Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | நிக்கோலோ மாக்கியவல்லி (Niccolo Machiavelli) (பொ.ஆ.1469-பொ.ஆ.1527)
   Posted On :  03.10.2023 09:30 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை

நிக்கோலோ மாக்கியவல்லி (Niccolo Machiavelli) (பொ.ஆ.1469-பொ.ஆ.1527)

வாழ்வும் காலமும் - மனிதனின் தன்மை பற்றிய மாக்கியவல்லியின் கருத்துக்கள் (Machiavelli on Human Nature) - அரசியல் மற்றும் நீதிமுறைமையைப் பிரித்தல் - அரசியல் மற்றும் மதத்தினை பிரிப்பது பற்றி நிக்கோலோ மாக்கியவல்லி - மாக்கியவல்லி (லிவி மீதான உரைக்கோவை- Discourses on Livy) - மாக்கியவல்லியின் ஆட்சிக்கலை (Machiavelli's Statecraft) - மதிப்பீடு

நிக்கோலோ மாக்கியவல்லி (Niccolo Machiavelli) 

(பொ..1469-பொ..1527)



கற்றலின் நோக்கங்கள்

நிக்கோலோ மாக்கியவல்லியின் அரசியல் சிந்தனையைப் புரிந்துகொள்ளுதல் 

இது ஒத்த கருத்துடைய சிந்தனையாளர்களுடன் ஒப்பிட உதவுகிறது 

அரசியல், மதம், அரசு, இளவரசனுக்கான அறிவுரை பற்றிய மாக்கியவல்லியின் கருத்துக்களை அறிந்து கொள்ளுதல்


வாழ்வும் காலமும்

இத்தாலிய பண்பாட்டின் மையமான ஃபிளாரன்சில் மாக்கியவல்லி பிறந்தார். பிற பகுதிகளை விட அங்கு ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இவர் வழக்கறிஞரான பெர்னார்டோ டி நிக்கோலோ மாக்கியவல்லி (Bernardo di Niccolo Machiavelli) மற்றும் அவரது துணைவியரான ஸ்டெஃ பானோ நெல்லி பார்த்தோ லோமியா (Bartolonea of Stefano Nelli) ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். மறுமலர்ச்சின் தாக்கத்தின் அடிப்படையில் சிறப்பான மனிதநேயக் கல்வியை இவர் பெற்றுள்ளதை அவரது எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. இவர் பொ..1494-ல் மெடிசி (Medici) வீழ்ந்த பிறகு குடியரசு அரசாங்கத்தின் பணியில் நுழைந்தார். பொ.. 1498 முதல் 1512 வரை வேந்தர் பணியகத்தின் செயலராக இருந்தார். இப்பதவி தூதாண்மை, இராணுவம் மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பான முக்கியப் பதவியாகும். கி.மு 1512-ல் மெடிசி மீண்டும் நிறுவப்பட்டதன் விளைவாக மாக்கியவல்லி தனது பதவியை இழந்து சில காலத்திற்கு சிறைப்படுத்தப்பட்டார். இதன் பின்னர் அவர் இலக்கியப் பாதையில் பயணித்தார். கி.மு 1513-ல் லோரென்சோ டி மெடிசிக்காக (Lorenzo de Medici) 'இளவரசன்' (The Prince) என்னும் தனி வரைவு நூலை எழுதினார். இக்காலகட்டத்திலேயே அவர் தனது அடுத்த முக்கியப் படைப்பான டைட்டஸ் லிவியசின் முதல் பத்து புத்தகங்களுக்கான உரைக்கோவை (சுருங்கக்கூறின் லிவி மீதான உரைக்கோவை - Discourses on Liry) என்னும் நூலினை 1517-ல் நிறைவுசெய்தார். இருப்பினும் இவ்விரு படைப்புகளும் அவரது மறைவிற்குப் பின்னர் 1531-ல் வெளியிடப்பட்டன. மாக்கியவல்லி மேலும் சில சிறிய இலக்கிய படைப்புகளை உருவாக்கினாலும் ஓர் அரசியல் சிந்தனையாளராக அவரது மதிப்பு இவ்விரு புத்தகங்களின் அடிப்படையிலேயே நீடிக்கிறது.


