பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 21 : Crop Production and Management
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. மண்ணில்
விதைகளை இடும் செயல்முறையின் பெயர்
-------------
அ. உழுதல்
இ.பயிர்ப்பெருக்கம்
ஆ. விதைத்தல்
ஈ.பயிர்ச் சுழற்சி
விடை: ஆ) விதைத்தல்
2. மண்
பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை ----------------
அ. நீர்ப் பாசனம்
ஆ. பரப்பு நீர்ப் பாசனம்
இ. தெளிப்பு நீர்ப் பாசனம்
ஈ. சொட்டு நீர்ப் பாசனம்\
விடை: ஆ) பரப்பு நீர்ப் பாசனம்
3. பயிர்களைப்
பாதிக்கும் பூச்சிகளையும், சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்
அ. உயிரி - பூச்சிக் கொல்லிகள்
ஆ. உயிரி - உரங்கள்
இ. மண்புழுக்கள்
ஈ. வேம்பு இலைகள்
விடை: அ) உயிரி - பூச்சிக் கொல்லிகள்
4. திறன்மிக்க
நுண்ணுயிரிகளின் தயாரிப்பு எதில் பயன்படுவது இல்லை?
அ. விதை நேர்த்தி செய்தல்
ஆ. இலைத் தெளிப்பு
இ. மண் நேர்த்தி செய்தல்
ஈ.உயிரி-கொன்றுண்ணிகள்
விடை: ஆ) இலைத்தெளிப்பு
5. பின்வருவனவற்றுள்
பஞ்சகவ்யாவில் இல்லாதது எது?
அ. பசுவின் சாணம்
ஆ. பசுவின் சிறுநீர்
இ. தயிர்
ஈ. சர்க்கரை
விடை: ஈ) சர்க்கரை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஓர் இடத்தில் வளரக்கூடிய பயிர்களைப் பிடுங்கி வேறொரு வளரிடத்தில்
நடவு செய்யும் முறை நாற்று நடுதல் ஆகும்.
2. விரும்பாத இடத்தில் வளரும் தாவரத்தின் பெயர் களைகள்
3. களைகளைக் கொல்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்குப்
பயன்படும் வேதிப் பொருளின் பெயர் களைக் கொல்லிகள்
4 பாரம்பரிய விதைகள் தனது தனித்துவப் பண்புகளை
அதன் வழித்தோன்றலுக்குக் கடத்துகின்றன.
5. க்ரிஷி விஞ்ஞான கேந்த்ரா
மையங்கள் ICAR மற்றும் விவசாயிகளுக்கிடையேயான
இறுதி இணைப்பாகச் செயல்படுகின்றன.
6. அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும்பயிர் வகைகள் IARI
ஆல் உருவாக்கப்பட்டுள்ளன.
III. பொருத்துக.
உயிரி - பூச்சிக் கொல்லிகள் - வேப்பிலைகள்
உயிரி கொன்றுண்ணிகள் -
பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
உயிரி – உரங்கள் - வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துகிறது
உயிரி – சுட்டிக் காட்டிகள் - மண் வளத்தை மேம்படுத்தல்
உயிரி – பூச்சி விரட்டிகள் - சூழ்நிலையின் தரம்
விடைகள்
உயிரி - பூச்சிக் கொல்லிகள் - பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
உயிரி கொன்றுண்ணிகள் - வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துகிறது
உயிரி – உரங்கள் - மண் வளத்தை மேம்படுத்தல்
உயிரி – சுட்டிக் காட்டிகள் - சூழ்நிலையின் தரம்
உயிரி – பூச்சி விரட்டிகள் - வேப்பிலைகள்
IV. சுருக்கமாக விடையளி.
1. உழுதல்
- வரையறு.
விவசாயப் பயிர்களின் வேர்ப்பகுதிகளில் ஊட்டப்பொருட்கள்
கிடைப்பதற்கு மண்ணை மேல்கீழாக மாற்றி மற்றும் தளர்வடையச் செய்யும் முறை உழுதல் எனப்படும்.
2. விதைத்தலின்
வகைகளைப் பட்டியலிடுக.
அ) கைகளால் விதைத்தல் ஆ) உழுதால் விதைத்தல் இ)
ஊன்றுதல்
3. இலைப்பரப்பில்
தெளித்தல் என்றால் என்ன?
> இலையில் தெளிப்பு எனப்படுவது
திரவநிலை உரங்களை இலைகளில் நேரடியாக செலுத்தி தாவரங்களுக்கு ஊட்டமளிக்கும் நுட்பம்
ஆகும்.
> தாவரங்கள் அவசியமான கனிமங்களை
தாவரங்கள் இலைகளில் உள்ள இலைத் துளைகள் மூலமாக உறிஞ்ச முடிகிறது.
