Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பண்டைய நாகரிகங்கள்

அறிமுகம் | வரலாறு - பண்டைய நாகரிகங்கள் | 9th Social Science : History : Ancient Civilisations

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : பண்டைய நாகரிகங்கள்

பண்டைய நாகரிகங்கள்

நகர சமுதாயங்கள் மேம்பட்ட வாழ்வியல் முறைகளை பின்பற்றி பண்டைய வேட்டையாடுதல் - உணவு சேகரித்தல் குழுக்கள் மற்றும் புதிய கற்கால வேளாண்மைச் சமுதாயங்களை விட ஒழுங்கமைவு கொண்டதாக அமைந்திருந்தன.

அலகு 2

பண்டைய நாகரிகங்கள்


கற்றல் நோக்கங்கள்

பண்டைய சமூக அமைப்புகள், அரசு உருவாக்கம் ஆகியன குறித்துக் கற்றல்

நாகரிகங்களின் வளர்ச்சி குறித்துப் புரிந்துகொள்ளுதல்

பண்டைய எகிப்து நாகரிகம் குறித்துக் கற்றல்

மெசபடோமிய நாகரிகங்களின் முக்கியப் பண்புகளைக் கற்றல்

சீன நாகரிகம் குறித்து அறிதல்

சிந்துவெளி நாகரிகம் குறித்த அறிவைப் பெறுதல்

 

அறிமுகம்

நகர சமுதாயங்கள் மேம்பட்ட வாழ்வியல் முறைகளை பின்பற்றி பண்டைய வேட்டையாடுதல் - உணவு சேகரித்தல் குழுக்கள் மற்றும் புதிய கற்கால வேளாண்மைச் சமுதாயங்களை விட ஒழுங்கமைவு கொண்டதாக அமைந்திருந்தன. நகரச் சமூகங்கள் சமூக அடுக்குகளையும், நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களையும் கொண்டிருந்தன. அவை கைவினைத் தொழில்களையும், வணிகம் மற்றும் பண்டமாற்று முறைகளையும், அறிவியல் தொழில் நுட்பத் தகவமைவையும், மற்றும் அமைப்பு ரீதியான அரசியல் அமைப்பையும் (தொடக்கநிலை அரசு) கொண்டிருந்தன. இதனால், பண்டைய சமூக அமைப்புகளில் இருந்து இவர்களைப் பிரித்துக்காட்ட 'நாகரிகம்' என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இவர்கள் இதற்கு முந்தைய காலச் சமூகங்களை விட உயர்வானவர்கள் என்று கருதி விடக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு பண்பாடும் நாகரிகமும் தனக்கான தனித்த வாழ்வியல் கூறுகளைக் கொண்டுள்ளன.

Tags : History அறிமுகம் | வரலாறு.
9th Social Science : History : Ancient Civilisations : Ancient Civilisations History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : பண்டைய நாகரிகங்கள் : பண்டைய நாகரிகங்கள் - அறிமுகம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : பண்டைய நாகரிகங்கள்