Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | பயிர்ப் பெருக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகள்

பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பயிர்ப் பெருக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகள் | 8th Science : Chapter 21 : Crop Production and Management

   Posted On :  30.07.2023 11:18 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

பயிர்ப் பெருக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகள்

உழுதல், விதைத்தல், உரமிடுதல், அறுவடை செய்தல், விதை சேமிப்பு ஆகியவை பயிர் உற்பத்தியில் உள்ள பல்வேறு வகையான செயல்பாடுகள் ஆகும். இச்செயல்முறைகள் அனைத்தும் மொத்தமாக பயிர்விளைச்சலுக்குத் துணைபுரிகின்றன.

பயிர்ப் பெருக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகள்

உழுதல், விதைத்தல், உரமிடுதல், அறுவடை செய்தல், விதை சேமிப்பு ஆகியவை பயிர் உற்பத்தியில் உள்ள பல்வேறு வகையான செயல்பாடுகள் ஆகும். இச்செயல்முறைகள் அனைத்தும் மொத்தமாக பயிர்விளைச்சலுக்குத் துணைபுரிகின்றன.

 

1. மண்ணை தயார்படுத்துதல்

பயிர்ப்பெருக்கத்திற்கான செயல்முறைகளில் மிகமுக்கியமான பகுதி மண்ணின் மேல் அடுக்கினை இவை உழவர்களுக்கு தளர்வடையச் செய்வதாகும். மண்புழு மற்றும் மண் நுண்ணுயிரிகள் வளர தளர்வான மண் உதவுகிறது. இவ்வுயிரினங்கள் அங்கக மக்குகளை மண்ணிற்குள் சேர்க்கின்றன. மேலும், நண்பனாக உள்ளன. தாவரங்கள் வேர்களின் மூலம் நீர், கனிமங்கள் மற்றும் காற்றினை மண்ணிலிருந்து உறிஞ்சுகின்றன. எனவே, பயிர் வளர்ப்பிற்குமுன் மண்ணை உரிய முறையில் தயார் செய்தல் அவசியமாகும். பின்வரும் முறைகளில் மண் தயார் செய்யப்படுகிறது.


அ. உழுதல்

பயிர்களின் வேர்ப்பகுதிகளில் ஊட்டப் பொருள்கள் கிடைக்குமாறு மண்ணை மேலும் கீழும் புரட்டி, தளர்வடையச் செய்யும் முறை உழுதல் எனப்படும்.

மண்ணை வளப்படுத்துவதற்குப் பயன்படும் முக்கியமான கருவிகள் பின்வறுமாறு.

ஏர்

மண்ணை உழுதல், பயிர்களுக்கு உரமிடுதல், களைகளை நீக்குதல் நிலத்திலிருந்து இதர கழிவுப் பொருள்களை நீக்குதல் மற்றும் மண்ணை மேலும் கீழும் கொண்டுவருதல் ஆகிய செயல்பாடுகளுக்கு ஏர் பயன்படுகிறது. ஏர் மரத்தால் செய்யப்பட்டது. இது ஒரு ஜோடி எருதுகளால் இழுத்துச் செல்லப்படுகிறது.


இது ஏர்க்கால் எனப்படும் உறுதியான மற்றும் இரும்பாலான முப்பட்டை அமைப்பைக் கொண்டுள்ளது. ஏரின் முக்கியப் பகுதி நீண்ட மரத்தாலான அமைப்பாகும். இதன் மறுமுனை நுகத்தடியுடன் பொருத்தப்பட்டு எருதுகளின் கழுத்தில் கட்டப்படுகிறது.

களைக்கொத்தி

இது, நிலத்தைக் கிளறுதல், களை நீக்கம் மற்றும் மண்ணைத் தோண்டுதல் ஆகியவற்றிற்குப் பயன்படும் எளிய வேளாண் கருவியாகும். இது முனையில் வளைந்த இரும்புத் தகட்டுடன் கூடிய ஒரு நீண்ட மர உருளை அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் மறுமுனை விலங்குகளோடு பொருத்தப்பட்டிருக்கும்.

இயந்திரக் கலப்பை

இயந்திரக் கலப்பை ட்ராக்டர்களால் இழுக்கப்படுகின்றன இயந்திரக் கலப்பைகள் களைகளை அழிக்கின்றன. மேலும், வேண்டாத தாவரப்பகுதிகளைப் எடுக்கவும்

பிடுங்கி

பயன்படுகின்றன. தற்பொழுது ட்ராக்டரிஸ் பொருத்தப்பட்ட இயந்திரக் கலப்பை உழுதலுக்கும் பயன்படுகிறது. இக்கலப்பை பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் நேரத்தைக் குறைக்கிறது.

ஆ. சமப்படுத்துதல்

நிலத்தினை உழும்பொழுது மண்ணின் மேலடுக்கு முழுவதும் தளர்வடைகிறது. பின்னர் மண்ணைச் சமப்படுத்தக்கூடிய கருவியினைக் கொண்டு மண் சமப்படுத்தப்படுகிறது. இது கனமான மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்டிருக்கும். நிலத்தைச் சமப்படுத்துவதற்தம் சீரான நீர் பரவுதலுக்கும் இது உதவுகிறது.

இ. அடி உரமிடுதல்

மண்ணிற்கு உரம் சேர்த்தல் உரமிடுதல் எனப்படும். உரமானது பயிர்த் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டப் பொருள்களைக் கொண்டுள்ளது. மண் வளத்தை அதிகரிப்பதற்காக விதைக்கும் முன்னரே நாம் மண்ணிற்கு உரமிடுகிறோம். இதனால் உரம் மண்ணுடன் நன்கு கலக்கிறது. தழை உரம் மற்றும் பண்ணை உரம் ஆகியவை பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கின்றன.

 

2. விதை விதைத்தல்

இது பயிர் உற்பத்தியில் இரண்டாவது நிலையாகும். மண் தயார் செய்யப்பட்டவுடன் விதை விதைக்கப்படுகிறது. விதைத்தல் என்பது விதைகளை மண்ணில் ஊன்றச் செய்யும் விதைக்கப்படும் செயலாகும். விதைகள் தரமிக்கவையாக கவனமுடன் தேர்வு செய்யப்பட வேண்டும். விதைவிதைத்தலில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

அ. கைகளால் விதைத்தல்

கைகளால் விதை விதைத்தல் விதைத்தலின் எளிமையான மற்றம் சிக்கனமான முறையாகும்.


ஆ. விதைக்கும் கருவி

இது விதை விதைத்தலில் பின்பற்றப்படும் நவீன முறையாகும். கைகளால் விதைக்கும் முறையைவிட இந்த முறை மிகச் சிறப்பான மற்றும்


நேர்த்தியான முறையாகும். இம்முறையில் இரும்புக் கலப்பை பொருத்தப்பட்ட ட்ராக்டரின் உதவியுடன் விதைக்கப்படுகிறது. இதன்மூலம் விதை சம இடைவெளியில் குறிப்பிட்ட ஆழத்தில் விதைகள் விசைக்கப்படுகின்றன.

இ.ஊன்றுதல்

நீண்ட வரிப் பள்ளத்திலுள்ள குழிகள் அல்லது துளைகளில், நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியில் கைகளால் அல்லது துளையிடு கருவியினால் விதையை இடும் முறை ஊன்றுதலாகும். விதையானது ஈரப்பதமுள்ள மண்ணுடன் தொடர்பு கொள்ளும் வகையில் விதை இடப்பட்ட துளையைச் சுற்றியுள்ள மண், கைகளால் அல்லது கால்களால் அழுத்தப்படுகிறது.


மேலும் அறிவோம்

இளம் நாற்றுகளைப் பிடுங்கி வளர்நிலப் பகுதியில் ஊன்றும் செயல் நாற்று நடுதல் எனப்படும். இவை அறுவடைவரை அங்கு வளர்க்கப்படுகின்றன. இளம் வளர் தாவரங்கள், நாற்றுகள் அல்லது தாவர உடலப் பெருக்கத்தின் மூலம் உருவான நகல்கள் பயன்படுகின்றன.


 

3. எரு மற்றும் உரமிடுதல்

தாவரங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மண்ணில் சேர்க்கப்படும் ஊட்டப் பொருள்கள் உரங்கள் எனப்படும். 'மண் வளம்' என்ற சொல், பயிர்த் தாவரங்களுக்குத் தேவையான அளவு ஊட்டப்பொருள்களை உகந்த விகிதத்தில் அளிக்கவல்ல மண்ணிற்கே உரிய திறனைக் குறிக்கிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு இந்த ஊட்டப்பொருள்கள் அவசியமாக உள்ளன.

தாவர மற்றும் விலங்குக் கழிவுகள் மட்குவதால் கிடைக்கும் கரிமப் பொருள்கள் அங்கக மட்கு' எனப்படும். விவசாயிகள் தாவர மற்றும் விலங்குக் கழிவுகளை திறந்த குழிகளில் குவித்து அவற்றை மட்கச் செய்கிறார்கள். மட்கிய பொருள்கள் கரிம உரமாகப் பயன்படுகின்றன. கரிம உரங்களை முறையாகச் சேர்ப்பதால் மண்ணின் வளத்தை தக்க வைத்துக்கொள்ளமுடிகிறது. மேலும், காற்று மற்றும் நீர் அரிப்பிலிருந்து மண்ணைப் பாதுகாத்து வழிந்தோடுதல் மற்றும் ஊடுறுவலினால் ஏற்படும் ஊட்டப்பொருள் இழப்பையும் இவை தடுக்கின்றன. நீர் கொள்திறன், மண்குவிதல், மண் காற்றோட்டம் மற்றும் ஊடுருவும் திறன் ஆகியவற்றையும் இவை அதிகரிக்கின்றன.

செயல்பாடு 2

உனது பள்ளி வளாகத்தினுள் ஒரு குப்பைக் குழியைத் தயார் செய். பள்ளி வளாகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட உணவுக் கழிவுகள், தாவர இலைகள் போன்ற கரிமக் கழிவுகளை இந்தக் குழியில் நிரப்பி, அவற்றை மண்கொண்டு மூடிவை, மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த மக்கிய குப்பையை உனது பள்ளியிலுள்ள தாவரங்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

தாவரங்களின் வளர்ச்சி மற்றும் அதிக மகசூலுக்காக மண்ணில் சேர்க்கப்படும் பொருளே உரமாகும். உரம் யூரியா, அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ) ஆகியவற்றாலானது. செயற்கை உரங்களை நீண்டகாலம் பயன்படுத்தினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அவை உணவின் அளவையும், தரத்தையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துகின்றன.


 

4. நீர்ப் பாசனம்

தாவரங்களின் முறையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நீர் அவசியமானதாகும். தாவரங்கள் வேர்த்தொகுப்பின் உதவியால் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுகின்றன. சீரான இடைவெளியில் பயிர்களுக்கு நீர் அளித்தல் நீர்ப்பாசனம் எனப்படும். நீர் பாய்ச்சும் கால அளவும், எண்ணிக்கையும் பயிருக்குப் பயிரும், மண்ணிற்கு மண்ணும் மற்றும் பருவநிலைக்கு பருவநிலையும் வேறுபடுகின்றன. நீர்ப்பாசனம் மூலம் நிலத்திற்கு உரங்களையும் இடமுடியும். கிணறு, குழாய்க் கிணறு, குளம், ஏரி, ஆறு, அணை, கால்வாய் போன்றவை பல்வேறு நீர்ப்பாசன ஆதாரங்களாகும். குறைவான செலவில், சரியான நேரத்தில் போதுமான அளவில் பயிர்களுக்கு சீராக நீரளிப்பதே மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் எனப்படும். இரண்டு முறைகளில் நீர்ப் பாசனம் செய்யப்படுகிறது.

