Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 21 : Crop Production and Management

   Posted On :  10.09.2023 02:44 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

காரிப், ரபி மற்றும் சயாடு பயிர்வகைகள் நம் நாட்டில் பயிரிடப்படும் பயிர்களாகும்

உழுதல், விதைத்தல், உரமிடுதல் அறுவடை செய்தல் மற்றம் விதை சேமிப்பு ஆகியவை பயிர்ப் பெருக்கத்தின் முக்கிய செயல்பாடு களாகும்.

கைகளால் விதைத்தல், இயந்திர விதைப்பு மற்றும் ஊன்றுதல் ஆகியவை விதை விதைத்தலின் முக்கிய வகைகள் ஆகும்.

கிணறுகள், குழாய்க் கிணறுகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள், அணைகள் மற்றும் கால்வாய்கள் நீர்ப் பாசனத்தின் பலவகை ஆதார வளங்களாகும்.

தெளிப்பு நீர்ப் பாசனம் மற்றும் சொட்டு நீர்ப் பாசனம் ஆகியவை நவீன நீர்ப் பாசன் முறைகள் ஆகும்.

முதிர்ச்சியடைந்த பயிர்களைச் சேகரிக்கும் செயல்முறை அறுவடை செய்தல் எனப்படும்.

அறுவடை என்பது தானியங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் தூற்றுதலையும் உள்ளடக்கியது.

ஒற்றைப் பயிர் வளர்ப்பு மற்றும் கூட்டுப் பயிர் வளர்ப்பு ஆகியவை பயிர் வளர்ப்பின் இரண்டு முறைகளாகும்.

மரபுப் பல்வகைத் தன்மையைப் பாதுகாப்பதற்காக விதைகள் சேமிக்கப்படும் இடம் விதை வங்கி எனப்படும்.

சுற்றுச்சூழலின் நிலையை வெளிப்படுத்தும் ஒரு இனம் அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி- சுட்டிகள் அல்லது உயிரியல் சுட்டிக்காட்டிகள் எனப்படும்.

உயிரி-கொன்றுண்ணிகள் உயிரி-பூச்சிக் கொல்லிகள் உயிரி-பூச்சி விரட்டிகள் மற்றும் உயிரி-உரங்கள் ஆகியவை பயிர்கள், பயிர்ப்பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகள் ஆகும்

 

கலைச்சொற்கள்

உழுதல் மண்ணைப் புரட்டும் மற்றும் தளர்த்தும் செயல்.

விதை ஊன்றுதல் உழுசால், குழி அல்லது துளையினுள் நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியில் விதைகளை இடும் செயல்.

தெளிப்பு நீர்ப்பாணம் இயற்கை மழைக்கு ஒப்பான நீர்ப்பாசன முறை.

ஒற்றைப் பயிர்வளர்ப்பு  வருடந்தோரும் ஒரே இடத்தில் ஒரே வகையான தாவரங்களைப் பயிரிடுதல்.

விதை வங்கி மரபுப் பல்வகைத்தன்மையைப் பாதுகாத்திட விதைகள் சேமிக்கப்படும் இடம்

ICAR இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்.

KVK கிரிஷ் விஞ்ஞான் கேந்திரா (வேளாண் அறிவியல் நிலையம்)

மண்புழு வடிநீர் மண்புழு செயல்பாடு உள்ள ஒரு அமைப்பின் வழியாக நீரைச் செலுத்திய பிறகு சேகரிக்கப்படும் ஒர் திரவம்.

பஞ்சகவ்யா பசுவின் சாணம், பசுவின் சிறுநீர், பால், தயிர் மற்றும் நெய் ஆகிய ஐந்து பொருள்களின் கலவை.

உயிரி – உரங்கள் மண்ணில் ஊட்டப்பொருள்களின் அதிகரிப்பினைக் கொண்டுவரும் உயிரினங்கள்.



பிற நூல்கள்

1. Introduction to Agronomy and Principles of crop production by SR Reddy

2. Traditional Organic Farming Practices by

E. Somasundaram and D. Udhaya Nandhini

3. Seed Technology by Ratten Lal Agarwal

 

இணைய வளங்கள்

1. www mdpi.com/2071 1050/9/11/1901/s1.

2. Karpagamextn@yahoo.co.in

3. www.isca.in

4. www.ijcmas.com


இணையச் செயல்பாடு


பயிர் பாதுகாப்பு

கைபேசி வழியாக விளையாட்டின் மூலம் விவசாயம் செய்வோம்.

படி 1 கீழ்காணும் உரலி/விரைவு குறியை பயண்படுத்தி இணையப் பக்கத்திற்கு செல்க.

படி 2 திரையில் தோன்றும் பக்கத்தில் INSTALL என்ற பொத்தானை சொடுக்கவும். விவசாயம் செய்யும் விளையாட்டு கைபேசியில் தரவிரக்கம் ஆகும்.

படி 3 தோன்றும் பக்கத்தில் TOUCH TO BEGIN என்பதை சொடுக்கி விளையாட்டை விளையாடி மகிழவும்.

உரலி:

https://play.google.com/store/apps/details?id=com.giantssoftware.fs14&hl=en_IN

*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க.

Tags : Crop Production and Management | Chapter 21 | 8th Science பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 21 : Crop Production and Management : Points to Remember, Glossary, Concept Map Crop Production and Management | Chapter 21 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை