புலம்பெயர்ந்த இந்தியர்கள்
"டயஸ்போரா" என்ற வார்த்தை குறிப்பிடுவது "ஒரு மக்கள் தொகையானது தனது சொந்த (தாய்) நாட்டில் (Homeland) இருந்து புலம் பெயர்ந்து பிற இடங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ சென்று விடுவதை குறிக்கும். ஒரே கலாச்சாரத்தை அல்லது ஒரே நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட்டம் பல்வேறு காரணங்களால் குறிப்பாக பொருளாதார, வாழ்வாதார, அரசியல் மற்றும் இதர சமூக நிலைமைகளால் தங்களுடைய சொந்த நாட்டை காலி செய்துவிட்டு பிற நாடுகளில் சென்று குடியேறுவதை குறிக்கும். சில நேரங்களில் தங்களுடைய நாட்டைவிட்டு வெளியேறி வேறு எங்கேனும் தங்கிவிடுவது: இத்தகைய இடப்பெயர்வானது அல்லது மாறிச் செல்வதானது தன்னிச்சையாகவும் அல்லது கட்டாயத்தின் மீதும் இருக்க முடியும். மிகவும் துன்பகரமான நிகழ்வுகள், போர்கள், காலனி ஆதிக்கம், அடிமைத்தனம், இயற்கை பேரிடர்கள், தொடர் துன்புறுத்தல்கள், இழப்பு, சொந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் போன்றவையெல்லாம் கட்டாயம் புலம்பெயர்ந்த மக்களின் காரணங்களாகும். தானாகவே முன்வந்து புலம்பெயர்ந்தோர் என்போர், இதைவிட சிறந்த பொருளாதார வாய்ப்பிற்காக தங்களது சொந்த நாட்டை விட்டு சென்றார்கள் ஆவர். உதாரணமாக, பெருமளவிலான குடியேற்றமானது 1800ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் பின்தங்கியப் பகுதிகளில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றதை குறிப்பிடலாம். கட்டாயத்தின் காரணமாக புலம் பெயர்ந்த மக்கள் கூட்டத்தினர் போலல்லாமல், தானாக முன்வந்து புலம்பெயரும் மக்கள் பிரிவினர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மற்றும் சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும், எண்ணிக்கையிலும் ஏற்கும்படியாக ஆகிறார்கள்.
புலம்பெயர்ந்தோர் தங்கள் தாயகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் பணம் அனுப்பியவர்களாகவும் செயல்படுகிறார்கள், அவர்கள் வர்த்தகம் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கிறார்கள், தொழில்முனைவோரை உருவாக்கி வளர்க்கிறார்கள் மற்றும் புதிய அறிவு மற்றும் திறன்களைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறார்கள்.
வெளிநாடு வாழ் இந்தியர் என்பதன் பொதுவான பதம், இந்தியக் குடியரசின் கீழ் வரும் ஒன்றியங்கள் மற்றும்மாநிலங்களிலுள்ள மக்கள் குடியேறுவதை குறிக்கும் இந்த வெளிநாடு வாழ்வோர் தற்சமயம் கிட்டத்தட்ட 30 மில்லியன் மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதில் (NRI எனப்படும்) இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் மற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு உலகெங்கும் பரவி இருப்போரையும் உள்ளடக்கியதாகும்.
• வெளிநாடு வாழ் இந்தியர் (NRI)- இவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்திய குடிமக்கள் காலவரையறையின்றி வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களை "வெளிநாடு வாழ் இந்தியர்" என வகைப்படுத்தப்படுகின்றனர்.
• இந்திய வம்சாவழியினர் (PIO)-இவர்கள் வெளிநாட்டு இந்தியர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். அங்கேயே குடியுரிமை பெற்று, அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவோரைக் குறிக்கும்.
• அரசற்ற இந்திய வம்சாவழியினர் (SPIO)- இவர்களிடம் தாங்கள் இந்தியர்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்களைக் கொண்ட ஆவணங்கள் வைத்து இருக்காதவர்கள் ஆவர்.
இந்திய அரசாங்கம் புலம்பெயர் இந்தியர்களின் தேவையை அங்கீகரித்துள்ளது. ஏனெனில் அது பொருளாதார, நிதி மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குடிமக்கள் இந்தியாவில் இருந்து வெகுதொலைவில் இருந்தாலும், உலக அரங்கில் இந்தியா பிரகாசிக்கச் செய்ய முயற்சிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 31 மில்லியன் இந்திய பிறப்பு அல்லது அதன் வழித்தோன்றல்கள், புலம்பெயர்ந்த இந்தியர்களாக உலகம் முழுவதும் உள்ளனர். அவர்களுள், 3.1 மில்லியனில், 10 சதவீதம் பேர் அமெரிக்காவில் வாழும் அமெரிக்க இந்தியர்கள் ஆவர். அமெரிக்க வாழ் புலம் பெயர்ந்த இந்தியர்கள், இந்தியாவின் பொருளாதார அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கு மிக இன்றியமையாத ஆதாரமாக விளங்குகிறார்கள்.
இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில், பிரதமர் ஜவஹர்லால் நேரு புலம்பெயர் இந்தியர்களிடம் இருந்து "மிகவும் விலகியிருக்கக் கூடிய வகையில் தீவிரக் கொள்கையினை பின்பற்றினார்". சொந்த நாட்டின் இறையாண்மை பற்றிய விவகாரத்தில் அவர் தந்த முதன்மையினால் இந்த நிலையினை எடுத்தார். பின்னர் ராஜீவ் காந்தியின் ஆட்சியின் போது தான் புலம்பெயர் இந்தியர் கொள்கையில் ஊக்கம் அளிக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு பிஜி பிரச்சனையில் இந்தியர்களுக்கு ஆதரவு கொடுத்தார். இவற்றோடு புலம்பெயர் இந்தியர்கள் ஒரு "இந்தியாவின் திட்டங்களில் சொத்து" என உணர்ந்தார். மேலும் 1984ஆம் ஆண்டு வெளிநாடு வாழ்வோருக்கான துறையை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
புலம்பெயர்ந்த இந்தியர்களைப் பற்றிய கொள்கை, அவர்களை தேடிச் சென்றடைவதற்கு, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின் போது மீண்டும் தொடங்கியது. இவருடைய பதவிக்காலத்தின் பொழுது, முதன் முதலில் 2003ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான "பிரவாசி பாரதிய திவாஸ்" என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த "பிரவாசி பாரதிய திவாஸ்" தினக் கொண்டாட்டமானது ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம் 9-ம் நாள், மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசாங்கம் இதனை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தி குறிப்பாக புலம்பெயர்ந்த இந்தியர்களில் முக்கியமானவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் உள்ளடக்கியதாகும். கடந்த 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய அரசாங்கம் எடுத்துவரும் முன் முயற்சிகள் யாவும் புலம் பெயர்ந்த இந்தியர்களின் நாட்டின் மேம்பாட்டிற்கு ஆற்றிவரும் பங்களிப்பானது மிகவும் வலுவானதும் மற்றும் இன்றியமையாதகிறது. உலகளாவிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடு உதவி, தொழில்நுட்பத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக புலம் பெயர்ந்த இந்தியர்கள் 79 பில்லியன் டாலர்கள் தாய்நாட்டிற்கு அனுப்புவதன் மூலம் அந்நியப் பணத்தை பெரும் நாடுகளில், உலக அளவில் முதலிடத்தை இந்தியாதக்க வைத்துக் கொண்டது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் என்போர் தங்களது மூதாதையர்களின் சொந்த நாடான தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இலங்கையில் இருந்து குடியேற்றம் பெற்றவர்களை குறிக்கும் சொல்லாகும். அவர்கள் உலகம் முழுவதும் 50 நாடுகளில் பரவி இருக்கின்றனர். தென் கிழக்கு ஆசியா, ஒசியானா, அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் ஆகியன இதில் அடங்கும்.
இவ்வாறு மிகவும் ஆரம்பகால குடியேற்ற வகையானது, மொரிஷியஸ், ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, சூரினாம், கயானா போன்ற நாடுகளுக்கு கரும்பு தோட்டத்திற்கு கூலித் தொழிலாளர்களாகச் சென்றது மற்றும் மலேசியாவின் ரப்பர் தோட்டம் மற்றும் இருப்புப்பாதை பணி மற்றும் இலங்கையில் தேயிலை தோட்டம் ஆகியவற்றிலும் கூலித் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டனர். இதுபோக தாமாகவே சென்று எழுத்தர், நிர்வாகப் பணி மற்றும் ராணுவ பணிக்கு சென்றுள்ளனர். இந்த குடியேற்றம் பெற்றவர்கள் தான் படிப்படியாக வர்த்தகம் மற்றும் நிதி விவகாரங்களில் தென்கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு பெற்றவராக ஆயினர். குறிப்பாக இதில் மியான்மார், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென்ஆப்பிரிக்கா வாழ் தமிழர்களும் இதில் அடங்குவர்.
உலகம் முழுவதும் தமிழர்களின் நிலை
1. தமிழ் அலுவல் மொழிகளாக உள்ள நாடுகள் சிங்கப்பூர், இலங்கை ஆகும்.
2. தமிழ் சிறுபான்மை மொழியாக உள்ள நாடுகள் கனடா, மலேசியா, மொரிஷியஸ், செஷல்ஸ், தென் ஆப்பிரிக்கா, ரீயூனியன் மற்றும் பிரான்ஸ் ஆகியவையாகும்.
நவீன புலம்பெயர்ந்த தமிழர்கள் திறன் பெற்ற தொழில் நிபுணர்களாக உலகம் முழுவதும் பல நாடுகளில் குடியேறியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியன் ஆகும். இதில் சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகள் அடங்கும். சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை, வானொலி ஆகியவற்றின் மூலம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கிறது. உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆண்டுதோறும் நடத்தப்படும் புலம்பெயர்ந்தோரின் க்களில் கலந்து கொள்கின்றனர். தங்கள் சொந்த தாய் மண்ணை விட்டு விலகி சென்றாலும் அவர்கள் பண்பாட்டு வழியில் தங்களது தாய்மண்ணான இந்தியா அல்லது தமிழகத்து பண்பாடுகளை உலகெங்கும் கொண்டு செல்பவராகவே உள்ளனர்.