இனக்கலப்பு மற்றும் உயிர்த்தொழில் நுட்பவியல் | அறிவியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 20 : Breeding and Biotechnology
இனக்கலப்பு மற்றும் உயிர்த்தொழில் நுட்பவியல் (அறிவியல்)
I. சரியான
விடையைத் தேர்வு செய்க.
1. ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக
எந்த முறையைப் பின்பற்றுவார்?
அ) போத்துத் தேர்வு முறை
ஆ) கூட்டுத் தேர்வு முறை
இ) தூய வரிசைத் தேர்வு முறை
ஈ) கல்பபினமாக்கம்
2. பூசா கோமல் என்பது ________ இன் நோய்
எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
அ) கரும்பு
ஆ) நெல்
இ) தட்டைப்பயிறு
ஈ) மக்காச் சோளம்
3. கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக
உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற
ஹிம்கிரி என்பது ________ இன் ரகமாகும்
அ) மிளகாய்
ஆ) மக்காச்சோளம்
இ) கரும்பு
ஈ) கோதுமை
4. தன்னுடைய 50 வது பிறந்த
நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய
அரிசி................ஆகும்.
அ) IR 8
ஆ) IR 24
இ) அட்டாமிட்டா 2
ஈ) பொன்னி
5. உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட
பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப்
பயன்படுகிறது?
அ) உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
ஆ) வாழும் உயிரினங்கள்
இ) வைட்டமின்கள்
ஈ) அ) மற்றும் ஆ)
6. DNA வை வெட்டப் பயன்படும் நொதி ________
அ) கத்திரிக்கோல்
ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
இ) கத்தி
ஈ) RNA நொதிகள்
7. rDNA என்பது ________
அ) ஊர்தி DNA
ஆ) வட்ட வடிவ DNA
இ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA வின் சேர்க்கை
ஈ) சாட்டிலைட் DNA
8. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ________ DNA வரிசையை
அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
அ) ஓரிழை
ஆ) திடீர்மாற்றமுற்ற
இ) பல்லுருத்தோற்ற
ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்
9. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல்
ஜீனைப் பெற்ற உயிரினங்கள்... என அழைக்கப்படுகின்றன.
அ) அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
ஆ) மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
இ) திடீர் மாற்றம் அடைந்தவை
ஈ) (அ) மற்றும் (ஆ)
10. ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x =
42) ஒற்றை மயம்(n) மற்றும் அடிப்படைத் தொகுதி
(x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே
________ ஆகும்
அ) n =7 மற்றும் x
= 21
ஆ) n = 21 மற்றும் x
= 21
இ) n =7 மற்றும் x
=7
ஈ) n = 21 மற்றும் x =7
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பயிர்ப் பெருக்கம் என்பது
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும்
கலை ஆகும்.
2. புரதம் செறிந்த கோதுமை ரகம் அட்லஸ் 66 ஆகும்.
3. கால்ச்சிசின் என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்
ஆகும்.
4. விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த்
தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை உயிரூட்டச்சத்தேற்றம் எனப்படும்.
5. நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது.
ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட அட்டாமிட்டா - 2 என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
6. DNA மறுசேர்க்கை தொழில்நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்திச் செய்ய வழிவகை
செய்துள்ளது.
7. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA
மூலக்கூறை மூலக்கூறு கத்திரிக்கோல் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது.
8. ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ஒற்றைக் கரு
இரட்டையர் இடையே காணப்படும்
9. வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும்.
10. ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA பிளாஸ்மிட் உடன்
ஒருங்கிணைக்கப்படுகிறது.
III. சரியா தவறா? தவறு எனில்
கூற்றினை திருத்துக.
1. கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ
பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.
விடை: தவறு
கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா ஒரு
அல்லோ டெட்ராபிளாய்டு (4n) ஆகும்
2. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட
உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும்.
விடை: தவறு
இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை
உருவாக்கும் முறை பன்மய பயிர்ப் பெருக்கம்.
3. உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா
இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித் தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின்
கூட்டமே தூய வரிசை எனப்படும்
விடை: தவறு
உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு
தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன் எனப்படும்.
4. இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம்,
பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
விடை: சரி
5. 'கோல்டன் ரைஸ்' ஒரு
கலப்புயிரி
விடை: சரி
6. பாக்டீரியாவின் Bt ஜீன்,
பூச்சிகளைக் கொல்லக் கூடியது.
விடை: சரி
7. செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள்
நடைபெறும் கருவுறுதலாகும்.
