தாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சினைகள் : பாடச்சுருக்கம் | 12th Botany : Chapter 8 : Environmental Issues
பாடச்சுருக்கம்
பசுமை இல்ல விளைவு காலநிலை மாற்றங்களைத் தோற்றுவித்து
உலக வெப்பமாதலை உருவாக்குகிறது. காடுகளை அழிப்பதால் மண் அரிப்பு ஏற்படுதலும், புதிய
காடுகள் உருவாக்குவதினால் தாவரக் கூட்டங்களை மீட்டெடுக்கவும் நிலத்தடி நீர் மட்டத்தினை
உயர்த்திடவும் உதவுகிறது. உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற வேளாண் வேதி பொருட்கள்
நிலத்தில் வழிந்தோடுவதால் மண் மலட்டுத்தன்மை உருவாகித் தாவரங்களின் வளர்ச்சி குன்றுகிறது.
அரசு தாவரக் கூட்டங்களை மீட்டெடுக்க இது உதவுகிறது. சமூகம் மற்றும் அரசின் பங்களிப்பால்
வேளாண் காடு வளர்ப்பு மூலம் மரங்கள் மீளுறுவாக்கப் பயன்படுகிறது. தாவரங்கள் மற்றும்
விலங்குகளை அவற்றின் இயற்கையான வளரிடங்களில் பாதுகாத்திட உதவுகிறது. மேலும் மனித முயற்சியால்
உருவாக வன உயிரி பூங்காக்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள் போன்ற சூழல்களையும் பாதுகாக்க
இயலுகிறது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு (IUCN) பழமையான சூழல் அமைப்பாகும்.
இது இடவரை மற்றும் அச்சுறுத்தலுக்குட்பட்ட சிற்றினங்களைப் பாதுகாக்க உதவுகிறது. வளிமண்டலத்தில்
கார்பன் அளவினைச் சேகரிப்பு மூலம் குறைவுறச் செய்யவும் உதவுகிறது. மழைநீர் சேகரிப்பு
மூலம் நிலத்தடி நீர் மட்டம் மேம்பாடடைய வழிகோலும். நகரங்களில் குடிநீர் வழங்கிடவும்,
தமிழ்நாட்டின் ஏரிகளின் முக்கியத்துவம் பேணவும் உதவுகிறது. இயற்கைச் சீற்ற வேளாண்மை
, அபாயப் பகுத்தாய்வு பயிலவும், சூழல் மற்றும் உயிரிப்பன்மம் மதிப்பிட உதவுகிறது. புவியிய
தகவலமைப்பு மாறும் தொலையுணரி மூலம் காடுகளின் பரப்பைக் கண்காணிக்கப் பயன்படுகிறது.
பாசிகளின் மலர்ச்சி: நீரின் வேதிய மாற்றத்திற்கு காரணியாகவும் நீரின் தன்மை பாதிப்பிற்கு காரணமாகவும் அமையும் தீங்கு விளைவிக்கும் பாசிகளின் திடீர் வளர்ச்சி பாசிகளின் மலர்ச்சி எனப்படும்.
வளி மண்டலம்: சூழல் தொகுதியின் ஒத்த வாழிடப் பகுதியில் வாழும் தாவர, விலங்கு மற்றும் உயிரினத் தொகுதிகளின் சுற்றுச்சூழல் நிலை
உயிரிகளால்
சிதைவுறும் கழிவுகள்: தாவர மற்றும் விலங்கு மூலங்கள் சீரிய உயிரினங்களால்
சிதைவுறக்கூடிய கரிமக் கழிவு
உயிரிகோளம்: உயிரிகளுக்கு
உயிராதாங்களை அளிக்கும் பூமியின் வளிமண்டலம் அடங்கிய ஒரு பகுதி
கழிவுநீர்க்
கசிவு வடிகால்: சில கழிவுநீர் தொட்டிகளிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும்
வெளியேறும் கழிவுநீர் கசிந்தோடும் வடிகால்
நிலத்தில்
நிரப்புதல்: சூழல் பாதுகாப்பு முகமையகத்தால் உரிமம் பெற்ற கழிவுகளை
நிரப்ப வடிவமைக்கபட்ட நிலப்பரப்பு
எண்ணைய்
கசிவு: மெதுவாக நீரின் மூலம் சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றப்படும் தீங்கு
விளைவிக்கக்கூடிய எண்ணெய் கசிவு. இவற்றை அகற்றுவது மிகவும் கடினம் மற்றும் இவை பறவைகள்,
மீன்கள் மற்றும் வன உயிரினங்களை அழிப்பதாகும்.
கதிர்வீச்சு: இயற்கையாகவோ
அல்லது செயற்கையாகவோ துகள்களினூடே நுழைந்து செல்லத்தக்க ஆற்றல் மிக்க கதிர்கள் முறையே
சூரியன் மற்றும் பூமியிலிருந்து உருவாகக்கூடிய அல்லது X- கதிர் இயந்திரத்திலிருந்து
உருவாகும் கதிர்களாகும்.
கதிரியக்கமுற்றவை: பொருட்கள்
கதிர்வீச்சினை வெளியேற்றினால் அவை கதிரியக்கமுற்றவை என்பர்.
மறுசுழற்சி: பழுதுபட்ட
அல்லது பயன்படுத்தப்பட்ட கழிவுப் பொருட்களை மீண்டும் புதுப்பித்து உபயோகிக்கும் முறையாகும்
சாக்கடை
நீர் அல்லது கழிவுநீர்: பலதரப்பட்ட வீட்டு மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து
வெளியேற்றப்படும் திரவக்கழிவு நீர்நிலைகளில் கலந்துள்ள பல்வேறு கழிவுகள்
தொடர்பயன்தரும் வளர்ச்சி: ஆற்றல் ஆதாரங்களை மக்களின் இன்றைய தேவையை பூர்த்தி செய்வதோடல்லாமல், வருங்கால சந்ததிகளுக்கும் குறைவுறாமல் பெற பயன்படும் வளர்ச்சி, தொடர் பயன்தரும் வளர்ச்சி ஆகும்.