Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | பயிர்ச் சுழற்சி

பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பயிர்ச் சுழற்சி | 8th Science : Chapter 21 : Crop Production and Management

   Posted On :  30.07.2023 11:23 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

பயிர்ச் சுழற்சி

ஒரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் பலவகைப் பயிர்களை வரிசையாகப் பயிரிடும் முறை பயிர்ச் சுழற்சி எனப்படும்.

பயிர்ச் சுழற்சி

ஒரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் பலவகைப் பயிர்களை வரிசையாகப் பயிரிடும் முறை பயிர்ச் சுழற்சி எனப்படும். ஒற்றைப் பயிர் வளர்ப்பு மற்றும் கூட்டுப் பயிர் வளர்ப்பு ஆகியவை பயிர் வளர்ப்பின் இரு முறைகளாகும். ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையில் ஒரே இனத்தாவங்கள் ஒரே இடத்தில் அடுத்தடுந்த ஆண்டுகளில் பயிரிடப்படுகின்றன. ஓரே நிலத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட பயிர்கள் சம காலத்தில் சாகுபடி செய்யப்படுவது கூட்டுப் பயிர் வளர்ப்பு எனப்படும்.


பயிர்ச் சுழற்சி பல நன்மைகளைக் கொண்டுள்ளது. லெகூம் போன்ற பல பயிர்கள் பயிர்ச் சுழற்சியில் அடுத்தடுத்து பயிரிடப்படும் பயிர்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கின்றன. ஆழமற்ற வேருடைய பயிர்கள், ஆழமான வேருடைய பயிர்கள் மற்றும் மீண்டும் மண்வளத்தைப் புதுப்பிக்கக் கூடிய பயிர்கள் (லெகூம்) ஆகியவற்றை பயிர்ச் சுழற்சியில் ஈடுபடுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தை அதிகரிக்க முடியும். லெகூம் அல்லாத பயிர்களைத் தொடர்ந்து லெகூம்


பயிர்கள் பயிரிடப்படுவதால் அடுத்தடுத்து வரும் பயிர்களுக்கு வளிமண்டல நைட்ரஜன் கிடைக்கிறது. நல்லதொரு கனிம மண்ணில் ஊட்டச் சமநிலையைக் காத்திட இது உதவுகிறது. ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையைவிட கூட்டுப் பயிர் வளர்ப்பு முறையில் களைகள் குறைவாக உள்ளன.

லெகுமினோஸ் தாவரங்கள் தமது வேர் முடிச்சுகளில் காணப்படும் ரைசோபியம் பாக்டீரியாக்களுடன் லெகூம்கள் கூட்டுயிர் வாழ்க்கை வாழ்கின்றன. இந்தத் தாவரங்கள் வளிமண்டலத்தில் காணப்படும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் திறன் பெற்றவை. இத்தாவரத்தின் கனிகள் எனப்படுகின்றன. குதிரை மசால், குளோவர், பட்டாணி, அவரை, மைசூர் பருப்பு, லுப்பின்ஸ், காரோப் சோயா, வேர்க்கடலை போன்றவை இவற்றிற்கு உதாரணமாகும். இந்த வகைத் தாவரங்கள் மண்ணில் நைட்ரஜனின் அளவை அதிகரிப்பதற்காக பயிர்ச் சுழற்சியில் ஈடுபடுத்தப் படுகின்றன.

Tags : Crop Production and Management | Chapter 21 | 8th Science பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 21 : Crop Production and Management : Rotation of Crops Crop Production and Management | Chapter 21 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை : பயிர்ச் சுழற்சி - பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை