பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வேளாண் செயல்முறைகள் | 8th Science : Chapter 21 : Crop Production and Management
வேளாண் செயல்முறைகள்
வேளாண்மை எப்பொழுதும் நமது நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக
இருந்து வருகிறது. வளர்ந்து வரும் தேவையினைச் சமாளிப்பதற்காக பசுமைப் புரட்சிக்குப்
பின்னர் பல்வேறு வகையான பயிர்த் தாவரங்களை நாம் சாகுபடி செய்து வருகிறோம். நமது நாட்டில்
மூன்று வகையான பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.
காரிப் பயிர்கள்
மழைக்காலங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) வளர்க்கப்படும்
பயிர்கள் காரிப் பயிர்கள் எனப்படும். நெல், சோளம், சோயா மாச்சை, நிலக்கடலை, பருத்தி
ஆகியவை காரிப் பயிர்களாகும்.
ரபி பயிர்கள்
குளிர் காலங்களில் வளர்க்கப்படும் பயிர்கள் ரபி பயிர்கள் எனப்படும்.
கோதுமை, பருப்பு, பட்டாணி, கடுகு, ஆளி விதை போன்றவை ரபி பயிர்களாகும்.
சயாடு பயிர்கள்
கோடை காலங்களில் வளர்க்கப்படும் பயிர்கள் சயாடு பயிர்கள் எனப்படும்.
முலாம்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவை கோடைகாலப் பயிர்களாகும்.
பயன்பாட்டின் அடிப்படையில் பயிர்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
உணவுப் பயிர்கள்
நெல் மற்றும் சோளம் மனிதப் பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகின்றன.
தீவினப் பயிர்கள்
இவை, கால்நடைகளுக்கு தீவினமாகப் பயன்படுகின்றன. எ.கா. மக்காச்சோளம்,
சிறு தானியங்கள்.
நார் பயிர்கள்
இவை, கயிறு தயாரிக்கும் ஆலைகள் மற்றும் துணி ஆலைகளுக்குத் தேவையான
இழைநார்கள் தயாரிக்க பயன்படுகின்றன. எ.கா பருத்தி, சணல்.
எண்ணெய் பயிர்கள்
மனிதப் பயன்பாடு மற்றும் தொழிற்சாலைப் பயன்பாட்டிற்காக எண்ணெய்
பயிர்கள் பயன்படுகின்றன. எ.கா. நிலக்கடலை மற்றும் எள்.
அலங்காரத் தாவரங்கள்
நிலத்தில் இயற்கை அழகுத் தோட்டங்களை மேம்படுத்த இவை வளர்க்கப்படுகின்றன.
எ.கா. குரோட்டன்,யூபோர்பியா.
வாழை
மற்றும் மாங்கனி உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. கோதுமை, மற்றும்
நெல் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
செயல்பாடு 1