அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - கருப்பு பணம் | 8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments

   Posted On :  15.06.2023 12:28 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

கருப்பு பணம்

கருப்புப் பணம் என்பது கணக்கில் கொண்டு வராத பணத்தின் ஒரு வடிவமாகும். இது பெரும்பாலும் வணிக மக்களால் தோற்றுவிக்கப்படுகிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் ஈட்டிய வருமானத்தைக் கணக்கில் காட்டுவதில்லை. வரி ஏய்ப்பு செய்வதற்காக வருமானத்தின் ஒரு பகுதியை மட்டுமே கணக்கில் காட்டுகின்றனர்.

கருப்பு பணம்

கருப்புப் பணம் என்பது கணக்கில் கொண்டு வராத பணத்தின் ஒரு வடிவமாகும். இது பெரும்பாலும் வணிக மக்களால் தோற்றுவிக்கப்படுகிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் ஈட்டிய வருமானத்தைக் கணக்கில் காட்டுவதில்லை. வரி ஏய்ப்பு செய்வதற்காக வருமானத்தின் ஒரு பகுதியை மட்டுமே கணக்கில் காட்டுகின்றனர்.

குற்றவாளிகள், கடத்தல்காரர்கள், பதுக்குபவர்கள், வரி ஏய்ப்பவர்கள் மற்றும் சமுதாயத்தில் மற்ற சமூக விரோதிகள் மூலம் கருப்பு பணம் சேர்க்கப்படுகிறது. இந்தியாவில் சட்ட விரோதமாக சந்தையில் கருப்பு பணம் சம்பாதித்து அந்த வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை. வெளிநாட்டு வங்கியில் இந்தியர்கள் வைப்புகளாக வைத்துள்ள மொத்த கருப்புப்பணத்தின் இருப்பைக் கண்டறிய முடியாது. நாட்டில் கருப்பு பணம் அதிகரித்து வருவதற்கான அடிப்படை காரணம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை இங்கு வழங்கப்படுவதில்லை.


 

பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள்

1. பொருளாதாரத்தில் ஒருபுறம் வளர்ச்சியும் மறுபுறம் வளர்ச்சியற்ற நிலை ஏற்பட்டு இரட்டை பொருளாதாரத்தை உருவாக்கும்.

2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது

3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு

4. சமத்துவம் வலுவிழத்தல்

5. பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல்

6. ஆடம்பர நுகர்வு செலவு

7. உற்பத்தி முறையில் விலகல்

8. பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல்

9. சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள்

10. உற்பத்தி மீதான விளைவுகள்

 

கருப்பு பணத்திற்கு எதிராக சமீபத்திய நடவடிக்கைகள்

1.இந்தியா மற்றும் பிற நாடுகளின் அழுத்தத்தினால் சுவிட்சர்லாந்து உள்ளூர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி சுவிஸ் வங்கி வெளிநாடுகளுக்கு உதவுகிறது.

2.உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் கருப்பு பணத்தை கண்காணிக்க சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டது.

3. பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது.

 

கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு

1. பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம் 2002.

2. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்.

3. ஊழல் தடுப்புச் சட்டம் 1988.

4. வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா (வரி விதித்தல்)-2015.

5. பினாமி பரிவர்த்த னை தடுப்புச் சட்டம் 1988, 2016இல் திருத்தப்பட்டது.

6. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016.
Tags : Chapter 1 | Economics | 8th Social Science அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments : Black Money Chapter 1 | Economics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் : கருப்பு பணம் - அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்