விளைவுகள் - சுற்றுச்சூழல் பிரச்சினைகள் - காடழிப்பு | 12th Botany : Chapter 8 : Environmental Issues
காடழிப்பு (Deforestation)
காடழிப்பு பசுமை இல்ல விளைவையும், புவி வெப்ப
மயமாதலையும் அதிகரிப்பதில் முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒன்றாகும். காடுள்ள பகுதிகளைக்
காடற்ற பகுதிகளாக மாற்றப்படுவதற்குக் காடழிப்பு என்று பெயர். வெட்டு மரம், காகிதம்,
மருந்து மற்றும் தொழிற்சாலை தயாரிப்புகள் போன்ற பொருட்கள் உட்படப் பல நன்மைகளை நமக்கு
வழங்குகின்றன.
• காடுகள் விவசாயத் தோட்டங்கள் மற்றும் கால்நடை
வளர்ப்பு நிலங்களாக மாற்றப்படுதல் ஆகியன முக்கியமான காடழிப்பிற்கான காரணங்களாகும்.
• மரத்துண்டுகளுக்காக வெட்டுதல்
• சாலை மேம்பாடு, மின் கோபுரம் அமைத்தல் மற்றும்
அணை கட்டுதல் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அழித்தல்
• மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில் மயமாக்கம்,
நகர மயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய தேவைகளுக்காகக் காடுகளை அழித்தல்.
• காட்டு மரக்கட்டைகளை எரிப்பதால் சேகரிக்கப்பட்ட
கார்பன் வெளிவிடுவதோடு இது கார்பன் சேகரிப்புக்கு எதிர் விளைவைத் தருகிறது.
• மரங்களும் தாவரங்களும் மண் துகள்களைப் பிணைக்க
உதவுகின்றன. காடுகளை அகற்றுவது மண் அரிப்பினை அதிகரிப்பதோடு மண் வளத்தையும் குறைக்கிறது.
காடழிப்பு வறண்ட பகுதிகளில் பாலைவனங்களை உருவாக்க வழிவகுக்கின்றது.
• நீரின் ஓட்டம் மண் அரிப்பை அதிகரிப்பதோடு
திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. இவை ஈரப்பதம் மற்றும் ஈரத்தன்மையைக் குறைக்கிறது.
• உள்ளூர் மழையளவு மாற்றத்தின் காரணமாகப் பல
பகுதிகளின் வறண்ட நிலைக்கு வழி வகுக்கிறது. இது எதிர்காலக் காலநிலையைத் தூண்டுவதோடு
சூழல்மண்டலத்தின் நீர் சுழற்சியையும் மாற்றி அமைக்கிறது.
• உயிரினங்களின் வாழிடம் பாதிக்கப்படுவதாலும்
ஊட்டச்சுழற்சித்த தகர்வு ஏற்படுவதாலும் குறிப்பிடத்தக்க அளவில் உயிரிப்பன்மம் குறைகிறது.
• கிராமப்புற மற்றும் காடுகளில் வாழ்பவர்களின்
வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
• மூன்றில் ஒரு பங்கு கார்பன் வெளியிடப்படுவதால்
உலக வெப்பமயமாதல் அதிகரிக்கின்றன.
• வாழ்வாதார மூலங்களான எரிபொருள், மருத்துவ
மூலிகைகள் மற்றும் இயல் சூழலில் காணப்படும் உண்ணத்தக்க கனிகள் ஆகியன இழக்கப்படும்.