தாவரச் சூழ்நிலையியல் கோட்பாடுகள் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Botany : Chapter 6 : Principles of Plant Ecology
தாவரவியல் : தாவரச் சூழ்நிலையியல் கோட்பாடுகள்
பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்
22. சூழ்நிலையியல் - வரையறு.
* இயற்கை வாழிடங்கள் அல்லது உறைவிடங் *களிலுள்ள உயிரினங்களான, தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பற்றிய படிப்பு - ரெய்ட்டர் (1885)
* உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையேயான பரஸ்பர உறவு பற்றிய படிப்பே சூழ்நிலையியல் எனப்படுகிறது – எர்னஸ்ட் ஹெக்கெல் (1889).
23. சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.
* சூழலோடு உயிரினங்கள் செயல்படுவதால் ஏற்படும் உயிரினத் தொகுதிகள் சூழ்நிலையியல் படிகள்.
உயிரிக்கோளம்
உயிர்மம்
நிலப்பரப்பு
சூழல் மண்டலம்
குழுமம்
உயிரித்தொகை
தனி உயிரினம்
24. சூழ்நிலையியல் சமானங்கள் என்றால் என்ன ? இரண்டு எடுத்துக்காட்டு தருக.
* வகைப்பாட்டியலில் வேறுபட்ட சிற்றினங்கள் வெவ்வேறு புவிப் பரப்புகளில் ஒரே மாதிரியான வாழிடங்கள் பெற்றிருந்தால் அவற்றைச் சூழ்நிலையியல் சமானங்கள் என அழைக்கின்றோம். (எ.கா.) : இந்திய மேற்குத்தொடர்ச்சி மலைகளிலுள்ள குறிப்பிட்ட சில தொற்று தாவர ஆர்கிட் சிற்றினங்கள், தென் அமெரிக்காவில் உள்ள தொற்றுத்தாவர ஆர்கிட்களிலிருந்து வேறுபடுகிறது. இருப்பினும், அவை அனைத்தும் தொற்று தாவரங்களே.
* இந்திய மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புல்வெளி சிற்றினங்கள் அமெரிக்காவின் குளிர் பிரதேசப் புல்வெளி (steppe) சிற்றினங்களிலிருந்து வேறுபடுகிறது. இருப்பினும் அவை அனைத்தும் சூழ்நிலையியல் புல்வெளி இனங்களே. இவை அனைத்தும் முதல்நிலை உற்பத்தியாளர்கள் ஆகும். இவை சூழ்நிலை தொகுப்பில் ஒரே மாதிரியாகச் செயல்படுகின்றன.
25. புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுபடுத்துக.
புவி வாழிடம்
1. உயிரினம் அமைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட புவி இடமாகும்.
2. ஒத்த வாழிடம், ஒன்றிற்கு மேற்பட்ட உயிரினங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
3. உயிரினம் புவி வாழிடத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
செயல் வாழிடம்
1. ஒரே சூழ்நிலை தொகுப்பில் உள்ள ஒரு உயிரினம் பெற்றிருக்கும் செயலிடமாகும்.
2. ஒரு செயல் வாழிடத்தில் ஒரேயொரு சிற்றினம் அமைந்திருக்கும்.
3. உயிரினங்கள் காலம் மற்றும் பருவநிலைக்கு ஏற்ப செயல் வாழிடங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும். இதற்கு தாவரங்களால் சீரமைக்கப்படுதல் phyto remediation
26. சில உயிரினங்கள் யூரிதெர்மல் என்றும் மற்ற சில ஸ்டெனோதெர்மல் என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன.
யூரிதெர்மல் :
அதிக வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்துக் கொள்ளும் உயிரினங்கள். எ.கா. ஜோஸ்டீரா (கடல் ஆஞ்சியோஸ்பெர்ம்) மற்றும் ஆர்ட்டிமீசியா ட்ரைடென்டேட்டா.
ஸ்டெனோதெர்மல்:
குறைந்த வெப்பநிலை மாறுபாடுகளை மட்டும் பொருத்து கொள்ளக்கூடிய உயிரினங்கள். எ.கா. மா மற்றும் பனை (நில வாழ் ஆஞ்சியோஸ் பெர்ம்கள்)
27. கடலின் ஆழமான அடுக்குகளில் பசும்பாசிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை ஏதேனும் ஒரு காரணம் தருக.
