அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் | 8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments
பொருளியல்
அலகு - 1
பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் 

"கற்றல் படைப்பாற்றலை ஏற்படுத்தும், படைப்பாற்றல் சிந்தனையைத்
தூண்டும், 
சிந்தனை அறிவாற்றலை அளிக்கும், அறிவாற்றல் உங்களை சிறந்தவராக்கும்"
                                                -ஏ.பி.ஜெ.
அப்துல்கலாம்
கற்றலின்
நோக்கங்கள்
>பணத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளுதல் 
>மதிப்பு, இயல்பு, செயல்பாடு மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை
பற்றி அறிந்து கொள்ளுதல் 
>சேமிப்பு மற்றும் முதலீடு பற்றி புரிந்து கொள்ளுதல் 
>கருப்பு பணம் பற்றி தெரிந்துக் கொள்ளுதல்
அறிமுகம்
பணம்
ஒரு கண்கவர் பொருள் மட்டுமல்லாமல், ஆர்வத்தை தூண்டக்கூடியதாகும். இது மாணவர்களுக்கு
பிடித்தமான முக்கிய கூறு. பணத்தின் வரலாறு மற்றும் பணத்தை பல்வேறு காலங்களில் எவ்வாறு
வெவ்வேறு வகைகளாகப் பயன்படுத்தப்பட்ட முறை ஒரு சுவாரஸ்யமான கதை. நவீன வடிவங்களில் பணம்,
வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
பணம்
ஒரு அடிப்படை கண்டுபிடிப்பு. அன்றாட பரிவர்த்தனைகளுக்கு இது எளிதானது. மதிப்பு மிக்க
பண்டங்கள் மற்றும் பணிகளை மதிப்பிடவும், செல்வத்தை சேமித்து வைத்து எதிர்கால வாணிபத்திற்கும்
வழிவகுக்கிறது. "பொது ஏற்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும்போது
அதற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எதனையும் பணம் என்று
கூறலாம் - இராபர்ட்சன்.