானை சேர்த்தது மற்றும் பாகிஸ்தான்அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம் போன்றவை இருதரப்பு உறவுகளிடையே சிறிதளவு மட்டுமே முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஐசனோவர் மற்றும் கென்னடி ஆகியோரின் இரண்டாம் முறை பதவிகாலத்தின் போது, அது மிகச் சிறிய காலமாக இருந்த போதிலும் சிறப்பான சூழ்நிலை நிலவியபோதும், இன்னும் அனைத்து காலங்களுக்கான உறவு நிலவுவதற்கு இன்னும் நீண்ட தூரம் இருந்தது.

இந்திய-அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கிடையேயான ராணுவம் சாரா அணு ஒப்பந்தம்


இந்திய குடியரசுக்கும்-அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்கா ராணுவம் சாரா அணு ஒப்பந்தம் அல்லது இந்திய-அமெரிக்கா அணு ஒப்பந்தமே, 123 உடன்படிக்கை என்றழைக்கப்படுகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பு வேலைக்காக 2005ஆம் ஆண்டு ஜீலை மாதம் 18ஆம் தேதி அன்று கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் IV. புஷ் ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, அதில் இந்தியா தனது ராணுவம் மற்றும் ராணுவம் சாராத அணு உலைகள் அமைப்புகளை தனித்தனியாக பிரித்துக் கொள்வது என்பதை ஏற்றுக் கொண்டது மற்றும் இந்தியாவின் அனைத்து செயற்பாடுகளையும் சர்வதேச அணு ஆற்றல் முகமையின் பாதுகாப்பின் கீழ் இருக்கும்படியும், அதற்கு கைமாறாக, அமெரிக்கா இந்தியாவுடன் முழுமையான ராணுவம் சாரா ஒத்துழைப்பை வழங்க ஏற்றுக் கொண்டது.

இந்த ஒப்பந்தமானது. இந்தியா "ராணுவம் சாராத" என்று அடையாளப்படுத்திய அணுக்கரு உலை அமைப்புகளை, நிரந்தரப் பாதுகாப்பு என்ற ஒப்பந்தத்தின் கீழ் வைத்து விட்டு, பிரச்சனைக்குரிய தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை, குறிப்பாக ராணுவம் சாரா அணுக்கரு செறிவூட்டல் பணிகள் உள்ளிட்ட, மற்றும் மறுசுழற்சி செய்யும் சாதனங்களை, இந்த சர்வதேச அணு ஆற்றல் முகமைகளின் பாதுகாப்பு வரம்பின்கீழ் வருவதைக் கூட செய்யாமல் விதிவிலக்கு பெறும்படியாக செய்து விட்டது. 

2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி அன்று, ராணுவம் சாரா அணு உலை எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை உள்ளடங்கிய ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மேலவை "செனட்" ஒப்புதல் அளித்தது.


பொதுச்சட்டம் 480 கீழ் 1954ஆம் ஆண்டு வேளாண் உற்பத்திப் பொருள்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கு ஐந்து ஒப்பந்தங்கள் இந்திய-அமெரிக்கா இடையே கையெழுத்தானது.

தொழில்மயமாக்கலுக்கு, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு அமெரிக்காவை இந்தியா நாடியபோது, இந்திய-அமெரிக்காவின் உள்நாட்டு (பொருளாதார) திட்டங்களில் தலையிட மற்றும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது. 


பனிப்போருக்கு பிந்தைய காலம் 

நீண்ட கால காலனியாதிக்க அழிவுகளிலிருந்து மீண்டெழுந்த இந்தியா, சுதந்திரத்திற்கு பிறகு 50 ஆண்டுகளில் மாபெரும் மக்களாட்சி அமைப்பை கொண்ட இந்தியா அமைதியை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ளது. இந்த இணையதள காலத்தில், இந்தியாவின் பன்மைத்துவம், தகவல் தொழில்நுட்பத்திறன் மற்றும் ஆங்கிலமொழித் திறமை போன்றவை இந்தியாவிற்கு பெரிய சொத்தாக உள்ளது. இந்த புத்தாயிரமாண்டில், ஆசியாவின் இருபெரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் அதிகாரமிக்க நாடுகளாக மிளிரத் தொடங்கியுள்ளன.


இது சர்வதேச அதிகாரம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதை காட்டுகிறது. நரசிம்ம ராவ் மற்றும் கிளிண்டன் காலத்தில் இந்திய அமெரிக்கா உறவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பும் ஏற்பட்டது.

பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி கார்கில் போரில் ஈடுபட்டபோது அமெரிக்கா அதை கண்டித்து இந்தியாவின் நிலைக்கு ஆதரவளித்தது. அதை இந்தியாவும் வரவேற்றது. இந்தியாவிற்கு 2000ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் வருகை இந்திய-அமெரிக்க உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை மலரச் செய்தது. வாஜ்பாய் இந்திய-அமெரிக்க உறவைப் பற்றி குறிப்பிடும்போது டிஜிட்டல் உலகில் இந்தியாவும் அமெரிக்காவும் பக்கத்து நாடுகள் மற்றும் பங்காளிகள் என்றார். அதன் பின்பு, அறிவியல் தொழில்நுட்பம், சூழலியல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கல்வி, எச்.ஐ.வி, சுனாமி மீட்பு போன்றவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட முடிவெடுத்தன. அதன் தொடர்ச்சியாக புஷ் நிர்வாகத்தின் போதும், இதே இணக்கமான பாதையில் இரு நாட்டு உறவு பயணித்தது. இரு நாடுகளும் இயற்கையாகவே கூட்டாளிகள் என்றும் கூறப்பட்டன. இந்த உறவு, ஒபாமா அமெரிக்கா அதிபரான பிறகு நன்கு பக்குவமடைந்த ஒன்றாக மாறியது, பாதுகாப்பு, அணு ஆற்றல் போன்றவற்றில் புது ஒப்பந்தங்கள் போடப்பட்டன.



எதிர்கால ஒத்துழைப்பு

டிரம்ப் நிர்வாகத்தில் காணப்பட்ட போக்கு உலக நாடுகளுக்கிடையே பதட்டத்தையும், எதிர்வினையையும் ஏற்படுத்தின. புதிய நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து இந்திய அமெரிக்கா உறவுகள் தொடர்ந்த போதிலும், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள், "அமெரிக்கா முதன்மை" எனும் கொள்கை போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான தடைக்கற்கள் ஆகும். பாரம்பரியமிக்க இந்திய ஈரான் உறவுகளில் அமெரிக்காவின் தலையீடு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வெளியுறவில் எந்த வித தலையீடும் இல்லாத சுதந்திரமான கொள்கையை கடைபிடிக்கிறது.



12th Political Science : Chapter 9 : India and the World : India-United States of America (USA) Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும் : இந்திய-அமெரிக்கா உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்