4. கிரிஷ்
விஞ்ஞான் கேந்திரா பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.
i. க்ரிஷி விஞ்ஞான் கேந்த்ரா ஒரு வேளாண் அறிவியல் நிலையமாகும்.
ii. இந்த மையம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) மற்றும்
விவசாயிகளுக்கு இடையேயான இறுதியான இணைப்பாக
செயல்படுகிறது.
iii. உள்ளுரில் வேளாண்மை ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பயன்படுத்துதல்
இவைகளில் நோக்கமாகும்.
iv. முதல் KVK 1974 ல் பாண்டிச்சேரியில் நிறுவப்பட்டது.
5. உயிரி
- சுட்டிக்காட்டிகள் என்றால் என்ன? மனிதருக்கு இவை எவ்வாறு உதவுகின்றன?
> சுற்றுச் சூழலின் தரம் சார்ந்த நிலைகளை வெளிப்படுத்தக்கூடிய ஓர் உயிரினம்
அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி சுட்டிகள் அல்லது உயிரியல் சுட்டிக்காட்டிகள் எனப்படும்.
> புவியில் ஏற்படும் மாற்றங்களை குறிப்பாக
பெருகி வரும் மக்கள் தொகை செயல்பாடுகளால் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களை புரிந்து கொள்ளவும்
பட்டியலிடவும் உயிரி சுட்டிகள் பயன்படுகிறது.
> மண்வளம் பற்றிய உயிரி சுட்டிக்காட்டிகள்
மண் அமைப்பு மேம்பாடு, ஊட்டப் பொருள் சேமிப்பு மற்றும் உயிரினங்களில் செயல்பாடுகளை
பற்றிய தகவல்களை அளிக்கிறது.
6. களையெடுத்தல்
என்பதன் பொருள் என்ன?
> விவசாய நிலத்தில் முக்கிய பயிர் வகைகளுடன்
பல விரும்பாத தாவரங்கள் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படும்.
> களை நீக்கப்படுதல் களையெடுத்தல் எனப்படும்.
களை நீக்கம் மிக முக்கியமான ஒரு செயலாகும்.
7. பயிர்ச்சுழற்சி
என்றால் என்ன?
இந்த முறையில் சம்மந்தப்பட்ட பயிர்கள் மற்றும்
ஒட்டுண்ணி களைகளை கட்டுப்படுத்த முறையான பயிர்ச் சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது.
8. பசுந்தழை
உரம் என்றால் என்ன?
விவசாயிகள் நாற்று நடுவதற்கு
முன்பாக வேம்பு, அவரை மற்றும் பல லெகுமினஸ் வகைத் பசுந்தாவரங்களை உழும் பொழுது மூழ்கச்
செய்து மண்ணின் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கச் செய்வது பசுந்தழை உரம் எனப்படும்.
V. விரிவாக விடையளி.
1. வேளாண்
செயல்முறைகளை விவரி.
i. காரிப் பயிர்கள் : (ஜூன் - செப்டம்பர்
மாதம் வரை) இந்த பயிர்கள் மழைக்காலங்களில் விதைக்கப்படுகிறது. எ.கா : நெல், சோளம்,
சோயா மொச்சை, நிலக்கடலை, பருத்தி போன்றவை காரிப்பயிர்களாகும்.
ii. ரபி பயிர்கள் : குளிர் காலங்களில் வளர்க்கப்படும் பயிர்களாகும்.
எ.கா : கோதுமை, பருப்பு, பட்டாணி, கடுகு
மற்றும் ஆளி விதை
iii. சயாடு பயிர்கள் : கோடைக்காலங்களில்
வளர்க்கப்படும் பயிர்களாகும்.
எ.கா : தர்பூசணி, வெள்ளரி பயன்பாட்டின்
அடிப்படையில் பயிர்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.
> உணவுப் பயிர்கள் : நெல் மற்றும் சோளம்
மனித பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகிறது.
> தீவன பயிர்கள் : கால்நடைகளுக்கு
தீவனமாகப் பயன்படுகிறது. மக்காச்சோளம் மற்றும் சிறு தானியங்கள்
> நார்ப் பயிர்கள் : கயிறு தயாரிக்க
உதவும் நார்கள் மற்றும் துணி ஆலை நார்கள் தயாரிக்க இந்த வகைப்பயிர்கள் பயன்படுகிறது.
எ.கா : பருத்தி, புளிச்சை
> எண்ணெய்ப் பயிர்கள் : மனித பயன்பாட்டிற்கு
அல்லது தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எண்ணெய் பயிர்கள் பயன்படுகிறது. எ.கா : நிலக்கடலை,
எள்
2. நீர்ப்பாசன
முறைகளைப் பற்றி விளக்குக.
