வரலாறு | சமூக அறிவியல் - தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்
• நவீனத் தமிழ்நாட்டின் சமூக மாற்றங்கள் குறித்த
அறிவினைப் பெறுதல்
• தமிழ்நாட்டின் பல்வேறு
சமூக சீர்திருத்த இயக்கங்களை அறிதல்
• சமூக
சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களைப் புரிந்து கொள்ளல்
பதினெட்டாம்
நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பியர்கள் இந்தியத் துணைத் கண்டத்தின் மீது தங்கள்
அரசியல் அதிகாரத்தை நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை
இணைப்பதில் அக்கறை செலுத்திய அவர்கள் இந்தியச் சமூகத்தை மறு ஒழுங்கமைவு செய்தனர்.
புதிய வருவாய் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆங்கிலேயரின் பயன்பாட்டுக் கோட்பாடுகள்,
கிறித்தவ
சமய நெறிகள் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த அவர்கள்,
இந்திய
மக்களின் மீது தங்களது பண்பாட்டு மேலாதிக்கத்தைத் திணிக்கவும் முயன்றனர்.
இந்நிலை இந்தியர்களிடையே
எதிர்விளைவினை ஏற்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில்,
நாட்டின்
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் இந்த அவமானத்தை
உணர்ந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் தங்கள் சமூகப் பண்பாட்டு அடையாளங்களைக்
கடந்த காலத்தினுள் தேடினர். இருந்தபோதிலும் காலனிய விவாதங்களில் சில நியாயங்கள்
இருப்பதை உணர்ந்த அவர்கள் சீர்திருத்திக் கொள்ளவும் தயாராயினர். இதன் விளைவே நவீன
இந்தியாவின் சமய, சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு வழிகோலியது.
இக்குறிப்பிட்ட வரலாற்று வளர்ச்சி நிகழ்வு “இந்திய
மறுமலர்ச்சி" என அடையாளப்படுத்தப்பட்டது.
மறுமலர்ச்சியானது
ஒரு கருத்தியல் பண்பாட்டு நிகழ்வாகும். அது நவீனம்,
பகுத்தறிவு,
சமூகத்தின்
முற்போக்கான இயக்கம் ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. திறனாய்வுச்
சிந்தனை அதன் வேர்களில் உள்ளது. மனிதநேயம் எனும் இச்சித்தாந்தம்,
சமூக
வாழ்வு மற்றும் அறிவு ஆகிய துறைகளோடு மொழி,
இலக்கியம்,
தத்துவம்,
இசை,
ஓவியம்,
கட்டடக்கலை
போன்ற அனைத்துத் துறைகளிலும் படைப்பாற்றலைத் தூண்டி எழுப்பியது.