அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பணத்தின் தன்மை | 8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments

   Posted On :  15.06.2023 12:21 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

பணத்தின் தன்மை

பணத்தின் பொருள் மற்றும் தன்மை குறித்து அதிகப்படியான சர்ச்சைகள் மற்றும் குழப்பங்கள் நிலவுகின்றன. ஸ்டோவ்ஸ்கி (Scitovsky) வின் கருத்து படி "பணம்" என்பது ஒரு கடினமான கருத்தாகும்.

பணத்தின் தன்மை

பணத்தின் பொருள் மற்றும் தன்மை குறித்து அதிகப்படியான சர்ச்சைகள் மற்றும் குழப்பங்கள் நிலவுகின்றன. ஸ்டோவ்ஸ்கி (Scitovsky) வின் கருத்து படி "பணம்" என்பது ஒரு கடினமான கருத்தாகும். ஏனெனில் அது வேறுபட்ட துறைகளில் ஒன்றல்ல, மூன்று பணிகளை குறிப்பிடுகிறது. அவை, ஒவ்வொன்றும் கணக்கீட்டின் அலகு, மதிப்பின் அளவுகோல், மற்றும் மதிப்பின் நிலைகலன்களை குறிக்கிறது. சர்ஜான் ஹிக்ஸ் கூற்றுப்படி, "பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது. எதுவெல்லாம் பணமாக கருதப்படுகிறதோ அவை பணமாக பயன்படுத்தப்படுகிறது" பேராசிரியர், வாக்கர் “எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்" என கூறுகிறார்.

பணத்தின் வரையறைகள் அனைத்தும் அதனுடைய செயல்பாட்டைப் பொறுத்தே வரையறுக்கப்பட்டுள்ளது. சில வல்லுநர்கள், "பணமாக பிரகடனம் செய்யப்படும் எவையும் பணமாகும்" என்று பணத்தை சட்டப்பூர்வமான சொற்களால் வரையறுத்துள்ளனர். பணம் அனைவரிடமும் பொதுவான ஏற்புத்திறனை பெற்றுள்ளது மற்றும் அவை கடன்களை திருப்பித் தருவதற்கான சட்டபூர்வமான அதிகாரத்தையும் கொண்டுள்ளது. ஆனால் சட்ட ரீதியான ஒப்பந்தப் பணத்தை செலுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளை விற்க மறுத்தால், சட்ட ரீதியான பணத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மற்றொன்று, கடன்களை தீர்ப்பதற்கு பணத்தை போல சட்ட பூர்வமாக வரையறுக்கப்படாத வேறு சிலவற்றையும் மக்கள் பணமாக ஏற்றுக்கொள்கின்றனர். ஏனெனில் பணம் சுதந்திரமாக பரவக்கூடியதாகும்.

Tags : Chapter 1 | Economics | 8th Social Science அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments : Nature of Money Chapter 1 | Economics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் : பணத்தின் தன்மை - அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்