விலங்கினக்
கலப்பு
ஒரே சிற்றினத்திற்குள்ளே, ஒரு பொது
மூதாதையரிடமிருந்து தோன்றிய விலங்குகளின் குழு இனம் எனப்படும். இது
அச்சிற்றினத்தின் பிற உயிரிகளிடம் காணப்படாத பண்புகளைக் (பொதுத் தோற்றம் மற்றும்
சில குறிப்பிடத்தக்க பண்புகள்) கொண்டதாகும்.
இனக்கலப்பு என்பது சில சிறப்பான
பண்புகளைக் கொண்ட வெவ்வேறு வகையான பெற்றோர்களை கலப்பு செய்து அத்தகு விரும்பத்தக்க
பண்புகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதாகும்.
வீட்டு விலங்குகளின்
ஜீனாக்கத்தை மேம்படுத்தி அதன் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துதல் மற்றும்
விரும்பத்தக்க பண்புகளான பால், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை
அதிகப்படுத்துவதே விலங்கின வகைப் பெருக்கத்தின் நோக்கங்களாகும்.
ஒரே இனத்தை சேர்ந்த தொடர்புடைய
விலங்குகளுக்கு இடையே நடைபெறக் கூடிய கலப்பு உட்கலப்பு எனப்படும். வெளிக்கலப்பு
என்பது தொடர்பற்ற உயிரினங்களை கலப்பு செய்வதாகும்.
நெருங்கிய
தொடர்புடைய மற்றும் ஒரே இனத்தை சார்ந்த உயிரினங்களை 4 முதல் 6 தலைமுறைகளுக்கு கலப்புச் செய்வதே உட்கலப்பு முறையாகும். இது ஒரே இனத்தைச்
சார்ந்த வீரியமிக்க ஆண் மற்றும் வீரியமிக்க பெண் விலங்குகளை இனங்கண்டு, அவற்றை ஜோடியாக இனக்கலப்பு செய்வதாகும். இம்முறையின் மூலம் வீரியமிக்க
ஜீன்கள் கலப்பினத்தில் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டு, விரும்பத்தகாத
ஜீன்கள் நீக்கப்படுகின்றன.
பஞ்சாபைச் சேர்ந்த ஹிஸ்ஸர்டேல்
என்ற புதிய செம்மறி ஆட்டினம் பிக்கானிரின் (மாக்ரா) பெண் ஆட்டையும், ஆஸ்திரேலியாவின்
மரினோ ஆண் ஆட்டையும் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டதாகும்.
உட்கலப்பு வீழ்ச்சி
தொடர்ச்சியாக ஒரு இனத்தின்
தொடர்புடைய விலங்குகளிடையே உட்கலப்பு செய்வது அதன் பாலின வளத்தையும் மற்றும்
உற்பத்தித் திறனையும் பாதிக்கும். இது உட்கலப்பு வீழ்ச்சி எனப்படும். இனத்
தேர்வில் தவிர்க்கப்பட்ட தீமைச் செய்யும் ஒடுங்கு பண்புக்கான ஜீன்களை உட்கலப்பு
வெளிக்கொணர்கிறது.
இது தொடர்பற்ற விலங்குகளைக்
கலப்புச் செய்வதாகும். இவ்வினக்கலப்பின் மூலம் உருவான புதிய உயிரி கலப்புயிரி என
அழைக்கப்படுகிறது. இக்கலப்புயிரி, பெற்றோர்களை விட பலம் வாய்ந்ததாகவும், வீரியமானதாகவும் இருக்கும். இம்முறையில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த,
விரும்பத்தக்க பண்புகளை கொண்ட இரண்டு சிற்றினங்கள் கலப்பினச்
சேர்க்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. இம்முறையில் கோவேறு கழுதை எவ்வாறு உருவாக்கப்பட்டது
என்பதை கீழே காணலாம்.
கோவேறு கழுதையை, குதிரையுடன்
ஒப்பிடும் போது அது வலிமை, நுண்ணறிவு, வேலை
செய்யும் திறன் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றில் வீரியமிக்கதாக
காணப்பட்டது. ஆனால் அது மலட்டுத் தன்மை உடையது.
தகவல் துணுக்கு
பறவைகளில்
குறுக்குக் கலப்பு
வெள்ளை
லெக்ஹான் x பிளைமௌத் ராக்
↓
அதிகமுட்டைகளை
உற்பத்தி செய்யும் கலப்பினக் கோழி இனம்
பசுக்களின் குறுக்குக் கலப்பு
அயல்
இனக் காளைகள் மற்றும் உள்நாட்டு பசு ஆகியவற்றிற்கிடையே நடைபெறும் கலப்பு
பிரவுன்
ஸ்விஸ் x சாகிவால்
↓
கரன்
ஸ்விஸ் – உள்நாட்டு பசுக்களை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக பால் உற்பத்தி செய்பவை.
கலப்பின சேர்க்கை மூலம்
உயர்தரப் பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ஹெட்டிரோசிஸ் அல்லது
கலப்பின வீரியம் எனப்படும்.
· கால்நடைகளில் பால் உற்பத்தியை அதிகரித்தல்
· கோழிகளில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல்
· உயர் தர இறைச்சியை உற்பத்திச் செய்தல்
· வீட்டு விலங்குகளின் வளர் வீதத்தை அதிகப்படுத்துதல்