குருத்தணுக்கள்
(stem cells)
நமது உடல் பல்வேறு பணிகளை
மேற்கொள்ள ஏதுவாக 200 க்கும் மேற்பட்ட சிறப்பான செல் வகைகளைக் கொண்டுள்ளது. எ.கா நியூரான்கள்
எனப்படும் நரம்பு செல்கள் உணர்வு சமிக்ஞைகளைக் கடத்தவும், இதயத்
தசை செல்கள் இதயம் சுருங்கி விரிந்து இரத்தத்தை உந்தித் தள்ளவும், கணைய செல்கள் இன்சுலினை சுரக்கவும் செய்கின்றன. இச்செல்கள் மாறுபாடு
அடைந்த செல்கள் எனப்படுகின்றன.
மாறாக மாறுபாடு அடையாத
அல்லது சிறப்பு செல் வகைகளாக மாற்றமடையாத செல்களின் தொகுப்பு, குருத்தணுக்கள்
எனப்படுகின்றன. இந்த குருத்தணு பல செல் வகைகளாக மாறுபாடு
அடையும் மாறுபட்ட திறன் கொண்டவை. ஒரு குருத்தணு எண்ணிலடங்கா வகைகளாக மாற்றங்களை
அடைந்து எவ்வகையான மாறுபாடு அடைந்த செல்லாகவும் மாறும் போக்கு ‘திறன்’ எனப்படும். பிற வகை வேறுபாடு அடைந்த செல்லாக
மாற்றமடையும் குருத்தணு கீழ்க்கண்ட இரு முக்கிய பண்புகளைக் கொண்டது.
i. பகுப்படைவதன்
மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி செய்யும் திறன். இது ‘சுய புதுப்பித்தல்’ எனப்படுகிறது.
ii. மாறுபாடு
அடைந்த சிறப்பு செல்களாக மாறி குறிப்பிட்ட பணியினை மேற்கொள்ளும் திறன்.
கருநிலைக்
குருத்தணுக்கள் என்பவை ஆரம்ப நிலை கருக்களிலிருந்து பெறப்பட்டு வளர்க்கப்படலாம்.
இவை கருக்கோளத்தின் உட்புறத்திலிருந்து பெறப்படுகின்றன. இவ்வகை செல்கள் உடலின்
எவ்வகை செல்லாகவும் மாற்றமடையும் திறன் பெற்றவை.
முதிர்
குருத்தணுக்கள் அல்லது உடலக் குருத்தணுக்கள் என்பவை பிறந்த பச்சிளம்
குழந்தைகளின் உடலிலும்,
பெரியவர்களின் உடலிலும் காணப்படும். இவ்வகை செல்கள் உடலின்
குறிப்பிட்ட செல் வகைகளாக மட்டும் மாறக்கூடிய திறன் பெற்றவை. அம்னியாட்டிக் திரவம்,
தொப்புள்கொடி மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவை முதிர்
குருத்தணுக்களின் மூலங்களாக விளங்குபவை ஆகும்.
சில நேரங்களில் நமது உடலின்
செல்கள், திசுக்கள்
மற்றும் உறுப்புகள்ஜீன் கோளாறுகளினாலோ, நோய்களாலோ அல்லது
விபத்தினாலோ நிரந்தரமான சேதமடையலாம். இந்த சூழ்நிலைகளில் மேற்கண்ட குறைபாடுகளை
சரிசெய்ய குருத்தணு சிகிச்சை பயன்படும். பார்க்கின்சன் நோய் மற்றும்
அல்சீமர் நோய் போன்ற நரம்புச் சிதைவு குறைபாடுகளை குணப்படுத்த நரம்புக்
குருத்தணுக்கள் (Neuronal stem cells) பயன்படுத்தப்பட்டு
சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றன.