Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவின் விவசாயக்கொள்கை

பொருளியல் - இந்தியாவின் விவசாயக்கொள்கை | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition

   Posted On :  27.07.2022 05:38 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

இந்தியாவின் விவசாயக்கொள்கை

விவசாயப் பொருள்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயக் கொள்கை 2018இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கை பெரும்பாலான கரிம மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது

இந்தியாவின் விவசாயக்கொள்கை

விவசாயப் பொருள்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயக் கொள்கை 2018இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கை பெரும்பாலான கரிம மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது

ஒரு நாட்டின் விவசாயக் கொள்கையானது பெரும்பாலும் விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் விவசாயிகளின் வருமான நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். இந்தக் கொள்கை விவசாயத்துறையின் அனைத்து வட்டங்களிலும், விரிவான வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் பின்வருமாறு.


1. உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல்

இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கிய நோக்கமானது வீரியவித்து விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற உள்ளீடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும்.


2. ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை

வேளாண் கொள்கையானது பொதுவாக வேளாண்மையின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலமும், குறிப்பாக சிறிய மற்றும் ஓரளவு வைத்திருக்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டதை அதிகரிப்பதாகும்.


3. ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல்

ஏழை விவசாயிகளுக்கு நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்கள் செய்தல், இடைத்தரகர்களை ஒழித்தல் போன்றவற்றின் மூலம் ஏழை மற்றும் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே விவசாயக் கொள்கையாகும்.


4. விவசாயத் துறையை நவீனமயமாக்குதல்

விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் உயர் ரக விதைகள் (HYV) விதைகள், உரங்கள் போன்ற மேம்பட்ட விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.


5. சுற்றுச்சூழல் சீரழிவு

இந்தியாவின் விவசாயக் கொள்கை இந்திய விவசாயத்தின் அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரி செய்யும் மற்றொரு நோக்கத்தையும் கொண்டுள்ளது.


6. அதிகாரத்துவ தடைகளை நீக்குதல்

விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது, இதனால் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.


Tags : Economics பொருளியல்.
10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition : Agricultural Policy in India Economics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து : இந்தியாவின் விவசாயக்கொள்கை - பொருளியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து