Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான உறவுகள்
   Posted On :  04.04.2022 01:03 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்

இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான உறவுகள்

இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையேயான உறவுகளானது, நீண்டகாலமாக பெருமளவு முன்னிலைப்படுதாமல் இருந்தன.

இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான உறவுகள்



பின்னணி

இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையேயான உறவுகளானது, நீண்டகாலமாக பெருமளவு முன்னிலைப்படுதாமல் இருந்தன. இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே இருந்த புவியியல் சார்ந்த இடைவெளி மற்றும் யுத்த தந்திர ரீதியாகவும், பொருளாதார உறவு ரீதியாகவும் கட்டாயம் என்று உயிர்ப்பான வேகத்துடன் இருதரப்பு உறவுகளில் ஆர்வம் கட்டவில்லை  இருந்தபோதிலும், இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் சுமுகமான ஒரு வரலாற்று உறவைப் பராமரித்து வந்தன. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் இந்தியாவுடன் காலனிய எதிர்ப்பு என்ற மனநிலையை கொண்டிருந்தன, அவற்றுள் பல நாடுகள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே (பத்தொன்பதாம் நூற்றாண்டு) சுதந்திரம் அடைந்து விட்டன. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் உள்ள சமூகங்கள் யாவும், ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ளது போன்று தொன்மையான மற்றும் வளமான நாகரிகத்தைக் கொண்டிருக்கின்றன. எனவே ஒருவர், இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் கலாச்சார ரீதியாக ஒருமைத் தன்மை கொண்ட நடவடிக்கைகள் இருப்பதை காணமுடியும். சூரினாம் மற்றும் கயானா போன்ற இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளும் கணிசமான அளவிற்கு இந்திய வம்சாவழியினரைக் கொண்டதாக இருக்கிறது, இவர்கள் யாவரும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக, காலனி ஆதிக்க சக்திகளால் கூலிகளாக அனுப்பப்பட்டவர்கள் ஆவர். இதுவே, இலத்தீன் அமெரிக்காமற்றும் கரீபியன் நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவின் அடிப்படையாகும்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் பட்டியல்-40 

• இலத்தீன் அமெரிக்கா என்பது பொதுவாக தென் அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அனைத்து நாடுகள் மற்றும் இதன் கூட மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, மற்றும் கரீபியன் தீவுகள் ஆகியவை கொண்டவை என்று புரிந்து கொள்ளப்பட்டன.

• அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோஸ்டோரிகா, கியூபா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், எல் சல்வடோர், பிரெஞ்சு, கயானா, காடியோப், கௌத்தமாலா, ஹைதி, ஹோன்டுராஸ், மெக்சிகோ, நிக்காரகுவோ, பனாமா, பராகுவே, பெரு, பியூர்டோரிக்கோ, செயிண்ட் பார்தலோமி, செயிண்ட் மார்டின், செயிண்ட் பியரி, மிக்கியூலான், உருகுவே மற்றும் வெனிசுலா போன்றவைகளும். 

கரீபியன் நாடுகள் : ஆன்டிகுவா மற்றும் பெர்முடா, பகாமாஸ், பார்படாஸ், கியூபா, டொமினிகா, டொமினிக்கன் குடியரசு, கிரேனடா, ஹைதி, ஜமைக்கா, செயின்ட் கீட்ஸ் மற்றும் நெவீஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சன்ட் மற்றும் கிரெனாடின்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ போன்றவைகள் ஆகும்.



சுதந்திரத்திற்கு பிந்தைய உறவுகள் 

1947 முதல் 1991 வரை

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான இந்தியா கொண்ட உறவு என்பது, 1961ஆம் ஆண்டு நேரு மெக்சிகோ பயணம் மேற்கொண்டது, இந்திராகாந்தி 1968ஆம் ஆண்டு எட்டு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட காலங்கள் கூட மிகவும் சொற்பமானதாகும்.


தற்போதய உறவுகள்

2006 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளையும் உறுப்பாக கொண்டு (BRICS - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) பிரிக்ஸ் எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது, இந்தியஇலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளோடு ஊக்கத்துடன் செயல்பட பாலமாக அமைந்தது. உலகத்தின் எழுச்சி பெற்று வரும் இந்த நாடுகளின் ஒத்துழைப்பானது, பெருமளவு இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்த வசதியாக அமைந்தது. 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உச்சி மாநாடு, இந்தியாவை மற்ற இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்த வகை செய்தது.

ஏறத்தாழ 620 மில்லியன் மக்கள் தொகை மற்றும் வளங்கள் அதிகம் கொண்ட நிலமான இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள், இந்தியாவிற்கு உலகளாவிய அளவில் தனது தடத்தைப் பதிப்பதற்கு பெரும் வாய்ப்புகளைத் தருகிறது. தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் புவியியல் இடைவெளிகள் குறைக்கப்பட்டு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் பகுதிகளுடன் இந்தியா நெருங்கிய உறவு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இந்தியஇலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான வரலாற்று ரீதியிலான நட்புறவானது, 21ஆம் நூற்றாண்டில் மேலும் மேம்படுவதற்கு அடித்தளமாக உள்ளது.


12th Political Science : Chapter 9 : India and the World : India-Latin America and Caribbean Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும் : இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்