அறிமுகம் | கணக்கு - புள்ளியியல் | 9th Maths : UNIT 8 : Statistics

   Posted On :  23.09.2023 02:20 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்

புள்ளியியல்

கற்றல் விளைவுகள் • சராசரியின் பல்வேறு வகைகளை நினைவுகூர்தல். • வகைப்படுத்தப்படாதத் தரவுகளின் சராசரி, இடைநிலை அளவு மற்றும் முகடு ஆகியவற்றைக் காணும் வழிமுறைகளை நினைவுகூர்தல். • வகைப்படுத்தப்பட்டத் தரவுகளின் சராசரி, இடைநிலை அளவு மற்றும் முகடு ஆகியவற்றைக் காணுதல்.

அலகு  − 8

புள்ளியியல்


"புள்ளியியல் புரிதல் இல்லையெனில் ஒவ்வாக் கருத்துக்கள் மறைக்கப்பட்டுவிடும்" – ஆல்பர்ட் பெர்டில்சன்

 

சர் ரொனால்ட் ஆயில்மர் பிஷர் (Sir Ronald Aylmer Fisher) ஓர் ஆங்கிலேயப் புள்ளியியலாளர் மற்றும் உயிரியலாளர் ஆவார். மேலும் சோதனை வடிவமைப்பு மற்றும் நவீனப் புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது விவசாயம் சார்ந்த ஆராய்ச்சியானது பல்லாயிரக்கணக்கானவர்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்றியது. லின்னியன் சமுதாயத்தால் வழங்கப்படும், லண்டனின் பெருமைமிகு டார்வின்வாலஸ் பதக்கமானது இவருக்கு 1958 இல் வழங்கப்பட்டது.


சர் ரொனால்ட் ஆயில்மர் பிஷர் (கிபி (பொஆ) 1890  − 1962 )

 

கற்றல் விளைவுகள்

சராசரியின் பல்வேறு வகைகளை நினைவுகூர்தல்.

வகைப்படுத்தப்படாதத் தரவுகளின் சராசரி, இடைநிலை அளவு மற்றும் முகடு ஆகியவற்றைக் காணும் வழிமுறைகளை நினைவுகூர்தல்.

வகைப்படுத்தப்பட்டத் தரவுகளின் சராசரி, இடைநிலை அளவு மற்றும் முகடு ஆகியவற்றைக் காணுதல்.

 

அறிமுகம்

முடிவுகளை எடுப்பதற்காகத் தரவுகளைத் திரட்டுதல், தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் விளக்குதல் பற்றிய அறிவியலே புள்ளியியல் ஆகும். நாம் அன்றாடம் கடந்து செல்கின்ற பல்வேறு எண் மற்றும் தரம் சார்ந்த தரவுகள் நம் வாழ்வில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தரவுகளைத் தொகுத்தல் புள்ளியியலின் அடிப்படையாகும். இங்குத் தரவுகள் என்பது எண்ணியல் சார்ந்து திரட்டப்பட்ட உண்மைகள் ஆகும். நாம் அத்தரவுகளை, ஆய்வு செய்து முடிவுகளை எடுக்கின்றோம். அவ்வாறு முடிவுகளை எடுப்பதற்குப் புள்ளியியல் முறைகள் கருவியாகப் பயன்படுகின்றன.


வாடிக்கயாளர் மனநிறைவு கணக்கெடுப்பு

தமிழ்நாடு உணவகம்

உங்கள் மனநிறைவை எங்களுக்கு தெரிவியுங்கள்

மிகச் சிறப்பு

சிறப்பு

பரவாயில்லை

சரியில்லை

மிக மோசம்

இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்கணிப்பு  − 2018

.நா . − 7.2%

ஐஎம்எப்  − 7.4%

உலக வங்கி  − 7.3%

மோர்கன் ஸ்டேன்லி – 7.5%

மூடிஸ்  − 7.6%

எச்எஸ்பிசி  − 7%

பேங்க் ஆப் அமெரிக்கா  − 7.2%

மெரில் லின்ச்  − 7.5%

கோல்ட்மேன் சேக்  − 8%

 

Tags : Maths அறிமுகம் | கணக்கு.
9th Maths : UNIT 8 : Statistics : Statistics Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல் : புள்ளியியல் - அறிமுகம் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்