வரலாறு | சமூக அறிவியல் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்
• சீனாவின் பொதுவுடைமைப் புரட்சி
• பனிப்போரும் அணிசேரா
இயக்கமும்
• கொரியப் போரும்
கியூபாவின் ஏவுகணைச் சிக்கலும்
• இஸ்ரேலியப் போரும்
வியட்நாம் போரும்
• ஐரோப்பியப் பொருளாதாரக்
குழுமம் மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு
• பெர்லின் சுவர்
வீழ்ச்சியும் பனிப்போர் யுகமுடிவும்
இரண்டாம்
உலகப்போருக்குப் பின் ஒரு புதியகாலம் உருவாகியது. இக்காலம் ஐரோப்பிய காலனியப்
பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய - ஆப்பிரிக்க காலனிய ஆட்சிக்குட்பட்ட நாடுகளின்
சுதந்திரத்தையும் துவக்கமாகக் கொண்டிருந்தது. முதலாம் உலகப்போர் ரஷ்யாவில் ஒரு
பொதுவுடைமைப் புரட்சியை ஏற்படுத்தியதென்றால் இரண்டாம் உலகப்போர் சீனாவில் ஒரு
கம்யூனிசப் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தது. அமெரிக்க ஐக்கிய நாடும் ஐக்கிய
சோஷலிச் சோவியத் குடியரசு நாடும் வல்லரசுகளாக உருவானதோடு அவை எதிரெதிர்
இருதுருவங்களாய் பிரிந்து நின்றன. இப்பின்னணியில் உருவான பனிப்போரானது கொரியா,
கியூபா,
வியட்நாம்,
மேற்கு
ஆசியா போன்ற பகுதிகளில் கடும் மோதல்களுக்கு இட்டுச்சென்றது.
போரினால்
பாதிக்கப்பட்ட ஐரோப்பாவின் மறுசீரமைப்பை முன்னிறுத்திய மார்ஷல் திட்டத்தின் மூலமாக
அமெரிக்க ஐக்கிய நாடு ஐரோப்பாவின் நம்பிக்கையை வென்றது. சோவியத் ரஷ்யாவோ ஆசிய
ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்து அதன் மூலமாக
அந்நாடுகளின் நல்லெண்ணத்தைப் பெற்றது.
அணிசேரா
நாடுகளின் அமைப்பு இரு வல்லரசுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டைக் கட்டுக்குள் வைக்க
ஓரளவு பங்காற்றியது. அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்து வெளிவரும் பொருட்டு
ஐரோப்பிய நாடுகள் ஒரு குழுமத்தை இயக்கவடிவில் முன்னெடுத்துச் சென்றன. இதுவே
ஐரோப்பியப் பொதுச்சந்தை என்று மாற்றங் கொண்டு இப்போதுள்ள ஐக்கிய ஐரோப்பாவாக
உருப்பெற்றது. பெர்லின் சுவர் உடைக்கப்பட்டதோடு பனிப்போர் காலம் முடிவுக்கு
வந்தது.