Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் சிந்தனை
   Posted On :  04.10.2023 08:32 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை

கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் சிந்தனை

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை : கலைச்சொற்கள்: Glossary

கலைச்சொற்கள்: Glossary


பிரபுக்களாட்சி (Aristocracy): ஒரு அரசை ஆளுகின்ற அதிகாரம் உயர்குடியினரிடம் இருத்தல் 


உடைமையாளர்கள் (Bourgeosie): சமுதாயத்தின் பெரும்பகுதி வளம் மற்றும் உற்பத்தி வழிமுறைகளை சொந்தமாக்கிக் கொண்ட முதலாளி வர்க்கமாகும்


வர்க்கமற்ற சமுதாயம் (Classless Society): உண்மையான பொதுவுடைமை மலரும் போது எதிர்பார்க்கப்படும் சமுதாய அமைப்பின் அடிப்படைச் சூழ்நிலையாகும்


இயங்கியல் (Dialectic): மாறாநிலைவாத முரண்பாடுகள் மற்றும் அவற்றின் தீர்வுகளை பற்றிய வினவலாகும்


பாட்டாளிகளின் சர்வாதிகாரம் (Dictatorship of the Proletariat): மார்க்சியவாதத்தின்படி தங்கள் உழைப்பில் இருந்து மட்டுமே வருவாயை ஈட்டக்கூடிய தொழிற்சாலைப் பணியாளர்களைக் கொண்ட பொருளாதார மற்றும் சமூக வகுப்பினரின் ஆட்சி பாட்டாளிகளின் சர்வாதிகாரமாகும். இந்த பாட்டாளிகளின் ஆட்சியானது முதலாளித்து ஒழிப்பிற்கும், பொதுவுடைமையை நிறுவுதலுக்கும் இடைப்பட்ட காலமாகும்


அறிவொளிக்காலம் (Enlightenment): இது 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 18ஆம் நூற்றாண்டில் இருந்த ஓர் ஐரோப்பிய அறிவார்ந்த இயக்கமாகும். இது மரபுகளைக் காட்டிலும் பகுத்தறிவு மற்றும் தனிமனிதத்துவத்தினை வலியுறுத்தியது.


பொது விருப்பம் (General Will): அரசியல் கோட்பாட்டில், பொது நலன் அல்லது பொது நன்மைக்கான நோக்கங்கள் தொடர்பான விருப்பங்களை ஒட்டுமொத்தமாக்கி வைப்பதாகும்.


மகத்தான புரட்சி (Glorious Revolution): 1688-89ல் நடந்த நிகழ்வுகளால் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் பதவி விலக நேர்ந்தது. மன்னரின் மகளான இரண்டாம் மேரி மற்றும் அவருடைய கணவரும் ஆரஞ்சின் இளவரசர் மற்றும் நெதர்லாந்தின் முதன்மை அதிகாரியுமான மூன்றாம் வில்லியம் ஆகியோர் அரியணையில் அமர்ந்தனர்.


தனிமனிதத்துவம் (Individualism): ஒட்டுமொத்த அல்லது அரசின் கட்டுப்பாட்டிற்கு மாறாக தனிமனிதர்களின் செயல்பாட்டு சுதந்திரத்திற்கு சாதகமான ஓர் சமூகக் கோட்பாடாகும்.


பெரும்பான்மைத்துவம் (Majoritarianism): பெரும்பான்மையினரின் ஆட்சியைத் தூக்கிப் பிடிக்கும் ஓர் மக்களாட்சி வடிவமாகும்.


அரசியல் பொருளாதாரம் (Political Economy): இது தனிமனிதன், சமுதாயம், சந்தைகள் மற்றும் ஆகிய பெற்றிடும் உறவினைக் கற்றறியும் சமூக அறிவியல் பிரிவாகும்.


பாட்டாளிகள் (Proletariat): ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த மக்களைக் குறிப்பதாகும்


பகுத்தறிவு (Rationality): ஒருவரின் காரணகாரிய அறிவு அல்லது தர்க்கத்தின் அடிப்படையிலான தரநிலையாகும்.


சீர்திருத்தம் (Reformation): இது ஓர் 16ஆம் நூற்றாண்டு இயக்கமாகும். ரோமானியத் திருச்சபையில் இருந்த அத்துமீறல்களைச் சீர்திருத்தி பின்னர் சீர்திருத்தத் திருச்சபைகள் நிறுவப்பட்டன.


வியன் புனைவியக்கம் (Romanticism): இது 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய கலை மற்றும் இலக்கிய இயக்கமாகும். இது அகத்தூண்டுதல், உள்ளுணர்வு மற்றும் தனிமனிதனின் முதன்மையை வலியுறுத்துகிறது.


இயற்கை நிலை (State of Nature): அரசியல் கோட்பாட்டில் ஓர் அரசியல் அமைப்பு தோன்றுவதற்கு முன்னரோ அல்லது இல்லாத நிலையிலோ இருந்த உண்மையான அல்லது அனுமானத்திலான மனிதர்களின் நிலையினைக் குறிப்பதாகும்.


ஆட்சிக்கலை (Statecraft): அரசு விவகாரங்களைத் திறம்பட மேலாண்மை செய்தல், அரசியல் மேதகைமை.


செல்வராட்சி (Timocracy): பதவி வகிப்பதற்கு சொத்துக்களை உடைமையாகப் பெற்றிருத்தலை அவசியமாக்கும் அரசாங்க முறையாகும்.

11th Political Science : Chapter 7 : Political Thought : Glossary for Political Thought in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை : கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் சிந்தனை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை