Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | வங்கியில் சேமிப்பு மற்றும் முதலீடுகள்

அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வங்கியில் சேமிப்பு மற்றும் முதலீடுகள் | 8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments

   Posted On :  15.06.2023 12:27 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

வங்கியில் சேமிப்பு மற்றும் முதலீடுகள்

வருவாயில் நடப்பு நுகர்வுக்கு பயன்படாத ஒரு பகுதி சேமிப்பு என வரையறுக்கப்படுகிறது. அவை தற்போதைய நுகர்வுக்காக பயன்படுத்தப்படாமல் எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கி வைக்கப்படுகிறது.

வங்கியில் சேமிப்பு மற்றும் முதலீடுகள்


சேமிப்புகள்

வருவாயில் நடப்பு நுகர்வுக்கு பயன்படாத ஒரு பகுதி சேமிப்பு என வரையறுக்கப்படுகிறது. அவை தற்போதைய நுகர்வுக்காக பயன்படுத்தப்படாமல் எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கி வைக்கப்படுகிறது. ஒரு நபர் பணத்தை சேமிக்க பல வழிகள் உள்ளன. வங்கியில் வெவ்வேறு வகையான கணக்குகளின் மூலம் பணத்தை சேமிக்கலாம்.


1. மாணவர் சேமிப்பு கணக்கு

சில வங்கிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சேமிப்புக் கணக்கினை துவங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்தி வழங்குகின்றன. மேலும், இந்த சேமிப்புக் கணக்கில் பூஜ்ய இருப்பினை கொள்வது இதன் முக்கிய அம்சமாகும்.

2. சேமிப்பு வைப்பு

வாடிக்கையாளர்கள் தன்னுடைய நடப்பு வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க ஆரம்பிக்கும் கணக்கிற்கு சேமிப்பு கணக்கு எனப்படும். நுகர்வோர், பணம் தேவைப்படும் போது அவர்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வைப்பு தொகைக்கு வங்கி பெயரளவு வட்டி அளிக்கிறது.

3. நடப்பு கணக்கு வைப்பு

நடப்பு கணக்குகள் பொதுவாக வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அதிகாரிகளால் ஆரம்பிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது.

4. நிரந்தர வைப்பு

நிரந்தர வைப்பு கணக்கு என்பது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு பாதுகாப்பும், நிலையான வருவாயும், விரும்புவார்கள். நிரந்தர வைப்பை காலவைப்பு எனவும் அழைக்கலாம். அவை குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வங்கியில் இருக்கும்.


சேமிப்பின் நன்மைகள்

• நீங்கள் விரைவில் நிதி ரீதியாக தனித்து இருக்கலாம்.

•நீங்கள் எந்த எதிர்பாராத செலவுகளைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை .

•நீங்கள் உங்கள் வேலையை இழந்தால், எதிர்காலத்தில் நிதியுதவியாக இருக்கும்.

• உங்கள் சூழ்நிலை மாறினாலும், நீங்கள் தயாராக இருப்பீர்கள்.

•நீங்கள் பணி ஓய்வில் வசதியாக இருப்பீர்கள்.

•இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு.

 

மாணவர்களுக்கிடையே சேமிப்பினை ஊக்குவித்தல்

•வரி மற்றும் கணக்கியல் பற்றி கற்று கொடுத்தல்.

•வளர்ந்து வரும் பணம் சார்ந்த முடிவுகளில் ஈடுபடுத்துதல்.

•உதவித்தொகை விண்ணப்பிக்க ஊக்கப்படுத்துதல்.

•வரவு செலவு திட்டம் போடவும், மாணவ கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் உதவி செய்தல்.

•தனிப்பட்ட சேமிப்புக்கு கற்றுக் கொடுத்தல்.

•மாணவர்களை சஞ்சாயிகா திட்டத்தை ஆரம்பிக்க ஊக்குவித்தல்.

 

முதலீடுகள்

பல்வேறு முறைகளில் மூலதனத்தை பயன்படுத்தும்  முறையை முதலீடுகள் என அழைக்கின்றோம். அதாவது பணம், நேரம், முயற்சிகள் அல்லது பிற மூலங்களில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி முதலீடு செய்து அதற்கு மாற்றாக எதிர்காலத்தில் வருமானமாக திரும்பப்பெறுவதாகும்.


பல்வேறு முதலீட்டுக் கருவிகளில் முதலீடு செய்யலாம். அவைகள்

1. பங்கு வர்த்தகம்

2. பத்திரங்கள்

3. பரஸ்பர நிதி

4. காப்பீடு

5. ஆண்டுத்தொகை

6. வைப்பு கணக்கு அல்லது வேறு பல பத்திரங்கள் அல்லது சொத்துக்கள்.

எந்த ஒரு முதலீட்டுக் கருவிகளிலும் முதலீடு செய்யும் பொழுது சில இடர்பாடுகள் ஏற்பட்டு பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டாலும், அதே முதலீட்டின் மூலம் அதிகப் பணத்தை மீளவும் பெறமுடியும் என்பது உண்மையேயாகும். முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் இயல்புடையது.

உங்களுக்குத் தெரியுமா?

2016 நவம்பர் 8ஆம் தேதி இந்தியாவில் இந்திய அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக அனைத்து 500 மற்றும் 1000 நோட்டுக்களை பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது.


Tags : Chapter 1 | Economics | 8th Social Science அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments : Savings in Banks and Investments Chapter 1 | Economics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் : வங்கியில் சேமிப்பு மற்றும் முதலீடுகள் - அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்