காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - இந்தியா | வரலாறு | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism
பாடச்சுருக்கம்
• பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
ஆங்கிலேய இந்தியாவில் காலனிய அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிராக
விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்தது.
• பல்வேறு ஆங்கிலேய எதிர்ப்புப் போக்குகளின்
முடிவாக 1857இல் மிகப்பெரிய கிளர்ச்சி
ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத் துவங்கியதற்கு முன்பிருந்த பழைய முறைமையை
மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கங்களைக் கொண்ட,
நிலப்பிரபுத்துவத்
தலைவர்கள் இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தனர்.
• கிளர்ச்சியின் தலைவர்கள் தொலைநோக்குப்
பார்வையின்றி உள்ளூர் நோக்கங்களுக்காக கிளர்ச்சியை வழிநடத்திய போதிலும்
கொடுங்கோன்மையான அன்னிய அரசுக்கு சவால்விட்டு எதிர்க்கும் வகையில் ஒரு முற்போக்கான
முயற்சியாக அது அமைந்தது.
• சுரண்டல் வாத,
அடக்குமுறை
சார்ந்த ஆங்கிலேய அரசுக்கு எதிரான பொதுக்கருத்துகளை உருவாக்கிய இந்திய தேசிய
இயக்கம், காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களில்
தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ள இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தியது.
• தேசிய அரசியலில் பொதுமக்கள் பங்கேற்பதை
அதிகரிக்க சுதேசி இயக்கம் உதவியது.
கலைச்சொற்கள்
நினைத்ததை நிறைவேற்ற போடப்பட்ட
திட்டம் : orchestrated organized to achieve a desired effect
இரகசிய : clandestine secret
மீட்கின்ற : restorative re-establishing
கீழ்க்குத்தகைக்கு விடுதல்,
உள் குத்தகைக்கு விடுதல் : subletting
property leased by one lessee to another
அனைத்து மக்களுக்கும் சமமான :
egalitarian equal
rights for all people
வலுக்கட்டாயமாக : coercive forcible
தாக்குதல் மூலம் பணம்,
பொருள் பறித்தல் : extortion the practice of taking something from an
unwilling person by physical force
நிறைவில்லாத,
திருப்தியற்ற : disgruntled
dissatisfied, frustrated
மிக மோசமான,
படுபாதாளமான :
abysmal extremely bad, deep and
bottomless