உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | பொருளியல் | சமூக அறிவியல் - குறுகிய விடை தருக. | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition
V. குறுகிய விடை தருக.
1. FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.
“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும்,
போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான
உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும்போது,
அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவுப் பாதுகாப்பு
இருக்கிறது.” (FAO, 2009)
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படை
கூறுகள் யாவை?
• கிடைத்தல்,
• அணுகல் மற்றும்
• உறிஞ்சுதல் ஆகும்.
3. பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின்
(FCI) யின் பங்கு என்ன?
• பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பருவ காலத்தின் தொடக்கத்தில்
அறிவிக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்டதானியங்களை
இந்திய உணவுக் கழகம் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது.
• இந்திய உணவுக் கழகம் மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கினை அமைத்து அறுவடை
காலத்தில் உணவு தானியங்களைப் பெற்று இருப்பில் வைத்து அதனை ஆண்டு முழுவதும் வழங்குகிறது.
4. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
• உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது.
• உயர் ரக விதைகளான அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட
பகுதியில் உற்பத்தியை அதிகரித்தது.
• முக்கிய தானிய பயிர்களின் விளைச்சலும் அதிகரித்தது.
5. தமிழ் நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை
எழுதுக.
• புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத் திட்டம்.
• பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.
• தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
• மதிய உணவுத் திட்டம்.