சுற்றுச்சூழல் பிரச்சினைகள் - வேளாண் வேதிப் பொருட்களும் அதன் விளைவுகளும் | 12th Botany : Chapter 8 : Environmental Issues
வேளாண் வேதிப் பொருட்களும் அதன் விளைவுகளும்
வேளாண் வேதி பொருட்களை வேளாண் மேலாண்மை மற்றும்
பயிரிடப்படும் பகுதிகளில் பயன்படுத்துவது சுற்றுச்சூழலின் முக்கியப் பிரச்சினைகளில்
ஒன்றாகும். வேளாண் வேதிப்பொருட்கள் எனப்படுவது உரங்கள், சுண்ண க்கலப்பு மற்றும் அமிலமாக்கும்
காரணிகள், மண் பாங்குபடுத்தும் பொருட்கள் (soil conditioners), பூச்சிக் கொல்லிகள்
மற்றும் விலங்கு வளர்ப்பில் உபயோகப்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் ஆகும்.
அதிகப்படியான உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப்
பயன்படுத்துவது நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு குடிக்க இயலாததாகவும், இறுதியாக மண்ணின்
வளத்தையும் பாதிக்கிறது. பெரும்பாலான வேதிய உரங்கள் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை வேறுபட்ட அளவில்
கொண்டிருக்கிறது. மண்ணின் அமிலத்தன்மை நுண்ணியிரிகளை பாதிப்பதன் மூலம் கார்பன் மற்றும்
நைட்ரஜன் சுழற்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோடு பசுமை இல்ல வாயு மண்ணில் உள்
சென்று உயிரினங்களுக்குத் தேவைப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற முக்கிய ஊட்டங்களைப்
பாதிக்கிறது. இது மண்ணின் அமில அல்லது காரத்தன்மையை கூட்டுவதால் தாவரங்கள் வாழ்வதற்குக்
கடினமாகிறது. இதன் எச்சங்கள் மற்றும் செயற்கையான வேதிபொருட்கள் போன்றடைகுளோரோ டைபீனைல்
ட்ரைகுளோரோ ஈத்தேன் (DDT), பாலிகுளோரின்பைபீனைல் (POB) ஆகியன ஊட்டச்சத்து, pH ஏற்றத்தாழ்வு
மற்றும் வேளாண் பொருட்களின் தரத்தையும் பாதிக்கிறது. இப்பிரச்சினையை நீடித்த நிலையான
வேளாண்மை மூலம் குறைக்கலாம்.
பூச்சிக்கொல்லிகள் மூளைச்சாவு, இரத்தப் புற்றுநோய், நரம்பு நச்சுதன்மை , நடுக்க வாதம் போன்ற அறிகுறிகள், மலட்டுத்தன்மை, பிறவிக்குறைபாடுகள், இனப்பெருக்க மற்றும் நடத்தை பிறழ்வுகள் ஆகியவைகளை அதிகரிக்கிறது.
உரங்களிலிருந்து வரும் நைட்ரேட்) - ஹீமோகுளோபினுடன் வினை புரிந்து
மீத்தைல் ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. இது ஆக்ஸிஜன் எடுத்துச் செல்வதைக் குறைப்பதோடு
நீலக்குழந்தை, கூட்டுநோய் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை உருவாக்குகிறது. நைட்ரேட்கள்
இரத்தநாள விரிவாக்கத்தை ஏற்படுத்துவதால் இரத்த அழுத்தம் குறைகிறது.
• உயிரிவழி பல்பெருக்கம்: நீரில் மாசுபடுத்திகள், நச்சுப் பொருட்களின்
உயர் அளவு ஒரு உணவுசங்கிலியிலிருந்து பலவற்றிற்கும் நகர்ந்து இறுதியாக மனிதனிலும் அதிகரிக்கும்
இந்நிகழ்வு அல்லது அளவு பெருக்கமடைவது உயிரிவழி பல்பெருக்கம் என்று அழைக்கப்படுகிறது.