Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | டிகிரி மற்றும் ரேடியன்கள் அறிமுகம்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் - டிகிரி மற்றும் ரேடியன்கள் அறிமுகம் | 11th Physics : UNIT 2 : Kinematics

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

டிகிரி மற்றும் ரேடியன்கள் அறிமுகம்

கோணங்களை அளவீடு செய்வதற்கு பல்வேறு அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படும் அலகு டிகிரி மற்றும் ரேடியன் ஆகும்.

டிகிரி மற்றும் ரேடியன்கள் அறிமுகம்

கோணங்களை அளவீடு செய்வதற்கு பல்வேறு அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படும் அலகு டிகிரி மற்றும் ரேடியன் ஆகும். பரப்பு, பருமன், சுற்றளவு போன்றவற்றை அளப்பதற்கு ரேடியன் பயன்படுகிறது.

ரேடியன்: வட்டவில் வட்ட மையத்தில் ஒரு தளக் கோணத்தை உருவாக்குகிறது. வட்டவில்லின் நீளத்தை, வட்டத்தின் ஆரத்தால் வகுக்கக்கிடைக்கும் மதிப்பே ரேடியன் ஆகும். வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நீளமுள்ள வட்டவில், வட்டமையத்தில் ஏற்படுத்தும் கோணம் ஒரு ரேடியன் ஆகும். இது படம் 2.44 யில் காட்டப்படுள்ளது.


கோணத்தின் அளவினை அளப்பதற்குப் பயன்படும் ஒரு அலகு டிகிரி எனப்படும். இது கோணத் திசையினைக் காட்டுகிறது. ஒரு கோணம், வட்டத்தை ஒரு முழு சுற்று சுற்றும் போது அதன் மொத்தக் கோணம் 360°. எனவே ஒரு முழு வட்டம் 360° யைப்பெற்றுள்ளது. ஒரு முழுவட்டம் என்பது 2π ரேடியனை குறிக்கிறது.



தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் டிகிரி மற்றும் ரேடியன்கள் 

எடுத்துக்காட்டு 2.39

படத்தில் உள்ள வட்டச்சக்கரத்தின் அருகருகே உள்ள இரண்டு ஆரச்சட்டங்களுக்கு (SPOKES) இடையே உள்ள கோணம் θ வை காண்க. உங்களின் விடையை ரேடியன் மற்றும் டிகிரி இரண்டிலும் குறிப்பிடவும்.


தீர்வு

முழுச்சக்கரம் மையத்தில் 2 π ரேடியன்களை ஏற்படுத்தும் சக்கரம் 12 பிரிவுகளாகப் (வட்டவில்) பிரிக்கப்பட்டுள்ளது. 

எனவே, ஒரு பிரிவு ஏற்படுத்தும் கோணம்


ஃ எனவே, 2 ஆரச்சட்டங்களுக்கு இடைப்பட்ட கோணம் = 30°

இயற்பியல் மற்றும் கணிதத்தில் π என்ற எண் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு பகா எண். இருப்பினும் π யினைத் தோராயமாக 3.14. அல்லது 22 / 7 என கணக்கீடுகளில் நாம் பயன்படுத்துகிறோம். இந்த இரண்டுமே π இன் உண்மையான மதிப்பு இல்லை அது ஒரு தோராயமே.


Tags : with Solved Example Problems தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்.
11th Physics : UNIT 2 : Kinematics : Introduction to Degrees and Radians with Solved Example Problems in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல் : டிகிரி மற்றும் ரேடியன்கள் அறிமுகம் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்