சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental
Impact Assesment –EIA)
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது சுற்றுச்சூழல்
மேலாண்மையின் ஒரு உபாயமாகும். சூழல் மண்டலம் மற்றும் உயிரியல் சமுதாயங்கள் மீது ஏற்படுத்தப்படும்
தாக்கத்தை வெகுவாகக் குறைக்கவும், இயற்கை வளங்களை உகந்த அளவு பயன்படுத்தவும், கட்டுப்படுத்தவும்
பரிந்துரைக்க உதவி புரிகிறது. வருங்கால நிதிசார் வளர்ச்சித் திட்டங்கள், அணைக்கட்டுகள்,
நெடுஞ்சாலைத் திட்டங்கள், முன்மொழியப்பட்ட வளர்ச்சித் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல்
விளைவுகளை முன்னரே கணிக்கப் பயன்படுகிறது. சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் மனிதநலத்தாக்கம்
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அறியப்படுகிறது. பிராந்தியச் சூழ்நிலைகளுக்கேற்றவாறு
திட்டங்களுக்குரிய வடிவத்தினை அளிக்கவும், சுற்றுச்சூழல் தாக்கத்தினைக் குறைக்கவும்
உதவுகிறது. மேலும் உறுதியான சுற்றுச்சூழல் சீரழிவினைத் தவிர்க்கவும், கழிவுப் பொருட்களை
அகற்றுவதற்கும் இயற்கை ஆதாரங்களை உகந்த அளவு பயன்படுத்தவும் வழிவகுக்கின்றது.
சமூகத்திற்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டினால்
ஏற்படும் பயன்கள்:
• ஓர் ஆரோக்கியமான சுற்றுசூழல்
• உயிரிப்பன்மத் தொகுப்பினைப் பராமரித்தல்
• குறைந்தளவு வளங்கள் பயன்பாடு
• குறைந்த அளவு வாயு வெளியேற்றம் மற்றும் சுற்று சூழல் சேதம், ஆகிய பயன்கள் ஏற்படுகின்றன.
உயிரிப்பன்மத் தாக்க மதிப்பீடு வளர்ச்சி, திட்டமிடல்
மற்றும் செயல்படுத்தலுக்கும், முடிவுகளுக்கும் உதவும் ஒரு கருவியாகும். இது வளர்ச்சி
திட்டங்களுக்கு உறுதியளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மேலும் இது உயிரிபன்மம்
தொடர்பான ஆலோசனைகளை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது. மேலும் இவைகள் உயிரிபன்ம ஆதாரங்களைப்
பாதுகாக்கும் செயல்முறைகளுக்கான சட்ட இணக்கத்தை அளிக்கவும் உயிரிபன்ம நன்மைகளை, சமமான,
நியாயமான முறையில் பயன்களைப் பகிர்தலையும் வழங்குகிறது.
உயிரி கண்காணிப்பு
(Biomonitoring)
சூழல்தொகுப்பு, உயிரி பன்மக்கூறுகள்,
இயற்கை வாழிடங்கள், சிற்றினம் மற்றும் உயிரினத்தொகை சார்ந்த நிலப்பரப்பு ஆகியவற்றில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்துக்
கண்காணிக்கவும், மதிப்பிடவும் உதவும் ஒரு செயலாகும்.
ஆளில்லா வேளாண் பறக்கும் இயந்திரம்
(drone) என்பது பயன்படாடுடைய பயிர் பெருக்கம் மற்றும் பயிர் வளர்ச்சியைக் கண்காணிக்கும்,
வேளாண்மைக்கு உதவும் ஒரு ஆளில்லா வானூர்தியாகும். விவசாயிகளுக்கு இவ்வேளாண் இயந்திரம்
விவசாயிகள் தங்களது நிலங்களை வானிலிருந்து கண்காணிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. நீர்பாசன
பிரச்சினைகள், மண்ணின் மாற்றங்கள், பூச்சி மற்றும் பூஞ்சைத் தாக்கங்கள் முதலிய தொல்லைகளைக்
கூரிய பார்வையால் (bird's eye view) தெளிவுபடுத்த உதவுகிறது. பாதுகாப்பான, சிக்கனமான,
அபாயங்களற்ற பூச்சி மருந்து மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதற்கு உதவும் மேலும் ஒரு
எளிய முறையாகும்.
• நிலமாற்றம் மற்றும் பயன்பாடு காப்பதிலும்
• நிலத் துண்டாக்குதல் மற்றும் தனிமைப்படுத்துதலும்
• வளங்கள் பிரித்தெடுத்தல்
• புகை வெளியேற்றம், கழிவுகள், வேதி பொருட்கள்
புற உள்ளீடு செய்யவும்
• மரபு மாற்றப்பட்ட சிற்றினங்கள், அந்நிய மற்றும்
ஆக்கிரமிப்பு சிற்றினங்களை அறிமுகப்படுத்துதல்
• இடவரை மற்றும் அச்சுறுத்தலுக்குட்படும் தாவர
மற்றும் விலங்கினங்களின் மீது ஏற்படும் தாக்கம் ஆகியவற்றிற்கு உதவுகின்றன.