விடை: தவறு
செயற்கை கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே நடைபெறும்
கருவுறுதலாகும்
8. DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே
என்பரால் உருவாக்கப்பட்டது.
விடை: சரி
9. மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.
விடை: தவறு
மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகளை குறிக்கும்
IV. பொருத்துக:
1. சோனாலிகா - பேசியோலஸ் முங்கோ
2. IR 8 - கரும்பு
3. சக்காரம் - அரைக்குள்ள கோதுமை
4. முங் நம்பர் 1 - வேர்க்கடலை
5. TMV-2 - அரைக்குள்ள அரிசி
6. இன்சுலின் - பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
7. Bt நச்சு - பீட்டா கரோட்டின்
8. கோல்டன் ரைஸ் - rDNA தொழில்
நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன்
விடை:
1. சோனாலிகா - அரைக்குள்ள கோதுமை
2. IR8 - அரைக்குள்ள அரிசி
3. சக்காரம் - கரும்பு
4. முங் நம்பர் 1 - பேசியோலஸ் முங்கோ
5. TMV-2 - வேர்க்கடலை
6. இன்சுலின் - rDNA தொழில் நுட்பத்தில் உருவான முதல்
7. Bt நச்சு - பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
8. கோல்டன் ரைஸ் - பீட்டா கரோட்டின்
V. கூற்று மற்றும் காரணம் வகைக் கேள்விகள்.
பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும்
அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு
வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1. கூற்று: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட
மேம்பட்டதாக இருக்கும்.
காரணம்: கலப்பின வீரியம் தற்கலப்பில்
இழக்கப்படுகிறது.
விடை: அ) கூற்று சரி ஆனால் காரணம்
தவறு.
2. கூற்று: கால்ச்சிசின் குரோமோசோம் எண்ணிக்கையைக்
குறைக்கிறது.
காரணம்: சகோதரி குரோமேட்டிடுகள் எதிரெதிர்த்
துருவங்களை நோக்கி நகர்வதை அது ஊக்குவிக்கிறது.
விடை: ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
3. கூற்று: rDNA தொழில் நுட்பம்
கலப்பினமாக்கலை விட மேலானது.
காரணம்: இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத
ஜீன்களை நுழைக்காமல் விரும்பத்தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப்படுகின்றன.
விடை: இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
VI. ஒரே வாக்கியத்தில் விடையளி:
1. அதிக நார்ச்சத்தும், புரதமும்
நிறைந்த கோதுமை ரகத்தின் பெயரை எழுதுக
பல்கர் - புரத சத்து 8.2
கி எடையுடையது.
2. நெல்லில் அரைக்குள்ள வகைகள் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளன. இது நெல்லில் காணப்படும் குள்ள மரபணுவால் (ஜீனால்)
சாத்தியமானது. இந்த குள்ள மரபணுவின் (ஜீன்) பெயரை எழுதுக.
பீ- ஜியோ - வூ - ஜென்.
3. மரபுப் பொறியியல் - வரையறு.
ஜீன்களை நாம் விரும்பியபடி கையாள்வதும் புதிய உயிர்களை உருவாக்க
ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு இடம் மாற்றுதலும் மரபுப் பொறியியல்
எனப்படும்.
4. குருத்தணுக்களின் வகைகளை எழுதுக.
• கருநிலைக் குருத்தணுக்கள்
• முதிர் குருத்தணுக்கள்
5. அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் என்றால் என்ன?
மரபியல் பொறியியல் மூலம் ஜீன்களை ஓர் உயிரியிலிருந்து மற்றொரு
உயிரிக்கு செலுத்தி உருவாகும் உயிரினம்.
VII. குறு வினாக்கள் :
1. நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம்
பற்றி விவரி.
வைரஸ்கள், பாக்கரியங்கள்
மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய் உயிரிகளால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகின்றன. இது
பயிர்களின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே பூஞ்சைக் கொல்லிகள், பாக்டீரியக்
கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக்கி,
அதே வேளையில் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகளை உற்பத்தி
செய்வது, நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம்.
2. இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய
கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக.
மெக்சிகோவின் அதிக மகசூல் தரும் அரைக்குள்ள உயரமுடைய (Semi dwarf) செயற்கை உரத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை
கொண்ட கோதுமை வகைகளில் இருந்து சோனாலிகா மற்றும் கல்யான் சோனா போன்ற அரைக்குள்ள
கோதுமை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன.
3. லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டு மக்காச்சோள
கலப்புயிரி வகைகளின் பெயரை எழுதுக.
விரும்பத்தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர்
தாவரங்களை உற்பத்திச் செய்யப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறையே
உயிரூட்டச்சத்தேற்றம் எனப்படும். லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின
மக்காச்சோள ரகங்கள் புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா.
4. வேறுபடுத்துக:
அ) உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
ஆ) மாறுபாடு அடையாத செல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்
அ) உடல
செல் ஜீன் சிகிச்சை
1. உடல செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம்
மாற்றப்படுதல்
2. இந்த திருத்தம் செய்யப்படும் நோயாளிக்கு மட்டுமே
நன்மை பயக்கும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து
செல்லப்படுவதில்லை
இன செல் ஜீன் சிகிச்சை
1. இனப்பெருக்க செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம்
மாற்றப்படுதல்
2. நோயாளிக்கு நன்மை பயக்கும் மற்றும் அடுத்த
தலைமுறைக்கு எடுத்து செல்லப்படும்.
ஆ) மாறுபாடு
அடையாத செல்கள்
மாறுபாடு அடையாத அல்லது சிறப்பு செல் வகைகளாக மாற்றமடையாத செல்களின்
தொகுப்பு.
மாறுபட்ட செல்கள்
மாறுபாடு அடைந்து வெவ்வேறு பணிகளை மேற்கொள்ளும்.
5. DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை
பயன்பாடுகளை எழுதுக.
• டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில் நுட்பமானது தடயவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை
அடையாளம் காணப்படுகிறது. மேலும் இது ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண்பதில்
ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுகிறது.
• இது உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள், பரிணாமம் மற்றும் இனமாதல் ஆகியவற்றை அறிய உதவுகிறது.
6. குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல்
செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன?
பகுப்படைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி
செய்யும் திறன். இது சுய புதுப்பித்தல் எனப்படுகிறது.
7. உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்து.
உட்கலப்பு:
நெருங்கிய தொடர்புடைய மற்றும் ஒரே இனத்தை சார்ந்த உயிரினங்களை 4 முதல் 6 தலைமுறைகளுக்கு கலப்பு
செய்வதே உட்கலப்பு.
வெளிகலப்பு:
தொடர்பற்ற விலங்குகளைக் கலப்பு செய்வதாகும் இவ்வினக்கலப்பின் மூலம்
உருவான புதிய உயிரி கலப்புயிரி, பெற்றோர்களைவிட
பலம் வாய்ந்தது.
VIII. நெடு வினாக்கள்:
1. விலங்குகளில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் யாவை?
• கால்நடைகளில் பால் உற்பத்தியை அதிகரித்தல்.
• கோழிகளில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல்.
• உயர் தர இறைச்சியை உற்பத்திச் செய்தல்.
• வீட்டு விலங்குகளின் வளர் வீதத்தை அதிகப்படுத்துதல்.
2. சடுதிமாற்றத்தை எடுத்துக்காட்டுடன் விவரி
ஒரு உயிரினத்தின் DNA வின்
நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும் பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே
சடுதி மாற்றம். இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூலமாக, உயிரினங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயல் ஆகும்
(எ-கா) ஸொனாரா - 64 என்ற கோதுமை
ரகத்தில் இருந்து காமாக் கதிர்களைப் பயன்படுத்தி சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம்
உருவாக்கப்பட்டது.
3. உயிரூட்டச்சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விரும்பத்தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர்
தாவரங்களை உற்பத்திச் செய்யப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறையே உயிரூட்டச்சத்
தேற்றம் எனப்படும். லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச் சோள ரகங்கள்
புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா.
4. ஜீன் குளோனிங் தொழில்நுட்பத்தைப் படத்துடன் விவரி.
Dr. அயர்ன் வில்மட் பெண் செம்மறி ஆட்டின் மடியில் உள்ள
இரட்டை குரோமோசோம் எண் (2N) கொண்ட உடல் செல்லை தேர்ந்தெடுத்தார்.
