இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 15 : The World after World War II
பாடச் சுருக்கம்
• இரண்டாம் உலக போரின் பிந்தைய சூழலில், நிலைகுலைந்து
போன மேற்கு ஐரோப்பியப் பொருளாதாரமும், வல்லரசுகளாக எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த அமெரிக்கா,
சோவியத் ரஷ்யா ஆகியவற்றுடன் இரு - துருவ உலகம் உருவானதும் விளக்கப்பட்டுள்ளன.
• பொருளாதார உதவி, இராணுவ உடன்படிக்கைகள் ஆகியவற்றின்
மூலம் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவப் போட்டியிட்டுக் கொண்டிருந்த வல்லரசுகளின் உத்திகள்
விவாதிக்கப்பட்டுள்ளன.
• அமெரிக்காவின் மார்ஷல் திட்டம், அதற்குப்
பதிலாக சோவியத் ரஷ்யாவின் மோலோடோவ் திட்டம், நேட்டோ உருவாக்கப்படுதல், அமெரிக்காவின்
இவ்வெதிர்ப்புக்கு எதிர்வினையாக சோவியத் ரஷ்யா தனது நட்பு நாடுகளுடன் வார்சா ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது ஆகியன அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
• மூன்றாவது உலக நாடுகளும் அவைகளின் அணிசேரா
இயக்கமும் விவரிக்கப்பட்டுள்ளன.
• ஐக்கிய நாடுகள் சபையும் உலகளாவிய பிரச்சனைகளை
குறிப்பாக கொரியப் பிரச்சனை சூயஸ் கால்வாய் சிக்கல், அராபிய இஸ்ரேல் போர் ஆகியவற்றைத்
தீர்த்து வைப்பதில் அதுவகித்த பங்கு ஆகியவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
• ஐரோப்பிய ஒற்றுமையின் பரிணாம வளர்ச்சியின்
உச்சமாக ஐரோப்பியப் பொருளாதார சமுதாயம் நிறுவப்பட்டதும் அது ஐரோப்பிய ஒன்றியமாக மாறிய
வளர்ச்சிப் போக்கும் விவரிக்கப்பட்டுள்ளது.
• சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் பனிப்போர்
முடிவுற்றது பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.