Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 15 : The World after World War II

   Posted On :  12.07.2022 02:42 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

பாடச் சுருக்கம்

பொருளாதார உதவி, இராணுவ உடன்படிக்கைகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவப் போட்டியிட்டுக் கொண்டிருந்த வல்லரசுகளின் உத்திகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

பாடச் சுருக்கம்

• இரண்டாம் உலக போரின் பிந்தைய சூழலில், நிலைகுலைந்து போன மேற்கு ஐரோப்பியப் பொருளாதாரமும், வல்லரசுகளாக எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த அமெரிக்கா, சோவியத் ரஷ்யா ஆகியவற்றுடன் இரு - துருவ உலகம் உருவானதும் விளக்கப்பட்டுள்ளன.

• பொருளாதார உதவி, இராணுவ உடன்படிக்கைகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவப் போட்டியிட்டுக் கொண்டிருந்த வல்லரசுகளின் உத்திகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

• அமெரிக்காவின் மார்ஷல் திட்டம், அதற்குப் பதிலாக சோவியத் ரஷ்யாவின் மோலோடோவ் திட்டம், நேட்டோ உருவாக்கப்படுதல், அமெரிக்காவின் இவ்வெதிர்ப்புக்கு எதிர்வினையாக சோவியத் ரஷ்யா தனது நட்பு நாடுகளுடன் வார்சா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியன அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

• மூன்றாவது உலக நாடுகளும் அவைகளின் அணிசேரா இயக்கமும் விவரிக்கப்பட்டுள்ளன.

• ஐக்கிய நாடுகள் சபையும் உலகளாவிய பிரச்சனைகளை குறிப்பாக கொரியப் பிரச்சனை சூயஸ் கால்வாய் சிக்கல், அராபிய இஸ்ரேல் போர் ஆகியவற்றைத் தீர்த்து வைப்பதில் அதுவகித்த பங்கு ஆகியவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

• ஐரோப்பிய ஒற்றுமையின் பரிணாம வளர்ச்சியின் உச்சமாக ஐரோப்பியப் பொருளாதார சமுதாயம் நிறுவப்பட்டதும் அது ஐரோப்பிய ஒன்றியமாக மாறிய வளர்ச்சிப் போக்கும் விவரிக்கப்பட்டுள்ளது.

• சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் பனிப்போர் முடிவுற்றது பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

Tags : The World after World War II | History இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு.
12th History : Chapter 15 : The World after World War II : Summary The World after World War II | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : பாடச் சுருக்கம் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்