Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பாடச்சுருக்கம்
   Posted On :  26.12.2023 01:21 am

11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை

பாடச்சுருக்கம்

அழுத்தம் (P), கனஅளவு (V), வெப்பநிலை (T) மோல்களின்எண்ணிக்கை (n) ஆகிய நான்கு தனித்த மாறிகளுக்கு இடையேயான தொடர்பினைக் கொண்டு ஒருவாயுவின் நிலையினை நன்கு வரையறுக்கலாம்.

பாடச்சுருக்கம்

அழுத்தம் (P), கனஅளவு (V), வெப்பநிலை (T) மோல்களின்எண்ணிக்கை (n) ஆகிய நான்கு தனித்த மாறிகளுக்கு இடையேயான தொடர்பினைக் கொண்டு ஒருவாயுவின் நிலையினை நன்கு வரையறுக்கலாம். இந்த அளவீடுகளுக்கு இடையேயான தொடர்பானது பல்வேறு வாயுவிதிகளின் படி பின்வருமாறு சுருக்கமாக தரப்படுகிறது.


அனைத்து வெப்ப அழுத்த நிலைகளிலும் PV = nRT என்னும் சமன்பாட்டிற்கு உட்பட்டு செயல்படும் வாயுக்கள் நல்லியல்பு வாயுக்கள் எனப்படும். நடைமுறையில் எந்த ஒரு வாயுவும் நல்லியல்பு வாயு அல்ல.

வாயுக்கள் அதிகவெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தத்தில் நல்லியல்பு தன்மையை பெற்று விளங்கும். இயல்பு வாயுக்களுக்கு பொருந்தும் வகையில் வாண்டர் வால்ஸ் நல்லியல்பு வாயுச்சமன்பாட்டினை பின்வருமாறு மாற்றி அமைத்தார்.

[ P + (an2 / V2) ] (V – nb) = nRT


எந்த ஒரு வெப்பநிலைக்கு மேலே அதிக அழுத்தத்திலும் கூட ஒரு வாயுவினை, திரவமாக்க இயலாதோ அவ்வெப்பநிலை நிலைமாறு வெப்பநிலை (TC) என வரையறுக்கப்படுகிறது. 1 மோல் வாயுவினை, அதன் நிலைமாறு வெப்பநிலையில், திரவமாக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச அழுத்தம், நிலைமாறு அழுத்தம் (PC) என வரையறுக்கப்படுகிறது. 1 மோல் வாயுவானது, அதன் நிலை மாறு அழுத்தம் (PC) மற்றும் நிலை மாறு வெப்பநிலையில் (TC), அடைத்துக் கொள்ளும் கனஅளவு, நிலைமாறு கனஅளவு (VC) என வரையறுக்கப்படுகிறது. நிலைமாறு மாறிலிகள் வாண்டர் வால்ஸ் மாறிலிகளோடு கொண்டுள்ள தொடர்பு கீழ்கண்டவாறு தரப்படுகின்றது.

TC = 8ab / 27 Rb2, PC = a / 27b2  மற்றும் VC = 3b


அழுத்தப்பட்ட வாயுவானது, ஒரு மிகச் சிறிய துளையின் வழியே, குறைந்த அழுத்தப்பகுதிக்கு செலுத்தப்படும் போது குறிப்பிடத்தக்க அளவில் வாயு குளிர்ச்சியடைகிறது. இவ்விளைவு ஜீல் தாம்சன் விளைவு எனப்படும். இவ்விளைவு வாயுக்களைத் திரவமாக்கலில் பயன்படுகிறது.


கருத்து வரைபடம்



இணையச்செயல்பாடு

வாயுக்களின் பண்புகள்

இச்செயல் முறையைப் பயன்படுத்தி V வாயுக்களின் T, Pக்களுக்கு இடையிலான தொடர்புகளை அறியலாம் மற்றும் வாயு விதிகளை மெய்ப்பிக்கலாம்.

https://phet.colorado.edu/en/simulation/ gas-properties உரலிக்குச்செல்க (அல்லது) வலது பக்கமுள்ள விரைவுத் துலக்கக் குறியீட்டினை (QR Code) ஸ்கேன் செய்க.

நிலை t: இணையப்பக்கத்தினைத் திறந்து கொடுக்கப்பட்ட உரலியைத் (URL) தட்டச்சு செய்க அல்லது விரைவுத் துலக்கக் குறியீட்டினை ஸ்கேன் செய்க. இணையப் பக்கத்தில் வாயுப் பண்புகள் என்னும் குறும்புலனத்தைச் சொடுக்குக., அதில் கீழ்க்காணும் படத்தில் உள்ளது போன்ற 'வாயுப் பண்புகள்' என்னும் ஜாவா குறும்புலனத்தைக் காணலாம்..

செயல்முறைகள்:

1. பம்பின் கைப்பிடியைப் (5) பயன்படுத்தி சிறிது வாயு மூலக்கூறுகளை அறைக்குள் (2) செலுத்தவும்

2. அறைக்குள்ளிருக்கும் வாயு மூலக்கூறுகளின் வெப்பநிலை (1) மற்றும் அழுத்தம் (6) ஆகியவற்றை உரிய அளவிகளைப் பயன்படுத்திக் கண்காணிக்கலாம்.

3. அறையின் கொள்ளளவை அதன் இடதுபக்கச் சுவரை (3) நகர்த்தி மாற்றியமைக்கலாம்.

4. நழுவியைப் (7) பயன்படுத்தி வெப்பமாக்கியோ அல்லது குளிரூட்டியோ அறையின் வெப்பநிலையை மாற்றியமைக்கலாம்.

5. கட்டத்திற்குள் (4) தகுந்த தெரிவுகளை மேற்கொண்டு மூன்று பண்புகளுள் ஏதேனும் ஒன்றை மாறிலியாக வைத்துக்கொள்ளலாம்.

வாயுக் கோட்பாடுகளை மெய்ப்பித்தல்:

மேற்காண் செயல்முறைகளைப் பயன்படுத்தி வாயுக் கோட்பாடுகளை அறிந்துகொள்ளலாம். பாயில் விதியை அறிந்துகொள்ள, வெப்பநிலையை மாறிலியாக (4) வைத்துக்கொண்டு சிறிது வாயு மூலக்கூறுகளை (5) உட்செலுத்தி, அதை மாறிலியாக வைத்துக்கொள்ளவும். இப்பொழுது அறையின் இடது பக்கச் சுவற்றை (3) நகர்த்தி கொள்ளளவைக் குறைத்து வாயுவின் அழுத்தம் அதிகரிப்பதைக் காணலாம். அவ்வாறே பிற இரண்டு வாயுக் கோட்பாடுகளையும் மெய்ப்பிக்கலாம்.


11th Chemistry : UNIT 6 : Gaseous State : Summary: Gaseous State (Chemistry) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை : பாடச்சுருக்கம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை