Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | பணத்தின் பரிணாம வளர்ச்சி

அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பணத்தின் பரிணாம வளர்ச்சி | 8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments

   Posted On :  15.06.2023 12:20 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

பணத்தின் பரிணாம வளர்ச்சி

பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான "மொனேட்டா ஜுனோ" விலிருந்து பெறப்பட்டது. இது ரோமின் பெண் கடவுள் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணமாகும். இந்தியாவின் ரூபாய் என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

பணத்தின் பரிணாம வளர்ச்சி

பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான "மொனேட்டா ஜுனோ" விலிருந்து பெறப்பட்டது. இது ரோமின் பெண் கடவுள் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணமாகும். இந்தியாவின் ரூபாய் என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ரூபியா என்றால் வெள்ளி நாணயம் என்று பொருள். இன்று நாம் காகித பணமாகவும், நாணயங்களாகவும் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பரிணாம் நிலைகள் ஒரே இரவில் நடைபெறவில்லை. இந்த நிலைகளை அடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது. பணத்தின் பரிணாமம் பல நிலைகளை கடந்துள்ளது. ஆரம்ப மற்றும் பழங்கால நிலைதான் பண்டமாற்று முறையாகும்.


 

பண்டமாற்று முறை

பண்டைய காலத்தில் பணம் பயன்படுத்தப்படாமல் பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை என்றனர். பண்டமாற்று முறை ஒரு பழைய பரிமாற்ற முறையாகும். பணம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக இந்த முறை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது. மக்கள் பண்டங்கள் மற்றும் பணிகளை மற்றொரு பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். பண்டமாற்று பொருட்களின் மதிப்புப் பற்றி மற்ற குழுக்களுடன் விவாதம் செய்தனர். பண்டமாற்று செயலில் பணத்தின் ஈடுபாடு இல்லாமல் இருப்பது ஒரு நன்மையாகும்.

பண்டமாற்று முறையில் சில குறைபாடுகளாவன

1. இருமுகத் தேவை பொருத்தமின்மை

2. பொதுவான மதிப்பின் அளவுகோல்

3. பொருட்களின் பகுபடாமை

4. செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்

பணத்தின் பரிணாம வளர்ச்சியின் பல நிலைகள் பின்வருமாறு

பண்டப் பணம், உலோக பணம், காகித பணம், கடன் பணம், நிகர் பணம் போன்றவைகள் சமீப கால பணத்தின் வடிவங்கள் ஆகும். காலம், இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பணம் பல நிலைகளில் உருவானது.


பண்டப் பணம்

பொதுவாக நாகரீகத்தின் தொடக்க காலத்தில் அனைவராலும் ஏற்கக்கூடிய எந்த பண்டம் பொதுவாக தேவைப்படுகிறதோ அந்தப் பண்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை பணமாக பயன்படுத்தினர். உரோமம், தோல், உப்பு, அரிசி, கோதுமை, பாத்திரங்கள், ஆயுதங்கள் போன்ற பண்டங்கள் பொதுவாக பணமாக பயன்படுத்தினர். அந்த வகையான பண்டங்களைக் கொடுத்து பண்டங்களை வாங்குதலை "பண்டமாற்று முறை" என அழைத்தனர்.


உலோக பணத்தின் வரலாறு

தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற விலை மதிப்பற்ற உலோகங்கள் உலோக பணமாக பயன்படுத்தப்பட்டன. உலோகத்தின் நிலையான எடை மற்றும் துல்லியம் குறிப்பாக தங்கம், வெள்ளி ஆகியவை முத்திரையுடன் பரிமாற்ற கருவியாக செய்யல்பட்டது. அவைகள் வெவ்வேறு பிரிவுகளாக, எளிதாக பிரிப்பதற்கும், எடுத்து செல்வதற்கும், செலுத்துவதற்கும் வசதியாக இருந்தன.

பண்டைய வரலாற்று ஆசிரியரான ஹெரோடோடஸ் கி.மு. (பொ.ஆ.மு) 8ஆம் நூற்றாண்டில் லிடியாவின் பேரரசர் மிடாஸ் உலோக நாணயத்தை கண்டு பிடித்தார். ஆனால் லிடியாவை விட பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.

உலக நாணயங்கள் வெளியீட்டார்களில் சீனா மற்றும் மத்திய கிழக்கு லிடியாவுடன் பண்டைய இந்தியாவும் உள்ளன. இந்தியாவில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் முதன் முறையாக மஹாஜனபதங்கள் ஆட்சியில் பூரணாஸ், கர்ஷபணம், பனாஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.

தங்கம், வெள்ளி, தாமிரம் அல்லது ஈயம் போன்ற நாணயங்களை மௌரியர்கள் துளையிட்டு வெளியிட்டனர். இந்திய கிரேக்க குஷாண அரசர்கள் கிரேக்க மரபுப்படி சித்திரங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை அறிமுகப்படுத்தினர். 12 வது நூற்றாண்டில் டெல்லி துருக்கி சுல்தான்கள் தங்கள் நாணயங்களில் இந்திய அரசர்களின் உருவத்தை நீக்கி இஸ்லாமிய எழுத்துக்களை பொறித்து வெளிட்டனர். தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்களை டாங்கா என்றும், மதிப்பு குறைந்த நாணயங்களை ஜிட்டால் என்றும் அழைத்தனர்.

1526 யில் இருந்த முகலாய சாம்ராஜ்யம் முழு சாம்ராஜ்யத்திற்கான பணவியல் முறையை ஒருங்கிணைத்தும், இந்த சகாப்த பரிணாம பண வளர்ச்சியில் செர்ஷா சூரி, ஹுமாயூனை தோற்கடித்து ஆட்சியில் இருந்த போது 178 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார். அது ரூபியா என அழைக்கப்பட்டது மற்றும் 40 தாமிர துண்டுகள் அல்லது பைசா போன்றவற்றை பயன்படுத்தினர். முகலாய காலம் முழுவதும் வெள்ளி நாணயம் பயன்பாட்டில் இருந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1600ஆம் ஆண்டில் முகலாய நாணயத்தை பிரபலப்படுத்தியது. ஆனால் 1717இல் முகலாய பேரரசர் பாருக்ஷாயர், ஆங்கிலேயர்களுக்கு முகலாய பண நாணயத்தை பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்தனர். ஆங்கில தங்க நாணயங்கள் கரோலினா என்றும், வெள்ளி நாணயங்களை ஏஞ்ஜேலினா என்றும், செம்பு நாணயங்களை கப்ரூன் என்றும் மற்றும் வெண்கல நாணயத்தை டின்னி எனவும் அழைத்தனர்.


உப்பு, அரிசி, கோதுமை, பாத்திரங்கள், ஆயுதங்கள் போன்ற பண்டங்கள் பொதுவாக பணமாக பயன்படுத்தினர். அந்த வகையான பண்டங்களைக் கொடுத்து பண்டங்களை வாங்குதலை "பண்டமாற்று முறை" என அழைத்தனர். உலோக பணம்

உலோக பணம்

மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் பண்ட பணம், உலோக பணமாக மாறியது. தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களை எளிமையாக கையாளப்பட்டதால் அவற்றின் அளவு எளிதாக அறிந்துக் கொள்ளப்பட்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும் பகுதியில், இவ்வகையான பணம் முக்கிய பங்கு வகித்தது.

 

காகித பணம்


தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது சிரமமாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது. ஆகையால், காகித பணம் கண்டுபிடிப்பு பணத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிலையாக கருதப்பட்டது. தங்கத்தை சேமிப்பதன் அடிப்படையில் ஆரம்பித்த காகித பணத்தின் வளர்ச்சி அந்த சேமிப்புக்கு பொற்கொல்லர்கள் இரசீதுகளை வழங்கினர். பொற்கொல்லர்களின் இரசீது பணத்தின் பதிலியாகவும் மேலும் காகித பணமாகவும் மாறியது. காகிதப் பணத்தை கட்டுபடுத்துவதும், ஒழுங்குப்படுத்துவதும் அந்நாட்டின் மைய வங்கியாகும். இந்தியாவில் 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) காகிதப் பணத்தை அச்சிடுதல், ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்கிறது. தற்போது பணத்தின் பெரும்பகுதி முக்கியமாக செலாவணிப் பணம் அல்லது காகிதப் பணம் இந்தியரிசர்வ்வங்கியால் வெளியிடப்பட்டதாகும்.




கடன் பணம் அல்லது வங்கிப் பணம்

காகித பணமும், கடன் பணமும் கிட்டதட்ட ஒரே நேரத்தில்  வளர்ந்தது. மக்கள் தங்கள் பணத்தின் ஒரு பகுதியை வங்கியில் வைப்பு தொகையாக வைத்து அந்த தொகையை வசதியாக காசோலை மூலம் திரும்ப பெறலாம். காசோலை கடன் பணம் அல்லது வங்கிப் பணம் என்றும் அழைக்கப்படுகிறது. காசோலை என்பது பணத்தைக் குறிப்பதல்ல. ஆனால் பணத்தின் பணிகளை மேற்கொள்ளும்.


 

நிகர் பணம்

உண்டியல், கருவூலக பட்டியல், பத்திரம், கடன் பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் பண பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகும்.

 

பணத்தின் சமீபத்திய வடிவங்கள்

நெகிழிப் பணம்

கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் சமீபத்திய நெகிழிப் பணமாகும். பணமில்லா பரிவர்த்தனை இதன் நோக்கமாகும்.


 

மின்னனு பணம்

மின்னனுப் பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும்.

 


நிகழ்நிலை வங்கி (இணைய வங்கி)

நிகழ்நிலை வங்கி அல்லது இணைய வங்கி என்பது வாடிக்கையாளர் அல்லது பிற நிதி நிறுவனங்கள் வலைதளத்தின் மூலம் ஒரு பரந்த நிதிப் பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னனு முறையாகும்.


மின் வங்கி

மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) என்றும் அழைக்கலாம். காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியைமாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது.



செயல்பாடு 2

•பணம் போன்ற பல்வேறு நிலைகளிலுள்ள மாதிரி பணம் குறிப்பாக பண்டப் பணம், உலோக பணம், நெகிழிப் பணம் ஆகியவற்றை தயார் செய்யவும் (பண்டமாற்று முறையும் சேர்த்து).

•ஒவ்வொரு குழு மாணவர்களுக்கும் மாதிரிகள் கொடுக்கவும்.

•ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பல்வேறு பணத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளைப் பற்றி விவாதித்தல்.
Tags : Chapter 1 | Economics | 8th Social Science அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Economics : Chapter 1 : Money, Savings and Investments : Evolution of Money Chapter 1 | Economics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் : பணத்தின் பரிணாம வளர்ச்சி - அலகு 1 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 1 : பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்