மனிதனின் தன்மை பற்றிய மாக்கியவல்லியின் கருத்துக்கள் (Machiavelli on Human Nature)

மாக்கியவல்லியின் அரசாங்கம் பற்றிய கோட்பாடானது அவரது மனிதனின் தன்மை பற்றிய கருத்தாக்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவரும் ஹாப்சைப் போன்றே மனிதனின் தன்மை மீது அவநம்பிக்கை கொண்டிருந்தார். மனிதர்கள் இயற்கையில் முழுமையான சுயநலம் கொண்டிருப்பதுடன் அவர்களின் வாழ்விலும் சுயநல விருப்பங்களால் உந்தப்படுகின்றனர் என நம்புகிறார். இளவரசன் நூலின் ஓரிடத்தில் மனிதன் நன்றி மறந்தவன், நிலையற்றவன், ஏமாற்றுபவன், கோழைத்தனம் மற்றும் கஞ்சத்தனமுள்ளவன் என கூறுகிறார். மன்னரானவர் மக்களால் விரும்பப்படுவதைக் காட்டிலும் அவரைக் கண்டு மக்கள் அஞ்சுவதையே இலக்காக்க வேண்டும் என பரிந்துரைக்கிறார். மாக்கியவல்லியைப் பொறுத்தவரை அன்பு என்பது ஓர் கடப்பாட்டுப் பிணையாகும். மனிதர்கள் அடிப்படையில் சுயநலமாக இருப்பதால் தங்களின் தேவைக்குத் தக்கவாறு அதனை ஒவ்வொரு சமயத்திலும் மீறுவர்

ஆனால் பயம் என்பது அக்காரணத்திற்காகவே அவர்களைக் காலவரையறையின்றி கட்டுப்படுத்தி வைக்கிறது. மனிதர்கள் தோற்றத்தின் அடிப்படையிலேயே விஷயங்களைத் தீர்மானிக்கின்றனர் என்பதால் இதனை ஆட்சியாளர் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு செயல்படவேண்டும். அவரைப் பொறுத்தவரை மனிதர்கள் பலவீனமானவர்களாகவும், அறியாமையில் உள்ளதுடன், அடிப்படையில் கெட்டவர்களாகவும், தேவையின் அடிப்படையில் நல்லவர்களாகவும் உள்ளனர். இதனால் ஆட்சியாளர் தனது மன்ற உறுப்பினர்களை எப்பொழுதும் நம்பாமல் தனது சுய முடிவினைப் பயன்படுத்துமாறு எச்சரிக்கிறார்.

மனிதர்கள் முடிவற்ற விருப்பமுள்ளவர்கள் என்றும் அதில் மிக முக்கியமான விருப்பமாக தனிநபர் சொத்து உள்ளது எனவும் கூறுகிறார். அவர் பொருள்முதல்வாத தனிமனிதத்துவதத்தினை சுதந்திரம் மற்றும் சுய அரசாங்கத்தின் மீதான விருப்பத்தின் விளக்கமாக கூறுகிறார். அவர் தனது உரைக்கோவையில் (The Discourses) மனிதனின் தன்மை மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். மனிதனின் அடிப்படை விருப்பமாக பொருளாதார ஆதாயமே உள்ளது என்பதைப் பேணுகிறார். மக்களின் இந்நோக்கமே அவர்களை குடியரசினை விரும்பவும், முடியாட்சியை வெறுக்கவும் வைக்கிறது என்கிறார். குடியரசிலான அரசாங்கத்தின் கீழ் மக்கள் அதிகமான பொருளாதார ஆதாயங்களை பெறும் வாய்ப்பு அதிகமாகும். இது முடியாட்சியில் சாத்தியமாகாததற்குக் காரணம் யாதெனில் இளவரசன் அனைத்து ஆதாயங்கள் மற்றும் லாபங்களைத் தனக்கே எடுத்துக்கொள்வதாகும். ஒர் சுதந்திரமான தேசம் விரும்பப்படுவதற்கான காரணம் என்னவெனில் அச்சுதந்திர தேசத்திலேயே மக்களின் வளம் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.


