அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பணத்தின் மதிப்பு | 8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments
பணத்தின்
மதிப்பு
பணத்தின்
மதிப்பு என்பது பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும்.
ஆகையால், இது பண்ட மற்றும் பணிகளின் விலை அளவை சார்ந்திருக்கும். ஆனால் பணத்தின் மதிப்பும்
விலையின் அளவும் எதிர்மறை தொடர்புடையது. பணத்தின் மதிப்பு இரு வகைகள்
1. பணத்தின்
அக மதிப்பு
2. பணத்தின்
புற மதிப்பு
பணத்தின்
அக மதிப்பு என்பது உள் நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளின் வாங்கும் சக்தியை குறிக்கும்.
பணத்தின் புற மதிப்பு என்பது வெளி நாட்டிலுள்ள பண்ட பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும்.
செயல்பாடு 3
•மாணவர்கள் பணத்தின் மதிப்பு பற்றி தெரிந்து கொள்ளுதல்.
•ஒரு கடை அல்லது சந்தை போன்று உங்கள் வகுப்பறையை அமைத்தல்.
•மாணவர்கள் கடையிலிருந்து சில பொருட்களை வாங்குமாறு கூறுதல். சந்தை
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
•ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து பணத்தின் மதிப்பைப் பற்றி
விவாதித்தல்
உங்களுக்குத் தெரியுமா?
பணத்தின் (ரூபாய்) குறியீடு இந்திய ரூபாய் குறியீடு தமிழ்நாட்டில் உள்ள
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரு. உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது
ஜூலை 15, 2010 அன்று இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.