Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | இந்தியா | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism

   Posted On :  24.07.2022 06:47 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். IV. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - சமூக அறிவியல் : இந்தியாவின் வரலாறு : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

அலகு 7

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. 1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?

) வஹாபி கிளர்ச்சி

) ஃபராசி இயக்கம்

) பழங்குடியினர் எழுச்சி

) கோல் கிளர்ச்சி

[விடை: () ஃபராசி இயக்கம்]

 

2. ‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்' என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ, வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?

) டிடு மீர்

) சித்து

) டுடு மியான்

) ஷரியத்துல்லா

[விடை: () டுடு மியான்]

 

3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?

) சாந்தலர்கள்

) டிடு மீர்

) முண்டா

) கோல்

[விடை: () சாந்தலர்கள்]

 

4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?

) தாதாபாய் நௌரோஜி

) நீதிபதி கோவிந்த் ரானடே

) பிபின் சந்திர பால்

) ரொமேஷ் சந்திரா

[விடை: () பிபின் சந்திர பால்]

 

5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?

) 1905 ஜூன் 19

) 1906 ஜூலை 18

) 1907 ஆகஸ்ட் 19

) 1905 அக்டோபர் 16

[விடை: () 1905 அக்டோபர் 16]

 

6. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?

) கோல் கிளர்ச்சி

) இண்டிகோ கிளர்ச்சி

) முண்டா கிளர்ச்சி

) தக்காண கலவரங்கள்

[விடை: () முண்டா கிளர்ச்சி]

 

7. 1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

) அன்னிபெசன்ட் அம்மையார்

) பிபின் சந்திர பால்

) லாலா லஜபதி ராய்

) திலகர்

[விடை: () திலகர்]

 

8. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக் கொண்டு சென்றவர் யார்?

) தீன பந்து மித்ரா

) ரொமேஷ் சந்திர தத்

) தாதாபாய் நௌரோஜி

) பிர்சா முண்டா

[விடை: () தீன பந்து மித்ரா]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான வஹாபி கிளர்ச்சி இயக்கம் 1827 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.

2. சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி கோல் கிளர்ச்சி

3. சோட்டா நாக்பூர் சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடை விதித்தது.

4. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1908.

5. W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1885.

 

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

 

1. i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.

ii) 1831 - 1832 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன் கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.

iii) 1855 ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.

iv) 1879 ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை

ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை

இ) (ii) மற்றும் (iv) சரியானவை

ஈ) (i) மற்றும் (iv) சரியானவை

[விடை: () (i), (ii) மற்றும் (iii) சரியானவை]

 

2. i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.

ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.

iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.

) (i) மற்றும் (iii) சரியானவை

) (i), (iii) மற்றும் (iv) சரியானவை

) (ii) மற்றும் (iii) சரியானவை

) (iii) மற்றும் (iv) சரியானவை

[விடை: () (i) மற்றும் (iii) சரியானவை]

 

3. கூற்று : இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.

காரணம் : இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறு.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று தவறு, காரணம் சரி.

[விடை: () கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.]

 

4. கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.

) கூற்று தவறு காரணம் சரி,

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

[விடை: () கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.]

 

IV. பொருத்துக.

 

1. வஹாபி கிளர்ச்சி - லக்னோ

2. முண்டா கிளர்ச்சி - பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்

3. பேகம் ஹஸ்ரத் மகால் - டிடு மீர்

4. கன்வர் சிங் – ராஞ்சி

5. நானாசாகிப் - பீகார்

விடை:

1. வஹாபி கிளர்ச்சி - டிடு மீர்

2. முண்டா கிளர்ச்சி - ராஞ்சி

3. பேகம் ஹஸ்ரத் மகால் - லக்னோ

4. கன்வர் சிங் – பீகார்

5. நானாசாகிப் - பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்

 

Tags : Anti-Colonial Movements and the Birth of Nationalism | India | History | Social Science காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | இந்தியா | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism : One Mark Questions Answers Anti-Colonial Movements and the Birth of Nationalism | India | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | இந்தியா | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்