அரசியல் மற்றும் நீதிமுறைமையைப் பிரித்தல்

கிரேக்க அரசியல் சிந்தனையில் அரசியலின் அடிப்படையாக நன்னெறி கருதப்படுகிறது. ஆனால் மாக்கியவல்லி இம்மரபார்ந்த லட்சியத்திலிருந்து குறிப்பிடத்தகுந்த அளவில் மாறுபட்டிருக்கிறார். அரசியல் என்பது அதன் சுதந்திரமான சுயமதிப்பளவின் அடிப்படையிலானதாகும். ஆகவே அதனை மரபார்ந்த நன்னெறி மதிப்பளவின் கீழ் வரையறை செய்ய முடியாது என்கிறார். மேலும் அவர் அரசியல் மற்றும் நன்னெறியினைப் பிரிப்பதனை வலியுறுத்துகிறார். அவரைப் பொறுத்தவரையில், ஆட்சியாளர் ஒழுங்கானவராகவும், நேர்மையானராகவும் தனது வார்த்தைப்படி நடப்பவராகவும் இருக்கவேண்டும். உண்மையில் எந்தவொரு ஆட்சியாளரும் இத்தகைய தகுதிகளுடன் இருப்பதில்லை. கெட்ட எண்ணமுள்ள மக்களை ஆள்வதற்காக ஆட்சியாளருக்கு இத்தகுதிகள் உகந்தவையல்ல. மேலும் நீதிநெறி கடப்பாடுகளற்ற அரசைப் பாதுகாப்பதில் இளவரசன் கவனம் செலுத்தவேண்டும். 'முடிவுகளே வழிமுறைகளைத் தீர்மானிக்கின்றன, என்பதனுடன் மாக்கியவல்லி திருப்தியடையவில்லை. மக்கள் தீர்ப்பின் அடிப்படையிலேயே ஆட்சியாளரின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது'. நம்பத்தகாத வழிமுறைகளைப் பின்பற்றினாலும் இறுதியில் வெற்றியடைந்தால் இளவரசன் மன்னிக்கப்படுகிறார். அரசியல் செயல்பாடுகளுக்கு அவசியப்படும்போது மரபார்ந்த நீதிமுறைமையை ஒதுக்கி வைத்துவிட்டு வெற்றிகரமான அரசியலுக்கு மேற்செல்ல வேண்டும்.

குறிப்பிடத்தக்க மேற்கோள் 

ஓர் இளவரசன் அரசினைக் கைப்பற்றி நிர்வகிக்கும் பணியினை செய்ய முற்படுவதால் அவரது முறைகள் எப்பொழுதுமே மேன்மையானதாகக் கருதப்படுவதுடன் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறார்.


உங்களுக்குத் தெரியுமா?

மாக்கியவல்லி (இளவரசன்)

மாக்கியவல்லியின் முறைமை (Machiavelli's Method)

மாக்கியவல்லியைப் பொறுத்தவரை வரலாற்று முறையே அரசியல் அறிவியலைக் கற்கும் சரியான முறையாகும். இவர் மனித விருப்பங்கள் மற்றும் பேரார்வம் ஆகியவை எப்பொழுதும் ஒரே மாதிரியானவை எனக்கூறுகிறார். வாழ்விலுள்ள சம்பவங்களை ஒப்பிடும் போது மனித இனம் ஒரே மாதிரியான பரிகாரங்களைத் தேட முனைவதுடன் ஒரே மாதிரியான நடத்தையை மீண்டும் கொண்டிருக்கின்றன எனக்கூறுகிறார். ஆகவே கடந்த காலத்தைப் படித்தறிவது என்பது தற்காலத்தைப் புரிந்து கொள்வதுடன் எதிர்காலத்திற்கான முன்கணித்தலை மேற்கொள்வதை எளிமையாக்குகிறது என்கிறார். அவர் அரசியலை வரலாறு மற்றும் மெய்மைவாத அடிப்படையில் கற்பதுடன் குறிப்பாக அரசியல் நடத்தையைக் கற்றறிவதற்கு செயலறிவு முறையினைச் சார்ந்துள்ளார். அவர் நடத்தையியலின் முன்னோடியாக விவரிக்கப்படுகிறார். இளவரசன் மற்றும் உரைக்கோவை ஆகிய இரண்டிலுமே இம்முறையினை அவர் பின்பற்றுகிறார். அவர் அதிகாரத்தினை கையகப்படுத்தி, பாதுகாத்து விரிவாக்கம் செய்யும் கருவியே அரசியல் என்பதுடன் அவற்றினை அடைவதற்காக இம்மெய்யான உலகில் உள்ள மக்களின் அறிவுத்திறனுக்குத் தக்கவாறு அணிதிரட்டி அடைவதாகக் கருதுகிறார்.

மாக்கியவல்லியின் முறையானது உய்த்தறிதல் அல்லது அறிவியல் முறையாக அழைக்கப்படுகிறது. இதற்கான அடிப்படை யாதெனில் அவர் பல்வேறு அரசியல் ஆட்சி காலங்களின் மனிதனின் தன்மை பற்றிய நடைமுறை அல்லது வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் முடிவுரைகளை எட்டுகிறார். அரசியலைப் பகுத்தறியும் சில நீதிநெறிகளுக்கு மாற்றாக மனித நடத்தையின் பாங்கில் கவனம் செலுத்துவதில் அவருடைய சுயத்தன்மை உள்ளது. இருப்பினும் மாக்கியவல்லியின் முறையானது மேலோட்டமான அறிவியல் மற்றும் வரலாற்று முறையாகும் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அவர் குறிப்பிட்டவற்றிலிருந்து பொதுவானவற்றை (Particular to General) நோக்கிய நடைமுறையிலான உய்த்தறிதல் முறையினைப் (Inductive Method) பின்பற்றவில்லை . அதே நேரத்தில் 'பொதுவானவற்றிலிருந்து குறிப்பிட்டவற்றிற்கான (General to Particular) நடைமுறையில் கொணர்முறையினையும் (Deductive Method) பின்பற்றவில்லை. அவர்களைப் பொறுத்தவரையிலும் மாக்கியவல்லி அரசியல் தத்துவத்தின் மையப் பிரச்சனைகளை எப்பொழுதும் தொடவில்லை. உதாரணமாக அரசு நீடித்தலுக்கான நியாயவாதம் மற்றம் அரசியல் கோட்பாட்டின் அடிப்படைகள் மற்றும் வரையறைகளைக் குறிப்பிடலாம். அவருடைய பார்வை பரந்ததாக இருந்தாலும் நடைமுறை அரசியலின் தேவைகளைத் தாண்டி அவர் எப்பொழுதும் பார்த்ததில்லை.

"அரசுகளைக் கண்டறிய மற்றும் சீர்திருத்த ஓர் ஆட்சியாளர் தேவை. அவை நிறுவப்பட்ட பின்னர் தாங்கிப் பிடிப்பதில் குடியரசிலான அரசாங்கங்கள் சிறந்தவையாகும்".


அரசியல் மற்றும் மதத்தினை பிரிப்பது பற்றி நிக்கோலோ மாக்கியவல்லி

அரசின் நன்னெறி நோக்கம் பற்றிய பிளாட்டோ, அரிஸ்டாட்டில், புனித தாமஸ் அக்வினாஸ் மற்றும் பலரின் நம்பிக்கையில் இருந்து மாக்கியவல்லி மாறுபட்டுள்ளார். அவர் அரசியலை மதம் மற்றும் நீதிமுறைமை ஆகியவற்றிலிருந்து பிரித்து அரசியலுக்கு ஓர் தன்னாட்சி நிலையினைத் தருகிறார். மதம் மற்றும் நீதிநெறி ஆகியவை இளவரசனின் ஆட்சிக்கலையில் நடைமுறைக் கொள்கையாகாது என மாக்கியவல்லி கூறுகிறார்.


மாக்கியவல்லி (லிவி மீதான உரைக்கோவை- Discourses on Livy)

மாக்கியவல்லியின் இரு முன்னணி புத்தகங்களான 'இளவரசன்' மற்றம் 'லிவி மீதான உரைக்கோவை' ஆகியவற்றிற்கிடையே எத்தகைய முரண்பாடுகளும் இல்லை என ஜார்ஜ் H. சபைன் என்னும் அறிஞர் சரியாக உற்று நோக்குகிறார். இரண்டுமே ஒரே பொருளைப் பற்றியவையாகும். அதாவது அரசுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் அவற்றை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகள் ஆகியவை ஆகும். 'இளவரசன்' நூல் முடியாட்சிகள் அல்லது முழுமையான அரசாங்கங்களைப் பற்றியும் உரைகோவையானது முக்கியமாக ரோமப் பேரரசின் விரிவாக்கம் பற்றியதாகும்


மாக்கியவல்லியின் ஆட்சிக்கலை (Machiavelli's Statecraft)

ஆட்சிக்கலை என்பது மாக்கியவல்லி எடுத்தியம்பியவற்றில் குறிப்பிடத்தகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய பங்களிப்பாகும். அது தனித்தன்மையான வழிகாட்டு முறைகளைக் கொண்டிருப்பதால் குறிப்பிடத்தகுந்ததாகவும், வெற்றிகரமான ஆளுகைக்காக ஆட்சியாளர் குறிப்பிட்ட அநீதியான நடைமுறைகளைப் பயன்படுத்துவதால் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது. ஆட்சியாளர் தமது நோக்கத்தினை ஒதுக்கிவைக்க வேண்டுமென மாக்கியவல்லி அறிவுரை கூறுகிறார். இருப்பினும் மரபார்ந்த நீதிமுறைமை என்பது அரசியலுக்கு முற்றிலும் தேவையற்றது எனவும் அவர் நினைக்கவில்லை. ஒன்று ஆட்சியாளருக்கும் மற்றொன்று அவரது பணியாளர்களுக்கும், குடிமக்களுக்குமாக அவர் நீதிநெறியில் இரட்டை மதிப்பளவினை எடுத்தியம்புகிறார். ஆட்சியாளரின் நீதிநெறி என்பது அரசினை வலிமைப்படுத்தும் அவரது குறைவுபடாத அர்ப்பணிப்பு மற்றும் தமது வலிமையை உயர்த்தி அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கினைப் பாதுகாப்பதுடன் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடம் இருந்து சிறந்த பாதுகாப்பினை உறுதிசெய்வதில் உணர்த்துகிறது. அவர் தமது கடமையை நிறைவேற்றுவதில் வெற்றியடைவதில் இருந்து அவரது திறன் மதிப்பிடப்படுகிறது. ஆனால் அவரது பணியாளர்களும், குடிமக்களும் மரபார்ந்த நீதிமுறைமையில் இருந்து விலகிச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் அரசின் அடிப்படையே அர்த்தமற்றுப் போய்விடும்.

இளவரசன் தமது குடிமக்கள் மத்தியில் தாம் மிகவும் உயர்ந்த மதிப்பீட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென மாக்கியவல்லி விரும்புகிறார். உலகளாவிய தன்முனைப்பு வாதம் பற்றி இளவரசன் கவனமுடன் இருக்கவேண்டும். அரசாங்கமானது உள்நாட்டு குற்றவாளிகள் மற்றும் வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கவேண்டும். ஓர் அறிவார்ந்த ஆட்சியாளர் மக்களின் உயிர் மற்றும் உடமைக்கான பாதுகாப்பு மற்றும் மக்களின் மாண்பினைப் பாதுகாக்கும் சூழலை ஏற்படுத்தும் வகையிலான கொள்கைகளை உருவாக்குகிறார். தம் அரசிலுள்ள பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பினை அளிக்க அவர் இளவரசனுக்கு அறிவுறுத்துகிறார். ஓர் அரசில் மக்கள் தங்களது உயிர், உடமை மற்றும் பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தங்களின் ஆட்சியாளருக்கு விசுவாசமாக இருப்பர்.


மதிப்பீடு 

சமூகத்தில் நீதிமுறைமையின் அடித்தளத்தினை கீழ்நிலைப்படுத்த மாக்கியவல்லி கருதவில்லை. ஒரு உண்மையான தேசபக்தனாக ஓர் வலுவான தேசிய அரசாக இத்தாலியைக் கட்டியெழுப்ப அவர் ஏங்கினார். அக்காலத்தில் இத்தாலி ஐந்து பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது. அவை ஃபிளாரன்ஸ், வெனிஸ், நேப்பிள்ஸ், மிலன் மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை நிலப்பரப்பு ஆகியவை ஆகும். ஐரோப்பாவின் பிற தேசிய அரசுகளிடம் ஓர் மதிக்கத்தக்க இடத்தினை தன் நாடு பெறவேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் இத்தாலியர்களிடம் இருந்த நீதிநெறி சீர்கேட்டினைப் பற்றி அவர் மிகவும் கவலையடைந்தார். அவர் ஓர் குடியரசினை விரும்பினாலும் அக்கால இத்தாலியின் சூழ்நிலைகளால் முடியாட்சியை முன்மொழிந்தார்.

செயல்பாடு 

1. முதலாவது தற்காலச் சிந்தனையாளராக மாக்கியவல்லி ஏன் கருதப்படுகிறார் என ஆராய்க

2. முடியாட்சி மற்றும் குடியரசு முறை அரசாங்கங்களின் இயல்புகளை கற்கவும்.

11th Political Science : Chapter 7 : Political Thought : Niccolo Machiavelli - Political Thought in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை : நிக்கோலோ மாக்கியவல்லி (Niccolo Machiavelli) (பொ.ஆ.1469-பொ.ஆ.1527) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை