இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில் நுட்பவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 20 : Breeding and Biotechnology
இனக்கலப்பு
மற்றும் உயிரித்தொழில் நுட்பவியல்
நினைவில்
கொள்க
• அதிக மகசூல், உயர்ந்த தரம்,
நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் குறுகிய சாகுபடி காலம் போன்ற
பண்புகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட பயிர் வகைகளை உருவாக்குவதே பயிர் மேம்பாடு ஆகும்.
• ஒரே இனத்தைச் சேர்ந்த
விலங்குகளுக்கு இடையே நடைபெறக் கூடிய கலப்பு உட்கலப்பு எனப்படும். தொடர்பற்ற
உயிரினங்களை கலப்பு செய்வது வெளிக்கலப்பு எனப்படும்.
• கலப்பின சேர்க்கை மூலம்
உயர்தரப் பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது கலப்பின வீரியம் அல்லது
ஹெட்டிரோசிஸ் எனப்படும்
• மரபு பொறியியல் என்பது ஜீன்களை
விரும்பியபடி கையாள்வதும்,
புதிய உயிரிகளை உருவாக்க ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு
இடம் மாற்றுதலும் ஆகும்.
• மாறுபாடு அடையாத அல்லது
சிறப்பு செல் வகைகளாக மாற்றமடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள்
எனப்படுகின்றன.