* கடலின் ஆழமான அடுக்குகளில் போதுமான சூரிய வெளிச்சம் காணப்படாததால் அப்பகுதி மிகவும் இருண்டு காணப்படும்.
* பசும்பாசிகளின் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி அவசியமாதலால் இங்கு அவை காணப்படுவ தில்லை .
* பசும்பாசிகளின் வளர்ச்சிக்கு உவர்நீர் (சிறிது உப்பு நீர்) தேவைப்படுகிறது. இதுவும் இங்கே இல்லாத காரணத்தினால் பசும்பாசிகள் காணப்படுவதில்லை .
28. தாவரங்களால் சீரமைக்கப்படுதல் என்றால் என்ன?
சில தாவரங்கள் மாசடைந்த மண்ணிலிருந்து காட்மியத்தை அகற்ற பயன்படுகின்றன. இதற்குத் தாவரங்களால் சீரமைக்கப்படுதல் என்று பெயர்.(எ.கா.): நெல், ஆகாயத் தாமரை போன்ற தாவரங்கள் காட்மியத்தை தங்களது புரதத்தோடு இணையச் செய்து சகிப்புத்தன்மையை ஏற்படுத்திக் கொள்கின்றன.
29. அல்பிடோ விளைவு என்றால் என்ன? அதன் விளைவுகளை எழுதவும்.
* ஆல்பிடோ விளைவு என்பது பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படுகிறது.
* சிறு துகள்களைக் கொண்ட ஏரோசால்கள் (வளி மண்டலத்தில் உள்ள வாயுக்களில் கலந்துள்ள திட மற்றும் திரவ பொருட்கள்) வளிமண்டலத் தினுள் நுழையும் சூரியக் கதிர்வீச்சினை பிரதி பலிக்கின்றன. இது ஆல்பிடோ விளைவு எனப் படுகிறது.
* இது வெப்பநிலை (குளிர்ச்சி) வரம்புகள் ஒளிச் சேர்க்கை மற்றும் சுவாசச் செயல்களைக் குறைக்கின்றது.
* கந்தகக் கலவைகள் மழை நீரை அமிலமாக்கி அமில மழைக்குக் காரணமாக அமைகின்றன ஓசோன் அழிக்கப்படவும் காரணமாகின்றன.
30. பொதுவாக வேளாண் நிலங்களில் கரிம அடுக்குகள் காணப்படுவதில்லை . ஏனெனில் உழுவதால் கரிமப் பொருட்கள் புதைக்கப்படுகின்றன. பாலை வனத்தின் பொதுவாகக் கரிம அடுக்குகள் காணப் படுவதில்லை . ஏன்?
* கரிம அடுக்குகள் பொதுவாக உதிர்ந்த இலைகள், மலர்கள், கனிகள், மட்குண்ணிகளால் மட்கிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் அதன் கழிவுப் பொருட்கள் சிதைக்கும் நுண்ணுயிர்கள் ஆகியவற்றைக் கொண்டது.
* பொதுவாக இந்த கரிம அடுக்கு வேளாண் நிலம் மற்றும் பாலைவனத்தில் காணப்படுவது இல்லை . ஏனென்றால உழுவதால் கரிமப் பொருட்கள் புதைக்கப்படுகின்றன.
* பாலைநிலம் ஈரப்பதமற்ற அதிக மண்ணை உடையது (90-95%) மண் துகள்கள்), இதன் நீர் சேமிக்கும் திறன் மிகவும் குறைவு.
* எனவே பாலைநிலத்தில் மண்ணின் வளத்தை அதிகரிக்க கூடிய தாவர், விலங்குகள் மற்றும் மட்குண்ணிகள் காணப்படுவது இல்லை.
* இதனால் இங்குள்ள மண்ணின் வளம் குறைந்து காணப்படுவதோடு மண்ணின் வளத்தை தொடர்ந்து அதிகரிக்க கூடிய கரிமபொருட்களுக்கான தாவர, விலங்கினங்கள் மற்றும் மண்ணின் நீரை சேமிக்கும் திறன் குறைவு.
31. உயிரினங்களால் மண் உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விவரி.
* சூழல் மற்றும் காலநிலை செயல் முறையின் அடிப்படையில் மண் உருவாக பாறை உதிர்வடைதல் முதற் காரணமாகிறது.
* உயிரியியல் வழி உதிர்வடைதல் (Weathering) உருவாக மண் உயிரிகளான பாக்டீரியம், பூஞ்சை , லைக்கன்கள் மற்றும் தாவரங்களின் மூலம் உருவாக்கப்படும் சில வேதிபொருட்கள், அமிலங்கள் ஆகியவை அடங்கும்.
32. மணற்பாங்கான மண் சாகுபடிக்கு உகந்ததல்ல ஏன் என விளக்குக.
* மணல் நீரினை விரைவாக இழந்து விடுகிறது. இதனால் நீரை சேமித்து வைக்க இயலாத காரணத்தினால் இது தாவர வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.
* மேலும் மணற்பாங்கான மண்ணில் மட்குகள் கனிமப்பொருட்கள், பாக்டீரியா, பூஞ்சைகள், மண் புழுக்கள், பூச்சிகள் போன்ற தாவர வளர்ச்சிக்கு தேவையான பொருட்கள் காணப் படுவது இல்லை .
* மண்ணின் வளம் மற்றும் உற்பத்தித்திறன் இவ்வகை மண்ணில் மிகவும் குறைவு.
* மண் கரைசலில் காணப்படுகின்ற நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் அயனி செறிவை (pH) பொறுத்தே தாவரங்களுக்கு ஊட்டச் சத்துக்கள் கிடைக்கிறது. இவ்வகை மண்ணின் அயனி செறிவு மிகவும் குறைவு.
* எனவே இவ்வகை மண் சாகுபடிக்கு உகந்ததல்ல.
33. அத்தி மற்றும் குளவி இடையிலான நடைபெறும் இடைச்செயல்களை விளக்குக.
* நேர்மறை இடைச்செயலான - ஒடுங்குயிரி நிலை அத்தி மற்றும் குளவி இடையில் நடைபெறும் இடைச்செயலாகும்.
* அத்திபழங்களுள் காணப்படும் மலர்களை மகரந்தச்சேர்க்கை அடைய செய்ய குளவிகளால் மட்டுமே முடியும் என்பதால் அத்திபழங்களுக்கும் குளவிகளுக்கும். இடையே நேரடியான தொடர்பு உள்ளது.
* அத்திபழங்களினுள் காணப்படும் மலர்களை குளவிகள் (தங்கள் கருமுட்டைகளை இடும் இடமாக தேர்வு செய்யும் போது) மகரந்த சேர்க்கை அடைய செய்கிறது. அதற்கு பதிலாக அத்தி பழங் களில் உருவாகும் இளம் விதைகளை உணவாக குளவிகளின் இளம்புழுக்களுக்கு (லார்வாக்கள்) உணவாக பயன்படுகின்றது.
* இதனால் அந்த தாவரமும் குளவியும் பயன்படுகிறது.
34. லைக்கன் ஒரு கட்டாய ஒடுங்குயிரிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். விளக்குக.
* லைக்கன்கள் (ஆல்கா மற்றும் பூஞ்சை) இவற்றிற் கிடையே காணப்படும் ஒடுங்குயிரி நிலையில் இரண்டுமே பயனடைகின்றன.
* லைக்கன்கள் எனப்படுவது ஆல்காக்கள் மற்றும் பூஞ்சைகள் இணைந்த கூட்டுயிரி வாழ்க்கை.
* பொதுவாக லைக்கன்களில் ஆல்காக்கள் பசும் பாசிகள் (அ) நீல பசும் பாசிகள், பூஞ்சைகள் அஸ்கோமைசீட்டுகள் (அ) பெசிடியோமை சீட்டுகள் வகையைச் சார்ந்தவை.
* ஆல்காக்கள் பச்சையத்தின் உதவியால் ஒளிச் சேர்க்கையில் ஈடுபட்டு கரிம உணவை பூஞ்சைகளுக்கு அளிக்கின்றது.
* பூஞ்சைகள் அதற்கு பதிலாக நீரையும் கனிம உப்புக்களையும் சேமித்து ஆல்காக்களின் ஒளிச் சேர்க்கைக்கு உதவுகிறது.
* இதனால் லைக்கன்கள் தாவரங்கள் காணப்படாத மிகுந்த வறண்ட சூழல்களில் வளர உதவுகின்றது.
35. ஒருங்குயிரி என்றால் என்ன? வேளாண் துறையில் வர்த்தக ரீதியாகப் பாதிக்கும் இரு உதாரணங் களைக் குறிப்பிடவும்.
1. ஒருங்குயிரியில் இரண்டு வகையான சிற்றினங் களுக்கு இடையில் ஏற்படும் கட்டாய இடைச் செயல்களால் இரண்டு சிற்றினங்களும் பயனடைகின்றன.
2. (எ.கா. 1) நீர் பெரணியாகிய அசோலா மற்றும் நைட்ரஜனை நிலை நிறுத்தும் சயனோ பாக்டீரியம் (அனபீனா)
3. ஆந்தோசெரஸ் (பிரையோஃபைட்டுகள் ) உடலத்தில் காணப்படுகின்ற சயனோ பாக்டீரியம் (நாஸ்டாக்) அரிசி சாகுபடிக்கு உயிர் உரமாக பயன் படுத்தப்படுகிறது. வளிமண்டல நைட்ரஜனை நைட்ரோட்டாக மாற்றி மண்ணில் நிலைநிறுத்தி ஓம்புயிரி தாவரங்களுக்கு நைட்ரஜன் சத்து கிடைக்குமாறு செய்கிறது.
4. (எ.கா. 2) மைக்கோரைசா (பூஞ்சைவேரிகள்) உயர் தாவர வேர்களுக்கும் பூஞ்சைகளுக்கும் இடையேயான உறவு.
36. ஓம்புயிரிகளில் வெற்றிகரமாக ஒட்டுண்ணி வாழ்க்கையினை மேற்கொள்ள உதவும் இரண்டு தகவமைப்பு பண்புகளை வரிசைப்படுத்துக.
முழு ஒட்டுண்ணிகள் : (கஸ்குட்டா)
ஒரு உயிரினமானது தனது உணவிற்காக ஓம்புயிரி தாவரத்தினை முழுவதுமாகச் சார்ந்திருந்தால் அது முழு ஒட்டுண்ணி என அழைக்கப்படுகிறது. இவை மொத்த ஒட்டுண்ணிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
(எ.கா) ஓம்புயிரிகளான அக்கேசியா, டுராண்டா மற்றும் பல்வேறு தாவரங்களின் மீது கஸ்குட்டா என்ற தாவரம் முழுதண்டு ஒட்டுண்ணியாகக் காணப்படுகின்றன. மலர்தலை தூண்ட தேவை யான ஹார்மோன் கூட கஸ்குட்டா ஓம்புயிரி தாவரத்திலிருந்து பெறுகிறது.
பாதி ஒட்டுண்ணி : (விஸ்கம் மற்றும் லோரான்த்ஸ்)
ஒரு உயிரினமானது ஓம்புயிரிலிருந்து நீர் மற்றும் கனிமங்களை மட்டும் பெற்று தானே ஒளிச் சேர்க்கையின் மூலமாக தனக்கு தேவையான உணவினைத் தயாரித்துக் கொள்பவை பாதி ஒட்டுண்ணி எனப்படும்.
(எ.கா) விஸ்கம் மற்றும் லோரான்தஸ் - தண்டு வாழ் பகுதி ஒட்டுண்ணியாகும். சந்தனக்கட்டை வேர்வாழ் பகுதி ஒட்டுண்ணி ஆகும்.
37. கொன்று உண்ணும் வாழ்க்கை முறையில் இயற்கையில் ஏற்படும் இரு முக்கியமான PTA-1 பண்பினைக் குறிப்பிடுக.
* இரண்டு வகையான உயிரினங்களுக்கு இடை யிலான இடைச் செயல்களில் ஒரு உயிரி மற்றொன்றை அழித்து உணவினைப் பெறுகிறது.
* உயிரினங்களில் கொல்லும் இனங்கள் கொன்று உண்ணிகள் என்றும் கொல்லப்பட்டவை இரை உயிரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
* இதில் கொன்று உண்ணிகள் நன்மையடையும் போது இரை உயிரிகள் பாதிப்படைகின்றன.
எடுத்துக்காட்டு :
* ட்ரசிரா, நெப்பந்தஸ், டையோனியா, யூட்ரிகுலேரியா, சாரசீனியா - போன்ற பல்வேறு பூச்சி உண்ணும் தாவரங்கள் பூச்சிகள், சிறு விலங்குகளை சாப்பிடுவதன் மூலம் தேவை யான நைட்ரஜனை பெறுகின்றன.
* கால்நடைகள் ஒட்டகங்கள், ஆடுகள் முதலியன அடிக்கடி சிறுசெடிகள் புதர்செடிகள் மற்றும் மரங்களின் இளம் தாவரத் தண்டினுடைய இளம் துளிர்களை மேய்கின்றன.
* பெரும்பாலும் பல்பருவத்தாவரங்களைக் காட்டிலும் ஒருபருவத் தாவரங்களே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
* மேய்தல் மற்றும் இளந்துளிர் மேய்தல் தாவரச் செறிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
* பூச்சிகளின் கிட்டதட்ட 25 சதவீதம் பூச்சிகள் தாவரக் கொல்லிகளாகும். (phytophagus)
* தாவரச் சாறு மற்றும் தாவரப் பாகங்களை உண்ணுதல்
* தாவரங்களின் பல தற்காப்ப, செயல்கள் உருவாக்கப்படுவதன் மூலம் கொன்று உண்ணுதல் தவிர்க்கப்படுகிறது.
* எ.கா. - எருக்கு - இது இதயத்தைப் பாதிக்கும் நச்சுத் தன்மையுள்ள கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது.
* புகையிலை - இது தீங்கு விளைவிக்கும் நிக்கோட்டினை உற்பத்தி செய்கிறது. காஃபி - தாவரங்கள் தீங்கு விளைவிக்கும் காஃபினை உற்பத்தி செய்கிறது.
38. ஓபிரிஸ் ஆர்கிட் தேனீக்களின் மூலம் எவ்வாறு மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகிறது?
* ஒரு உயிரி தனது அமைப்பு, வடிவம், தோற்றம் நடத்தை ஆகியவற்றை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழும் வாய்ப்பைப் பெருக்கவும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் நிகழ்த்தப்படும் ஒரு செயலாகும்.
* பூக்களில் காணப்படும் பாவனை செயல்கள் மகரந்தச் சேர்க்கையாளர்களை கவர உதவுகிறது. எடுத்துக்காட்டு : ஓஃபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்து காணப்பட்டு ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்துகின்றன. இது மலர் பாவனை செயல்கள் (floral mimicry) என அழைக்க்ப படுகின்றன. பாவனை செயல்கள் பரிணாம முக்கியத்துவம் கொண்டவை.
39. வாழ்வதற்கு நீர் மிக முக்கியமானது. வறண்ட சூழலுக்கு ஏற்றவாறு தாவரங்கள் தங்களை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பதற் கான மூன்று பண்புகளைக் குறிப்பிடுக.
* உவர் (அ) வறள் நிலச் சூழலில் வாழ்கின்ற தாவரங்கள் வறண்ட நிலத்தாவரங்கள் எனப்படுகின்றன.
* வேர்த்தொகுப்பு தண்டு தொகுப்பினைக் காட்டிலும் (நன்கு) அதிக வளர்ச்சி அடைந்து உள்ளது.
* இலைக்காம்பானது சதைப்பற்றுள்ள இலை போன்று உருமாற்றம் அடைந்துள்ளது. இது காம்பிலை அல்லது ஃபில்லோடு எனப்படும்.
* (எ.கா) அக்கேஷியா மெலனோசைலான்.
* முழு இலைகளும் முட்களாகவோ (ஒபன்ஷியா) மற்றும் செதில்களாகவோ (ஆஸ் பராகஸ்) மாற்றுரு அடைந்து காணப்படுகின்றன.
* நீர் பற்றாக்குறை ஏற்படுமானால் அறை வெப்பநிலைகளில் தற்காலிக வாடல் நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றன.
* நீராவிப் போக்கினைக் குறைக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
40. ஏரியில் காணப்படும் மிதக்கும் தாவரங்களின் வெளிப்பகுதிகளை விட, மூழ்கிக் காணப்படும் தாவரங்கள் குறைவான ஒளியைப் பெறுவது ஏன்?
* நீரில் மிதக்கும் தாவரங்களின் வெளிப்பகுதிகளை விட மூழ்கிக் காணப்படும் தாவரங்கள் குறைவான ஒளியை பெறுகிறது. ஏனென்றால்
* நீரில் மூழ்கிக் காணப்படும் தாவரங்கள் வளி மண்டல காற்றுடனோ மற்றும் நீரின் மேற் பரப்புடனோ தொடர்பு கொண்டிருப்பதில்லை. மிதக்கும் நீர்வாழ் தாவரங்களின் (அ) வேரூன்றி
* மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்களின் இலைகள், பூக்கள், சூரிய ஒளியை நீரின் உட்பகுதிக்கு செல்ல அனுமதிப்பதில்லை. எனவே பலவீனமான அல்லது குறைவான ஒளியைப் பெறுகின்றன.
41. கனிக்குள் விதை முளைத்தல் என்றால் என்ன ? இது எந்தத் தாவர வகுப்பில் காணப்படுகிறது?
* கனிக்குள் விதை முளைத்தல் என்பது சிறப்பு வகை விதை முளைத்தல் இது சதுப்புநில தாவரங் களில் காணப்படுகிறது.(V1V1 pary)
* விதை முளைத்தலானது தாய் தாவரத்தில் இருக்கும் போதே நடைபெறுகின்றது. அப்போது தான் விழுந்தவுடன் சதுப்பு நிலப்பரப்பில் வேர் ஊன்றி நிற்க முடியும்.
* இளஞ்செடியானது தாய் தாவரத்திலிருந்தே உணவினை பெற்றுக் கொள்கிறது.
* சதுப்பு நில தாவரங்கள் நடுத்தர அளவு வளரக் கூடிய மரங்களாகும்.
* இவை கடற்கரை ஓரங்களிலும், முகத்துவாரங் களிலும் மிகையான உப்புகள் காணப்படும் நிலப் பகுதியிலும் வளரும் சிறப்பு வகை தாவரங்களாகும்.
42. வெப்ப அடுக்கமைவு என்றால் என்ன? (Thermal stratification) அதன் வகைகளைக் குறிப்பிடுக.
* பொதுவாக வெப்ப அடுக்கமைவு நீர் சார்ந்த வாழ் விடத்தில் காணப்படுகிறது.
* நீரின் ஆழம் அதிகரிக்க அதன் வெப்பநிலை அடுக்குகளில் ஏற்படும் மாற்றமே வெப்பநிலை அடுக்கமைவு என அழைக்கப்படுகிறது.
* மூன்று வகையான வெப்ப அடுக்கமைவுகள் காணப்படுகின்றன.
1. எபிலிம்னியான் - நீரின் வெப்பமான மேல் அடுக்கு
2. மெட்டாலிம்னியான் - நீரின் வெப்பநிலை படிப் படியாகக் குறையும் ஒரு மண்டலம்
3. ஹைப்போலிம்னியான் - குளிர்ந்த நீருள்ள கீழ் அடுக்கு.
43. தாவரங்களில் ரைட்டிடோம் அமைப்பு எவ்வாறு தீக்கு எதிரான பாதுகாப்பு அமைப்பாகச் செயல் படுகிறது என்பதைக் குறிப்பிடுக.
* தாவரங்களில் காணப்படும் தீக்கு எதிரான உடற் கட்டமைவு ரைட்டிடோம் எனப்படும்.
* ரைட்டிடோம் அமைப்பு குறுக்கு வளர்ச்சியின் முடிவாகத் தோன்றிய சூபரினால் ஆன பெரிடெர்ம், புறணி, ஃபுளோயம் திசுக்களான பல அடுக்குகளை கொண்டது. .
* இப்பண்பு தீ, நீர் இழப்பு, பூச்சிகளின் தாக்குதல் நுண்ணுயிர் தொற்று ஆகியவற்றிலிருந்து தாவரங்களின் தண்டுகளைப் பாதுகாக்கின்றன.
44. மிர்மிகோஃபில்லி என்றால் என்ன?
* எறும்புகள் சில நேரங்களில் மா, லிட்சி, ஜாமுன், அக்கேஷியா போன்ற சில தாவரங்களைத் தங்குமிடமாக எடுத்துக் கொள்கின்றன.
* இந்த எறும்புகள் தாவரத்திற்கு தொந்தரவு அளிக்கும் உயிரினங்களிடமிருந்து காக்கும் காப்பாளராகவும் இதற்குப் பதிலாக தாவரங்கள் எறும்புகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தையும் அளிக்கின்றன.
