Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் - தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 12th Botany : Chapter 8 : Environmental Issues

   Posted On :  09.08.2022 06:08 pm

12 வது தாவரவியல் : அலகு 8 : சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

தாவரவியல் : சுற்றுச்சூழல் பிரச்சினைகள் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கியமான கேள்விகள் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

தாவரவியல் : சுற்றுச்சூழல் பிரச்சனைகள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

மதிப்பீடு  


1. பசுமை இல்ல விளைவினை அதிக அளவிலே குறைப்பது கீழ்க்கண்டவற்றுள் எது எனக் குறிப்பிடுக.  

அ) வெப்பமண்டலக் காடுகளைக் கால்நடைக்கான மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல் 

ஆ) அதிகப்படியான பொதிக்கும் தாள்களை எரித்துச் சாம்பலாக்கிப் புதைத்தலை உறுதிப்படுத்துவது 

இ) மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல் 

ஈ) பொதுப் போக்குவரத்தினை விடத் தனியார் போக்குவரத்தினைப் பயன்படுத்துதல் ஊக்குவித்தல் 

விடை : இ) மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல் 

 

2. ஆகாயத் தாமரையைப் பொறுத்தவரை கூற்று I தேங்கும் நீரில் வளர்ந்து காணப்படுகிறது மற்றும் இது நீரிலுள்ள ஆக்ஸிஜனை முற்றிலும் வெளியேற்றுகிறது. கூற்று II இது நமது நாட்டின் உள்நாட்டு தாவரமாகும். 

அ) கூற்று I சரியானது மற்றும் கூற்று II தவறானது. 

ஆ) கூற்று I மற்றும் II - இரண்டு கூறுகளும் சரியானது 

இ) கூற்று | தவறானது மற்றும் கூற்று II சரியானது 

ஈ) கூற்று I மற்றும் II - இரு கூறுகளும் தவறானது

விடை : அ) கூற்று I சரியானது மற்றும் கூற்று II தவறானது. 

 

3. தவறான இணையிணை கண்டறிக. 

அ) இடவறை - சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் காணப்படும் மற்றும் வேறெங்கும் காணப்படுவதில்லை. 

ஆ) மிகு வளங்கள் - மேற்கு தொடர்ச்சிமலை 

இ) வெளி வாழிடப் பேணுகை – விலங்கினப் பூங்காக்கள் 

ஈ) கோயில் தோட்டங்கள் – இராஜஸ்தானின் செயின்த்ரி குன்று 

உ) இந்தியாவின் அன்னிய ஆக்கிரமிப்பு சிற்றினங்கள் - ஆகாயத் தாமரை 

விடை : ஈ) கோயில் தோட்டங்கள் - இராஜஸ்தானின் செயின்த்ரி குன்று

 

4. தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது? 

அ) அம்மோனியா 

ஆ) மீத்தேன் 

இ) நைட்ரஸ் ஆக்ஸைட் 

ஈ) ஓசோன்

விடை : ஈ) ஓசோன் 

 

5. 14 % மற்றும் 6 % பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான முறையே 

அ) N2O மற்றும் CO2 

ஆ) CFCS மற்றும் N2O 

இ) CH4 மற்றும் CO2 

ஈ) CH4 மற்றும் CFCs

விடை : ஆ) CFCs மற்றும் N2O 

 

6. கீழ்கண்டவற்றில் எது அச்சுறுத்தும் சிற்றினங்கள் உண்டாவதைக் குறைக்கும் முக்கிய காரணமாகக் கருதப்படுவது? 

அ) அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் அத்துமீறல்கள் 

ஆ) பசுமை இல்ல விளைவு 

இ) போட்டியிடுதல் மற்றும் கொன்று உண்ணுதல் 

ஈ) வாழிட அழிவு 

விடை : ஈ) வாழிட அழிவு 

 

7. காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுவது 

அ) காடுகளற்ற பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள் 

ஆ) காடுகள் அழிந்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள் 

இ) குளங்களில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள் 

ஈ) தாவரங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுதல் 

விடை : ஈ) தாவரங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுதல் 

 

8. காடுகள் அழித்தல் எதை முன்னிறுத்திச் செல்வதில்லை? 

அ) வேகமான ஊட்டச்சத்து சுழற்சி 

ஆ) மண் அரிப்பு 

இ) மாற்றியமைக்கப்பட்ட உள்ளூர் வானிலை 

ஈ) இயற்கை வாழிட வானிலை நிலை அழிதல் 

விடை : அ) வேகமான ஊட்டச்சத்து சுழற்சி

 

9. ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு? 

அ) ஜூல் 

ஆ) கிலோ 

இ) டாப்சன் 

ஈ) வாட்

விடை : இ) டாப்சன் 

 

10. கர்நாடகாவின் சிர்சி என்னும் இடத்தில் சூழலைப் பாதுகாக்கும் மக்களின் இயக்கம் யாது? 

அ) சிப்கோ இயக்கம் 

ஆ) அமிர்தா தேவி பிஷ்வாஸ் இயக்கம் 

இ) அப்பிக்கோ இயக்கம் 

ஈ) மேற்கொண்ட எதுவுமில்லை

விடை : இ) அப்பிக்கோ இயக்கம் 

 

11. மரத்தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரம் எது? 

அ) செஸ்பேனியா மற்றும் அக்கேசியா 

ஆ) சொலானம் மற்றும் குரோட்டலேரியா 

இ) கிளைட்டோரியா மற்றும் பிகோனியா 

ஈ) தேக்கு மற்றும் சந்தனம்

விடை : அ) செஸ்பேனியா மற்றும் அக்கேசியா 

Tags : Environmental Issues | Botany சுற்றுச்சூழல் பிரச்சினைகள் - தாவரவியல்.
12th Botany : Chapter 8 : Environmental Issues : Choose the Correct Answers Environmental Issues | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 8 : சுற்றுச்சூழல் பிரச்சினைகள் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - சுற்றுச்சூழல் பிரச்சினைகள் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 8 : சுற்றுச்சூழல் பிரச்சினைகள்