அ. பாரம்பரிய முறைகள்

ஆ. நவீன முறைகள்

 

அ. பாரம்பரிய முறைகள்

இம்முறைகளில் கைகளால் நீர் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள், கிணற்றிலிருந்து அல்லது நீர்க்கால்வாயிலிருந்து தானாகவோ அல்லது எருதுகளின் உதவியுடனோ நீரை இழுத்து விவசாய நிலத்தில் பாய்ச்சுகின்றனர். பல்வேறு நீர் ஆதாரங்களிலிருந்து நீரை மேலே கொண்டுவர விசையியக்கக் கருவிகள் (Pump) பயன்படுகின்றன. டீசல், உயிர்வாயு, மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவை இக்கருவிகளை இயக்கத் தேவையான சில முக்கிய ஆற்றல் மூலங்களாகும். நீர் இறைத்தல் முறைகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.

செயல்பாடு 3

உனது பகுதியில் பின்பற்றப்படும் நீர்ப்பாசன முறைகளைக் கண்டறி. தெளிப்பு நீர்ப்பாசன முறை மற்றும் சொட்டு நீர்ப்பாசன முறை போன்ற நவீன நீர்ப்பாசன முறைகளின் நன்மை தீமைகளைப் பற்றி விவாதிக்கவும்.

இந்த முறைகள் செலவு குறைந்தவை. ஆனால், இவற்றின் திறன் மிகக்குறைவு ஆகும். ஏனெனில், நீர் நிலத்தில் சமமாகப் பாய்வதில்லை. அதிகளவு நீர் இழப்பையும் இவை ஏற்படுத்துகின்றன.

ஆ. நவீன முறைகள்

பாரம்பரிய முறைகளில் உள்ள குறைகளுக்குத் தீர்வாக நவீன நீர்ப்பாசன முறைகள் உள்ளன. நிலத்தில் ஒரே அளவிலான ஈரப்பதம் காணப்பட இவை உதவுகின்றன.

நவீன முறைகள் இரண்டு அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை:

தெளிப்பு நீர்ப் பாசன அமைப்பு

• சொட்டு நீர்ப் பாசன அமைப்பு

தெளிப்பு நீர்ப் பாசன அமைப்பு

தெளிப்பு நீர்ப்பாசனம் பயிரின் மீது நீரைத் தெளிப்பதோடு சரியான நீர் பரவலுக்கும் உதவுகிறது. இது நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு ஏற்ற முறையாகும். இதில், உந்துவிசையியக்கக் கருவி ஒன்று குழாய்களோடு இணைக்கப்படுகிறது. இது அழுத்தத்தை உருவாக்குவதால் குழாயின்  நுண்துளைகளின் வழியாக நீரானது தெளிக்கப்படுகிறது.


சொட்டு நீர் பாசனம்

இம்முறையில் குழாய்களைப் பயன்படுத்தி நீரானது சொட்டு சொட்டாக நிலத்தில் விடப்படுகிறது. நீர் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளுக்கு சொட்டு  நீர்ப் பாசனம் ஒரு பயனுள்ள முறையாகக் கருதப்படுகிறது.


2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9 பில்லியனாக இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால், நன்னீர் வளத்தில் 70 விழுக்காடு விவசாயத்திற்கே பயன்படுகிறது. எனவே, நமது தலைமுறையினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் நீரின் பயன்பாடு திறன்மிக்கதாக இருக்கவேண்டும். சொட்டு நீர்ப்பாசனமே இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


 

5. களை நீக்கம்

விவசாய நிலத்தில் முக்கியமான பயிர் வகைகளுடன் பல விரும்பத்தகாத தாவரங்களும் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படுகின்றன. களைகளை நீக்கும் செயல் களையெடுத்தல் எனப்படும். களை நீக்கம் மிக முக்கியமான செயலாகும். ஏனெனில், களைத் தாவரங்கள் ஊட்டப் பொருள்கள், சூரியஒளி, நீர், வளரிடம் மற்றும் பிற ஆதாரங்களுக்காக பயிர்த் தாவரங்களுடன் போட்டியிடுகின்றன. இதனால், பயிர்களுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து குறைந்து, விளைச்சல் குறைகிறது. எதிர்பார்த்த விளைச்சலை அடைவதற்கு நிலத்திலிருந்து களை நீக்கப்படுதல் அவசியம் ஆகும். விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு களைகளை நீக்கி அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவற்றுள் சில கீழே விளக்கப்பட்டுள்ளன.

இயந்திர முறைகள்

இயந்திர முறையானது களைகளை நீக்கப் பயன்படும் ஒரு பொதுவான முறையாகும். களைக் கொத்தியின் உதவியுடன் கைகளால் களையை அகற்றுதல் ஒரு பழமையான களையெடுத்தல் முறை ஆகும். இது களைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த முறையாகும்.

உழுதல் முறைகள்

இது அனைத்து வகையான களைகளையும் அழிப்பதற்கான ஒரு செயல்முறையாகும். ஆழமாக உழுவதன் மூலம் களைகள் மண்ணில் புதைக்கப்படுகின்றன. அல்லது ஆழ உழுதல்மூலம் சூரிய வெப்பத்தில் உலர்த்தப்படுகின்றன.

பயிர்ச் சுழற்சிமுறை

இந்த முறையில் பயிர் சார்ந்த மற்றும் ஒட்டுண்ணி வகைக் களைகளைக் கட்டுப்படுத்த முறையான பயிர்ச்சுழற்சி பின்பற்றப்படுகிறது.

கோடை உழவு

குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்த பிறகு, நிலத்தை ஆழமாக உழுது, களைகளின் தரைகீழ்ப் பகுதிகளை கோடைக்காலத்தில் சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதன் மூலம், பல்வேறு ஓராண்டு மற்றும் பல ஆண்டுகள் வாழும் களைகளை அழிக்கமுடியும்.

உயிரியல் களைக் கட்டுப்பாடு

இந்த முறையில் பூச்சிகள் மற்றும் நோயூக்கிகள் போன்ற உயிர்க் காரணிகள் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன. களைகளை அழித்தல் உயிரியல் கட்டுப்பாட்டின் நோக்கமாக இல்லாமல், களைத் தாவரங்களை முறைப்படுத்துதலும் குறைத்தலுமே இதன் நோக்கமாக உள்ளது.

வேதியியல் முறைகள்

வேதியியல் முறைகள் சிலவகைக் களைகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் திறன் மிக்கதாக உள்ளன. களைகளைக் கொல்வதற்கு அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருள்கள் களைக்கொல்லிகள் எனப்படுகின்றன. இவ்வேதிப் பொருள்கள் நீருடன் கலக்கப்பட்டு பயிர்களின் மீது தெளிக்கப்படுகின்றன.


உலகெங்கும் 30,000க்கும் மேற்பட்ட களை வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் 8000 வகைகள் பயிர்களுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஒரேவகையான களைநீக்கும் முறையைப் பயன்படுத்துவதால் களைகள் அவற்றை மேற்கொள்ளும் திறனைப் பற்றுக்கொள்கின்றன. எனவே, பல்வேறு களைநீக்கும் முறைகளை இணைத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.


ஒருங்கிணைந்தகளை மேலாண்மை

இந்த முறையில், பல்வேறு வேளாண்மைச் செயல்பாடுகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடுகளை இணைத்து, களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, நாம் ஒரே ஒரு களைக் கட்டுப்பாட்டு முறையை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இந்த முறையில், பல்வேறு உயிரியல், பாரம்பரிய மற்றும் வேதியியல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

6. பயிர் அறுவடை செய்தல்

விளைந்த பயிர்களை வெட்டிச் சேகரிக்கும் செயல் அறுவடை எனப்படும். பயிர்களை அறுவடை செய்திட பல்வேறு முறைகள் பயன்படுகின்றன.

கைகளால் பிடுங்குதல்

இதுவே, இந்தியாவில் பெரும்பாலும் காணப்படும் அறுவடை முறையாகும். சில பயிர்கள் சாதனங்கள் எதுவும் இல்லாமலேயே அறுவடை செய்யப்படுகின்றன. நிலக்கடலை, பச்சைப் பயறு, உளுந்து மற்றும் கொள்ளு ஆகியவை இம்முறையில் அறுவடை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றை அறுவடை செய்ய போதுமான அளவு ஈரப்பதம் மண்ணில் இருக்க வேண்டும்.

கருவி கொண்டு அறுவடை செய்தல்

பெரும்பாலும் கதிர் அரிவாள் போன்ற வேளாண் கருவிகளைக் கொண்டு வேலையாட்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இதற்கு அநேக வேலையாட்கள் மற்றும் அதிக காலம்


தேவைப்படுகிறது. இது சிறிய அளவிலான வேளாண் செயல்முறைக்கு மட்டுமே பொருத்தமானதாகும்.


இயந்திரத்தால் அறுவடை செய்தல்

இந்த அறுவடை முறை பெரிய அளவிலான வேளாண் நிலங்களில் பயன்படுகிறது.


அறுவடை என்பது அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளான கதிரடித்தல் மற்றும் காற்றில் தூற்றுதல் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.


கதிரடித்தல்

தானியங்களை அவற்றின் பதர் அல்லது கனிகளிலிருந்து பிரித்தெடுக்கும் செயல் கதிரடித்தலாகும்.

கதிரடித்தபின், தானியங்களை உமி அல்லது பதரிலிருந்து நாம் பிரிக்க வேண்டும். அவ்வாறு, தானியங்ளைப் பிரித்தெடுக்கும் செயல் காற்றில் தூற்றுதல் எனப்படும்.


 

7. உணவு தானியச் சேமிப்பு

அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளின் முக்கிய அம்சம் சேமிப்பு ஆகும். ஏனெனில், பயிர்கள் பருவகாலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், ஆண்டு முழுவதும் மக்களுக்குத் தேவைப்படுகின்றன. ஆகையால்,முறையான சேமிப்பு மூலம் உற்பத்தியான உணவுப் பொருள்கள் பராமரிக்கப்பட வேண்டும். சேமிப்பதற்கு முன்னர் அறுவடை செய்யப்பட்ட தானியங்களில் ஈரப்பதம் இல்லாதவாறு அவை உலர்த்தப்பட வேண்டும். சேமித்துள்ள விதைகளில்


உள்ள ஈரப்பதம் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். எனவே, சேமிப்பதற்கு முன்னர் வெயிலில் விதைகளை நன்கு உலர்ந்த வேண்டும். உணவு தானியங்கள் சாக்குப் பைகளில் சேகரிக்கப்பட்டு பின்னர் சேமிப்புக் கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன. தானியங்ளை பெரிய அளவில் சேமிக்க சேமிப்புக் கலன் மற்றும் தானியக் கிடங்குகள் பயன்படுகின்றன. சேமிப்புக் கிடங்குகளில் சிறு பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளைக் குறைப்பதற்கு வேதியியல் தூவிகள் தெளிக்கப்படுகின்றன. இதற்கு புகையூட்டம் என்று வயர். நோய் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் சேமிக்கப்பட்டுள்ள தானியங்களை

இந்திய உணவுக் கழகம் (FCI) 1965ஆம் ஆண்டு ஜனவரி 14ல் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் உணவு தானியங்களை வழங்குதல், உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் வழங்கப்பட வேண்டிய மற்றும் வைப்பில் வைத்திருக்கவேண்டிய உணவு தானியத்தை நிர்வகித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும். தற்போது இதன் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது.

செயல்பாடு 4

உனது பகுதியில் உள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்கினைப் பார்வையிட்டு, உணவு தானியங்களைப் பாதுகாக்க, அங்கு பின்பற்றப்படும் முறைகளை அறிந்துகொள். உணவு தானியங்களைப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தலின் முக்கியத்துவம் பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.

அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நம் நாட்டில் அரசுக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் தானியங்கள் சேமிக்கப்படுகின்றன. உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், விதைகள் மற்றும் கால்நடைத் தீவனங்கள் ஆகியவை சேமித்து வைக்கப்பட வேண்டிய வேளாண் உற்பத்திப் பொருள்களாகும்.

Tags : Crop Production and Management | Chapter 21 | 8th Science பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 21 : Crop Production and Management : Basic Practices of Crop Production Crop Production and Management | Chapter 21 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை : பயிர்ப் பெருக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகள் - பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை