உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து | பொருளியல் - வறுமையின் பல பரிமாணத்தின் இயல்பு (Multi-dimensional Nature of Poverty) | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition
வறுமையின் பல பரிமாணத்தின் இயல்பு (Multi-dimensional Nature of Poverty)
பல பரிமாண வறுமை
குறியீடு (MPI) ஆனது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத்திட்டம் (UunitedNations Development Programme) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு
முனைவு (Oxford Poverty and
Human Development Initiative) ஆகியவற்றால்
2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல பரிமாண வறுமை குறியீட்டின்
அடிப்படை தத்துவமும், முக்கியத்துவமும் என்னவென்றால், வறுமை
என்பது ஒற்றை பரிமாணமல்ல, அது பல பரிமாணங்களைக் கொண்டது என்ற கருத்தை
அடிப்படையாகக் கொண்டது.
உடல் நலம், கல்வி, வாழ்க்கைத்
தரம், வருமானம், அதிகாரமளித்தல், பணியின்
தரம் மற்றும் வன்முறையினால் அச்சுறுத்தப்படுதல் போன்ற ஏழை மக்களின் அனுபவத்தை
இழக்கும் பல காரணிகளால் பல பரிமாண வறுமை உருவாகிறது.
கடந்த பத்து ஆண்டுகளாக, வறுமைக் குறைப்பில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை உயர் வறுமை மாவட்டங்கள் (வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகையில் 40% க்கும் அதிகமானோர்), மிதமான ஏழை மாவட்டங்கள் (30% முதல் 40% வரை) மற்றும் குறைந்த அளவிலான வறுமை மாவட்டங்கள் (30%க்கும் குறைவு) ஆகும்.
1994க்குப் பிறகு,
தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில்
வறுமை படிப்படியாகக் குறைந்துள்ளது, மற்றும் இந்தியாவில் அதன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்
போது சிறிய ஏழ்மைப் பங்கினைக் கொண்டுள்ளது. 2005க்குப்
பிறகு, இந்தியாவில் பல மாநிலங்களை விட வறுமைக் குறைப்பு
தமிழ்நாட்டில் வேகமாக உள்ளது. 2014-2017 வரையிலான காலங்களில் வறுமை ஒழிப்புத் திட்டங்களில்
தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தற்போது,
இந்திய அரசு வறுமையை ஒழிக்க பல கொள்கைகளையும், திட்டங்களையும்
செயல்படுத்துகிறது.
இந்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்ந்து இருந்தால் மாநிலத்தின் வறுமையை முற்றிலுமாக ஒழிக்கலாம். எதிர்காலத்தில் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாதிரி மாநிலமாக மாற வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின்
அதிக மற்றும் குறைவான MPI மாவட்டங்கள்