நீர்ப் பாசன முறைகள் : அ) பாரம்பரிய முறைகள்,
ஆ) நவீன முறைகள்
அ) பாரம்பரிய முறைகள் :
> இங்கு ஒரு விவசாயி கிணற்றிலிருந்து அல்லது
நீர் கால்வாயிலிருந்து தானாகவோ அல்லது எருதுகளின் உதவியுடனோ நீரை இழுத்து விவசாய நிலத்தில்
பாய்ச்சுகிறார்.
> டீசல், உயிர் வாயு, மின்சாரம் மற்றும் சூரிய
ஆற்றல் இந்த விசையியக்க கருவிகளை இயக்க தேவையான சில முக்கிய ஆற்றல் ஆதாரங்களாகும்.
> இம்முறை மிக மலிவானது என்பது
இம்முறையின் முக்கியமான நிறையாகும்.
> சமமற்ற பரவலினால் இதனுடைய
பயன் மிக குறைவானது. மேலும் அதிகமான நீரிழப்பிற்கு காரணமாகிறது.
ஆ) நவீன முறைகள் : நவீன முறைகள் இரண்டு அமைப்புகளை கொண்டது. 1) தெளிப்பு நீர் பாசன அமைப்பு,
2) சொட்டு நீர் பாசன அமைப்பு
தெளிப்பு நீர் பாசன அமைப்பு :
> தெளிப்பு நீர் பாசனம் அதன்
பெயர் சுட்டுவதைப் போல் பயிரின் மேல் தெளிக்கிறது மற்றும் சரியான பரவலுக்கு உதவுகிறது.
> நீர் பற்றாக்குறை உள்ள
பகுதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க தக்க முறையாகும்.
சொட்டு நீர் பாசனம் :
நீர் குழாயினை பயன்படுத்தி சரியாக வேர் பகுதியில்
நீரானது சொட்டு சொட்டாக விடப்படுகிறது
3. களை
என்றால் என்ன? களைக் கட்டுப்பாட்டின் பல்வேறு முறைகளை விளக்குக.
களை : விவசாய நிலத்தில் முக்கிய பயிர்
வகைகளுடன் பல விரும்பாத தாவரங்கள் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படும்.
களைக்கட்டுப்பாட்டின் பல்வேறு முறைகள் :
1. இயந்திர முறைகள் : இயந்திர முறை களைகள்
நீக்கப் பயன்படும் ஒரு பொதுவான முறையாகும். களை கொத்தி உதவியுடன் கையினால் நீக்குதல்
அல்லது களையெடுத்தல் ஒரு பழமையான முறையாகும்.
2. உழுதல் முறைகள் : அனைத்து வகை களைகளையும்
அழிப்பதற்கான ஒரு வகை செயல் முறையாகும். ஆழமாக உழுவதால் களைகள் மண்ணில் புதைக்கப்படுகிறது
அல்லது சூரிய வெப்பத்தில் இடப்படுகிறது.
3. பயிர்ச் சுழற்சி முறை : இந்த முறையில்
சம்மந்தப்பட்ட பயிர்கள் மற்றும் ஒட்டுண்ணி களைகளை கட்டுப்படுத்த முறையான பயிர்ச் சுழற்சி
முறை பின்பற்றப்படுகிறது.
4. கோடை உழவு : குளிர் பருவ அறுவடைக்குப்
பிறகு நடக்கும் ஆழமான உழுதல் மற்றும் கோடை காலங்களில் களைகளின் தரைகீழ்ப் பகுதிகளை
தீவிர சூரிய ஒளிக்கு உட்படுத்துதல் ஓராண்டு மற்றும் பல்லாண்டு களைகளை அழிப்பதற்கு பயனுள்ளதாக
உள்ளது.
5. உயிரியல் முறை களைக் கட்டுப்பாடு : இந்த முறையில் பூச்சிகள் மற்றும் நோயூக்கிகள் போன்ற உயிர் காரணிகள்
களைகளின் கட்டுப்பாட்டிற்கு பயன்படுகிறது.
6. வேதியியல் முறைகள் : களைகளை கொல்வதற்கு
அல்லது அவற்றின் வளர்ச்சியை தடுப்பதற்கு பயன்படும் வேதிப்பொருட்கள் களைக் கொல்லிகள்
எனப்படும்.
7. ஒருங்கிணைந்த களை மேலாண்மை : இது பலவகை
உழவியல் செயல்பாடுகளைக் கொண்டது. ஏதேனும் ஒரு களை கட்டுப்பாட்டு நுட்பம் குறைக்கப்படும்
அளவிற்கு களை மேலாண்மையில் களைக் கொல்லி பயன்படுகிறது.