பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - விதை வங்கி | 8th Science : Chapter 21 : Crop Production and Management

   Posted On :  30.07.2023 11:29 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

விதை வங்கி

மரபுப் பல்வகைத் தன்மையினைப் பாதுகாத்திடுவதற்காக விதைகளைச் சேமிக்கும் இடம் விதை வங்கி எனப்படும். விதைகள் நூறு ஆண்டுகளிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கக்கூடியவை. விதை வங்கிகள் தாவரங்களின் பரிணாமத் தகவல்களைக் கொண்ட விதை நூலகம் போன்றவையாகும்.

விதை வங்கி

மரபுப் பல்வகைத் தன்மையினைப் பாதுகாத்திடுவதற்காக விதைகளைச் சேமிக்கும் இடம் விதை வங்கி எனப்படும். விதைகள் நூறு ஆண்டுகளிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கக்கூடியவை. விதை வங்கிகள் தாவரங்களின் பரிணாமத் தகவல்களைக் கொண்ட விதை நூலகம் போன்றவையாகும்.

கொல்கத்தாவில் அமைந்துள்ள அரசு தாவரவியல் தோட்டம் முதன்முறையாக விதை வங்கிக்காக விதைகளைச் சேமிக்கத் தொடங்கியது. உள்ளுர் ரக விதைகளைச் சேமிப்பதற்காக இவை தோற்றுவிக்கப்பட்டன. விவசாயிகள் கலப்பின விதைகளுக்காக விதை நிறுவனங்களைச் சார்ந்திராமல் உள்ளுரில் கிடைக்கும் விதைகளைப் பதப்படுத்தி சேமிக்க ஆரம்பித்தனர். காற்றுப்புகாத மண்கலன்களில் விதைகளைச் சேமிப்பதே


எளிமையான மற்றும் ஆரோக்கியமான விதை சேகரித்தல் முறையாகும். புதுடில்லியில் அமைந்துள்ள நவதானிய விதை வங்கி எனப்படும் சாரா நிறுவனம் தாவர இனங்களின் பாதுகாப்பினை முதன்மையாகக்கொண்டு ஏறத்தாழ 50000 பயிர் ரகங்களைப் பாதுகாக்கிறது.

கொல்கத்தாவில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஸ் சந்திர போஸ் இந்திய தாவரவியல் தோட்டம் ஆரம்பத்தில் ராயல் தாவரவியல் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தோட்டம் பல்வேறு வகையான அரிதான தாவரங்களையும், 12000 க்கும் மேற்பட்ட மாதிரித் தாவரங்களையும் கொண்டுள்ளது. இது 109 ஹெக்டேர் நிலப்பரப்பு அளவுடையது.

 

1. விதைப் பந்துகள்

விதைப்பந்துகள் எனப்படுவவை மண், மட்கிய குப்பை மற்றும் தாவர விதைகளின் கலவையாகும். இந்த விதைப் பந்துகள் நிலப் பரப்புகளில் வீசப்படுகின்றன. வீசப்பட்ட விதைப்பந்துகள் மழைக் காலத்தில் நாற்றுக்களாக முளைக்கின்றன. விதைப் பந்துகளை உருவாக்குதல் இயற்கையான சூழ்நிலை மண்டலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு படிநிலையாகும்.

சூழ்நிலை மண்டலத்தைப் புதுப்பிப்பதற்குத் தேவையான தாவரங்களை வளர்ப்பதற்காக அரசு


நீ உண்ணக்கூடிய கனிகளின் விதைகளை எடுத்து மட்கிய குட்பையுடன் கலக்கவும். அத்துடன் சிறிதளவு களிமண் சேர்த்து சிறிய அளவிலான பந்துபோல் உருட்டி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சூரிய ஒளியில் உலரச் செய்யவும். இந்த விதைப் பந்துகளை எடுத்து உலர்ந்த மற்றும் வறண்ட நிலப் பகுதிகளில் வீசவும். இது புதிதாக தாவரங்கள் வளர உதவும். நீ பயணம் செய்யும் போது இந்த விதைப்பந்துகளை ஆங்காங்கே எறியலாம். தாவரங்கள் இல்லாத இடங்களில் தாவரங்களை வளர்க்க இம்முறை உதவுகிறது.

சாரா நிறுவனங்களும், ஆர்வமுள்ள பள்ளிக் குழந்தைகளும் விதைப் பந்துகளைத் தயார் செய்கிறார்கள். விதைப்பந்து உருவாக்குவது மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், மக்களிடையே தாவரங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும் இது மேம்படுத்துகிறது.

 

2.  பாரம்பரிய விதை

பல தலைமுறைகளாக மனிதர்களால் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்ட தாவரங்களின் விதைகள் பாரம்பரிய விதைகள் எனப்படுகின்றன. பிற சமூகத்தினருடன் தொடர்பற்ற சிறு சமூகத்தினரால் இத்தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும், இவை அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவுகின்றன. பாரம்பரிய விதைகள் கரிம விதைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. அழைக்கப்படுகின்றன. இந்த விதைகள் திறந்த நிலை மகரந்தச் சேர்க்கை நடைபெறும் தாவரங்களில் உருவாகின்றன. மேலும், தங்களது தனித்துவமான பண்புகளை அடுத்த சந்ததிக்கு இவை கடத்துகின்றன. அடுத்த பருவகாலத்தில் விதைக்கப்படுவதற்காக, அறுவடை முடிந்தபிறகு இந்த விதைகள் உலர்த்தப்பட்டு, சேமிக்கப்படுகின்றன. வெளிப்புறத் தாக்கங்களால் ஏற்படும் எந்தவித மாற்றங்களையும் தடுப்பதே பாரம்பரிய விதைகளைப் பதப்படுத்துவதன் நோக்கமாகும். பெரும்பாலான காய்கறிகள் மற்றும் மலர் வகைகள் பூக்கும் காலத்தில் அதே வகைத் தாவரங்களிலிருந்து பிரித்து பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். இதனால், தாவரங்களில் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கை மற்றும் ஜீன்களில் ஏற்படும் கலப்பினைத்தவிர்க்கலாம். சில காய்கறி வகைகள் தன்மகரந்தச் சேர்க்கை அடையக்கூடியவை. எனவே, இவை உயிரினக் கலப்பின்றி தனித்தன்மையுடன் வளர்க்கப்படுகின்றன. செயற்கை உரங்கள், களைக்கொல்லி அல்லது பூச்சிச்கொல்லிகள் கரிம விதைத் தாவரங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, பாரம்பரிய உரங்கள், களைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Tags : Crop Production and Management | Chapter 21 | 8th Science பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 21 : Crop Production and Management : Seed Bank Crop Production and Management | Chapter 21 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை : விதை வங்கி - பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை