உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | பொருளியல் - வாங்கும் திறன் | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition
வாங்கும் திறன்
வாங்கும் திறன் என்பது
ஒரு அலகு பணம் மூலம் வாங்கக் கூடிய பொருள்கள் அல்லது சேவைகளின் அளவின்
அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பு ஆகும். விலை ஏறும் போது
வாங்கும் திறன் குறைகிறது. விலை குறையும் போது வாங்கும் திறன் அதிகரிகிறது.
இந்தியாவில் மக்கள் தொகை
வளர்ச்சி விகிதம் 1000க்கு 1.7 ஆக உள்ளது. அதிக மக்கள் தொகை அதிக தேவைக்கு
வழிவகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை. எனவே சாதாரண விலை நிலை
அதிகமாக இருக்கும். எனவே இது குறிப்பாக கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை
பாதிக்கிறது.
மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் நிலையான வளர்ச்சியும், இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சி வாய்ப்புகளும் இருந்த
போதிலும், அத்தியாவசிய பொருள்களின் விலையில் நிலையான அதிகரிப்பு
ஏற்பட்டுள்ளது. விலைகளின் தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை
மக்களை மோசமாகப் பாதிக்கிறது.
பொருள்களுக்கான தேவை
அதிகரிக்கும் போது, பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. அதனால் வாங்கும்
சக்தி பாதிக்கப்படுகிறது.
விலை அதிகரிக்கும் போது, வாங்கும்
திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது.
பொருள்களின் உற்பத்தி
மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருள்களின் விலை அதிகரிக்கிறது. ஆகையால் வாங்கும் திறன்
பாதிக்கப்படுகிறது.
6. வறுமை மற்றும் சமத்துவமின்மை
இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய ஏற்றதாழ்வு உள்ளது. 10% இந்தியர்களுக்கு சொந்தமான வருமானம் மற்றும் சொத்துக்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது சமுதாயத்தில் வறுமை நிலையை அதிகரிக்க வழிவகுக்கிறது. வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
வாங்கும் சக்தி சமநிலை (Purchasing Power
Parity)
வாங்கும்
சக்தி சமநிலை (PPP) என்பது வாங்கும் சக்தி தொடர்பான ஒரு
கருத்தாகும். இது ஒரு பொருளாதாரக் கோட்பாடாகும். ஒரு பொருளின் விலையுடன் சரி
செய்யப்பட வேண்டிய தொகையை மதிப்பிடுகிறது.
நாடுகளின்
வருமான நிலைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான பிற தொடர்புடைய பொருளாதாரத்
தரவு அல்லது பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சாத்தியமான விகிதங்களை ஒப்பிடுவதற்கு
வாங்கும் சக்தி சமநிலையை பயன்படுத்தலாம். சமீபத்தில் வாங்கும் சக்தி சமநிலையின்
அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. சீனா மிகப்பெரிய
பொருளாதாரமாக மாறி, அமெரிக்காவை இரண்டாவது இடத்திற்கு
தள்ளியுள்ளது.