காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | இந்தியா | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
• மறு சீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்
• சமய இயக்கங்கள்
• சமூகக் கொள்ளை
• மக்களின் கிளர்ச்சி
2. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
• சதாரா
• சம்பல்பூர்
• பஞ்சாபின் சில பகுதிகள்
• ஜான்சி
• நாக்பூர்
3. வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின்
கருத்து என்ன?
• ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா இங்கிலாந்து தொழிலகங்களுக்கு
மூலப் பொருட்களை அனுப்பும் நாடாக இருந்தது.
• இந்த மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும்
சந்தையாக இந்தியா இருந்தது.
• இதன் மூலம் இந்திய செல்வ வளங்கள் சுரண்டப்பட்டது.
4. தன்னாட்சி (ஹோம் ரூல்)
இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
• அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷார் ஆட்சிப் பகுதியில்
தன்னாட்சி பெறுவது.
• டொமினியன் அந்தஸ்து அடைவது. எ.கா: ஆஸ்திரேலியா,
கனடா.
• இலக்குகளை அடைய வன்முறையில்லாத அரசியல் சாசன விதிமுறைகளைப் பின்பற்றுவது.
5. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
• மித தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகள் ஒன்றுபட்டனர்.
• காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம்
லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி பெற வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டது.
• முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் ஏற்றுக்
கொண்டது.