மரபுப்
பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் (GMOs)
மரபுப் பொறியியலின் ஒரு மிகப்
பிரம்மாண்டமான வளர்ச்சி,
மரபுப்பண்பு மாற்றப்பட்ட உயிரிகளின் உற்பத்தி ஆகும். மரபுப்
பண்பு மாற்றம் என்பது rDNA தொழில்நுட்பம் மூலம்
உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது அல்லது
ஜீன்களை விரும்பியபடி கையாள்வது ஆகும். புதிதாக உள் நுழைக்கப்படும் ‘ஜீன் அயல் ஜீன்’ எனப்படும். இம்முறையில்
மாற்றப்பட்ட ஜீன் அல்லது புதிய ஜீனைப் பெற்ற தாவர, விலங்குகள்
மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் எனப்படும்.
இவ்விதம் மரபுப் பண்பு
மாற்றப்பட்ட தாவரங்கள் அதிக நிலைப்புத் தன்மை, உயர்த்தப்பட்ட உணவூட்ட மதிப்பு, நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் மாறுபடும் சுற்றுச் சூழல் நிலைகளுக்குத்
தாங்கும் தன்மை கொண்டதாக விளங்குகின்றன. அது போன்றே மரபுப் பண்பு மாற்றப்பட்ட
விலங்குகளும் மருத்துவ முக்கியத்தும் வாய்ந்த புரதங்களை குறைவான செலவில் உற்பத்தி
செய்வதன் மூலம் கால்நடைகளின் தர மேம்பாட்டிற்கு உதவுகின்றன.
மரபுப்பண்பு மாற்றம்
செய்யப்பட்ட சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.