காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | இந்தியா | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism
VI. விரிவாக விடையளிக்கவும்.
1. 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து
விரிவாக ஆராயவும்.
ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை:
மேலதிகாரக் கொள்கை
உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப் பகுதிகளை இணைத்துக்
கொண்டனர்.
வாரிசு இழப்புக் கொள்கை
அரசுக் கட்டிலில் அரியணை ஏற நேரடி ஆண் வாரிசு இல்லையெனில் அவர்களின்
இறப்புக்குப் பின் அப்பகுதி ஆங்கிலேய ஆட்சிப் பகுதியுடன் இணைக்கப்படும். இதன்மூலம் சதாரா, சம்பல்பூர்,
ஜான்சி, நாக்பூர் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன.
இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை
இல்லாதது:
• மதக்குறியீடுகள் தடை செய்யப்பட்டது.
• புதிய தலைப்பாகை அணிய வற்புறுத்தப்பட்டது.
• ஆடைக் கட்டுப்பாடுகள் மதம் மாற்றுவதற்கான முயற்சியாக கருதப்பட்டது.
• ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டியது.
• வீரர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டனர்.
• கலகம் என்பது புதிய ரக என்பீல்டு ரக துப்பாக்கியின் கீழ் வடிவில்
வந்தது.
• பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய தோட்டாக்கள், விலங்குகள் தோலில் செய்யப்பட்ட உறைகளும் காரணமாக அமைந்தது.
2. 1905 ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது
வங்காள மக்கள் எவ்விதம் நடந்துகொண்டனர்?
வங்காளிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச்
செய்ய 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார்.
வங்காள மக்கள் நடந்து கொண்ட விதம்:
• மத அடிப்படையிலான உள் நோக்கத்தில் பிரித்த வங்கப் பிரிவினை மக்களை
ஒன்றுபடச் செய்தது.
• போராட்டக் குழுக்கள் மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் என இரண்டாகப் பிரிந்து கிளர்ச்சியில்
ஈடுபட்டன.
• வேண்டுகோள்கள், செய்திப் பிரச்சாரங்கள்,
மனுக்கள், பொதுக் கூட்டங்கள் மூலமாக மக்கள் எதிர்ப்பு
நடந்தது.
• பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது என மக்கள் முடிவு செய்தனர்.
• சுதேசி இயக்கக் கொள்கை வங்காள மக்களிடம் வேகமாக பரவியது.
• 1905 அக்டோபர்
16, பிரிவினை நாள் துக்க நாளாக மாறியது.
• ஆயிரக்கணக்கான மக்கள் கங்கை நதியில் புனித நீராடி வந்தே மாதரம் பாடலை
பாடியபடி கல்கத்தா சாலைகளில் அணிவகுத்து வந்தனர்.
• புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இணைந்தே நடந்தது.
• சுதேசி இயக்கங்கள் நான்கு வழிகளில் மக்கள் வெளிப்படுத்தினர். அவைகள் முறையே: மிதவாதப் போக்கு,
தீவிர தேசியவாதம், ஆக்கபூர்வ சுதேசி, புரட்சிகர தேசியவாதம்.
VII. செயல்பாடுகள்
1. 1858 முதல் 1919 ஆம் ஆண்டு வரை
ஆங்கிலேய இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களை அடையாளம் கண்டு, ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாக விவரிக்கவும்.
1858 - நவம்பர் இந்திய அரசுச்சட்டம் :
• 1857 பெரும் புரட்சியின்
விளைவாக இயற்றப்பட்ட சட்டமாகும்.
• இந்திய அரசு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்த நிலையில்
விடுபட்டு பிரிட்டிஷ் நாடாளுமன்ற நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
1875 - நிலக் குத்தகை எடுப்பு கடன் வழங்கும் சட்டம்
:
எந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டதோ அந்த நிலத்தை எடுத்துக்
கொண்டு ஏலம் விட்டு கடன் தொகையை எடுத்துக் கொள்ள கொண்டுவரப்பட்ட சட்டமாகும்.
1905 - வங்கப் பிரிவினைச் சட்டம் :
நிர்வாக வசதிக்காக வங்காளத்தை இரண்டாகப் பிரித்து மக்களிடையே பிரிவினையை
உண்டு பண்ணியது.
1908 சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம்
பழங்குடியினர் நிலத்தில் பழங்குடி அல்லாத மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
1916 - லக்னோ ஒப்பந்தம் :
• காங்கிரஸ் - முஸ்லீம் லீக்
இணைந்து தன்னாட்சியை ஏற்றுக் கொண்டது.
• முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி வழங்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டது.
1916 மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தக் கூட்டம்
:
இந்திய தன்னாட்சி பெற படிப்படியாக உதவி செய்யப்படும் எனக் கூறியது.
1919 - ரௌலட் சட்டம் :
விசாரணையின்றி எவரையும் கைது செய்யலாம் என்று இச்சட்டம் கூறியது.
2. இந்திய வரைபடத்தில் 1857 ஆம் ஆண்டில்
கிளர்ச்சி நடந்த முக்கிய இடங்களைக் குறிக்கவும்.
3. ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில்
பங்கேற்ற அனைத்து முன்னணி தலைவர்களின் படங்களை வைத்து ஒரு செருகேடு (ஆல்பம்) உருவாக்கவும்.
மாணவர் செயல்பாடு.