அதேபோல் மற்றொரு ஆட்டின் அண்டத்தை பிரித்தெடுத்தார். அண்டம் ஒற்றை எண்
குரோமோசோமைக் (n) கொண்டதால், அதனால்
புதிய செம்மறி ஆட்டினை உருவாக்க இயலாது. அதேபோல மடியில் உள்ள உடல் செல்(2N)
இனப்பெருக்கச் செல்லாக இல்லாததால் அச்செல்லும் புதிய ஆட்டினை
தோற்றுவிக்க முடியாது. எனவே வில்மட் மரபுச் செல்லின் இரட்டை எண்(2n) கொண்ட உட்கருவை நீக்கினார். அதேபோல அண்டத்தில் உள்ள ஒற்றை எண்(n) கொண்ட உட்கருவை நீக்கினார். பின்னர் மடிச் செல் உட்கருவை உட்கரு நீங்கிய
கரு முட்டையினுள் செலுத்தினார்.
தற்போது கருமுட்டை (2n) இரட்டை
எண் கொண்ட குரோமோசோம்களின் தொகுதியினை உட்கரு மாற்றி பொருத்தல் மூலம் முழுவதும்
பெற்றது. பின்னர் இரட்டை எண் (2n) உட்கரு கொண்ட கருமுட்டை,
அதன் தாய் செம்மறி ஆட்டின் கருப்பையினுள் மீண்டும் பொருத்தப்பட்டது.
மேற்படி கருமுட்டையை மற்றொரு புதிய தாய் செம்மறி ஆட்டின்(செவிலித்தாய்)
கருப்பையிலும் பொருத்தப்படலாம். கருமுட்டை கருப்பையினுள் வளர்ந்து செம்மறி
ஆட்டுக்குட்டியைத் தோற்றுவித்தது. இவ்வாறு உருவான குளோனிங் செம்மறி ஆடு மரபுப்
பண்புகளில் இரட்டை எண் உட்கருவை (மடிச் செல்) வழங்கிய செம்மறி ஆட்டினை
ஒத்திருக்குமேயன்றி கருமுட்டை வழங்கிய செம்மறி ஆட்டினை ஒத்திராது,
5. மருத்துவத் துறையில் உயிர்தொழில்நுட்பவியலின்
முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
• இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின்
• வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித
வளர்ச்சி ஹார்மோன்.
• ஹிமோஃபிலியா என்ற இரத்த உறைதல் குறைபாட்டு நோய் கட்டுப்பாட்டிற்கான
இரத்த உறைதல் காரணிகள்.
• இரத்தக் கட்டிகளைக் கரைத்து இதய அடைப்பை தவிர்க்க உதவுகிறது.
• ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெறி
நாய்க்கடி(ரேபிஸ்) நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்
IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS)
1. பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத்தக்க
பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும்
பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகள்:
• நிலைப்பு தன்மை
• உயர்த்தப்பட்ட உணவூட்ட மதிப்பு
• நோய் எதிர்ப்புத் தன்மை
• மாறுபடும் சுற்று சூழல் நிலைகளுக்குத் தாங்கும் தன்மை
• குறைந்த செலவில் அதிக வளர்ச்சி வேகம்.
2. 'இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது'
காரணங்கள் கூறு.
• இயற்கை விவசாயத்தில் வேதி உரங்கள் (or) வேதிபொருட்கள் இருப்பதில்லை
• பூச்சி கொல்லிகள் இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படுவதில்லை
• விதைகள் விரும்பத்தக்க மரபுப் பண்புகளை பெற்று இருக்கும்.
3. “பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது”
இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.
பன்மயம்:
இரண்டுக்கு மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம். பல
தொகுதியாக்கும் இயல்பு எனப்படும். எனவே இறுதியில் கிடைக்கும் தாவரத்தின் அளவு
இராட்சதத் தன்மையை பெற்று இருக்கும்.
எ.டு. தர்பூசணி
4. P என்ற ஜீன் வைட்டமின் A உற்பத்திக்குத்
தேவைப்படுகிறது. இது ‘R’ என்ற மரபுப்பண்பு மாற்றப்பட்ட
தாவரத்தை உற்பத்திச் செய்ய ‘Q' வின் ஜீனோமுடன்
இணைக்கப்படுகிறது.
அ) P,Q மற்றும் R என்பன யாவை?
ஆ)
இந்தியாவில் Rன் முக்கியத்துவத்தை எழுதுக.
அ) P - வைட்டமின் A
உற்பத்திக்கு தேவையான ஜீன்
Q - P - யை இணைக்க உதவும் ஜீனோம்
R - உருமாற்றமடைந்த விருந்தோம்பி செல்லுடன் சேர்ந்த
மறுசேர்க்கை DNA
ஆ) R - முக்கியத்துவம்
இந்தியாவின் முக்கிய குறைபாடான கண் குறைப்பாட்டை நீக்க உதவும்
(Vitamin A) கொண்ட அரிசி ரகம்.