* இது மிர்மிகோஃபில்லி என அழைக்கப்படுகிறது.
(எ.கா) அக்கேஷியா மற்றும் அக்கேஷியா எறும்பு
45. விதைப் பந்து என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?
* மனித உதவியுடன் விதை பரவுதல் முறையே விதை பந்து எனப்படும்.
* களிமண் மற்றும் இலைமட்கு (பசுமாட்டின் சாணம் உட்பட) விதைகளைக் கலந்து உருவாக்கப்படுவது விதைப்பந்துகள்.
* இது ஜப்பானியர்களின் பழமையான நுட்பமாகும்.
* இம்முறையில் தாவரங்களைத் தக்க சூழலில் வளர பொருத்தமான இடங்களுக்கு கொண்டு சேர்க்க வெற்று இடங்களில் தாவரங்களை மீள் உருவாக்கவும் உதவுகிறது. முன் தகுந்த பரவல் முறையில் அரிதான இடங்களில் பரவச் செய்வதற்கும் துணைபுரிகிறது.
46. விலங்குகள் மூலம் விதை பரவுதலானது காற்று மூலம் விதை பரவுவதிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதைக் குறிப்பிடுக.
காற்று மூலம் விதை பரவுதல்
1. தனிவிதைகள் (அ) முழுக்கனிகளில் தோன்றும் மாற்றுருக்கள் காற்றின் மூலம் பரவ உதவி செய்கின்றன.
2. உயரமான மரங்களில் கனிகள் மற்றும் விதைகள் காற்றின் மூலம் பரவுகிறது.
3. மிகச்சிறிய விதைகள் மேலும் சிறிய லேசான தட்டையான வெளிஉறை காற்று மூலம் விதை பரவ காரணம் (எ.கா) ஆர்கிட்கள். தட்டையான இறக்கைகள் கொண்ட விதை மற்றும் முழுக் கனிகள் காணப்படுகிறது. (எ.கா) மேப்பிள், கைரோகார்ப்பஸ்
4. இறகு வடிவ இணை அமைப்புகள் கனிகள் மற்றும் விதைகளில் காணப்படுகின்றன. இவை விதைகள் மிதக்கும் திறனை அதிகரித்து உயர்ந்த இடங்களை அடைய உதவுகின்றன. (எ.கா) வெர்னோனியா, அஸ்கிலிபியாஸ்
5. வலுவான காற்று மூலம் கனிகள் அதிர்வடையச் செய்யும் போது அவை பிளக்கப்பட்டு அதன் மூலம் விதைகள் வெளியேறுகின்றன. எ.கா. அரிஸ்டோலோக்கியா, பாப்பி
விலங்கு மூலம் விதை பரவுதல்
1. பறவைகள் மற்றும் பாலூட்டிகள் மனிதன் மூலம் விதைகள் கனிகள் பரவுதலுக்கு தகவமைப்புகளை பெற்றுள்ளன.
2. கனிகள் மற்றும் விதைகளில் காணப்படும் கொக்கிகள் (சாந்தியம்) நுண்ணிழை செதில்கள் (அன்ட் ரொபோகன்) முள் போன்ற அமைப்புகள் (அரிஸ்டிபா) விலங்குகளின் உடல்கள் மனிதனின் உடைகளின் மீது ஒட்டி பரப்புகின்றன.
3. சில கனிகளில் ஒட்டிக்கொள்ளும் சுரப்புத்தூவிகள் உதவியால் மேயும் விலங்குகளின் ரோமங்கள் மீது ஒட்டி எளிதில் பரவுகின்றன. (எ.கா) போயர் ஹாவியா மற்றும் கிளியோம்.
4. கனிகளின் மீது காணப்படும் பிசுபிசுப்பான அடுக்கு பறவைகள் கனிகளை உண்ணும் போது அவற்றின் அலகுகளில் விதையுடன் ஒட்டி கொள்கிறது. பின்னர் பறவைகள் அலகை மரக்கிளைகளில் தேய்க்கும் போது விதை பரவுகிறது. (எ.கா) கார்டியா, அலாஞ்சியம்
5. பகட்டான நிறமுடைய சதைப்பற்றுள்ள கனிகள் மனிதர்களால் உண்ணப்பட்டு பின்னர் அவற்றின் விதைகள் வெகு தொலைவில் வீசப்பட்டு பரவுகின்றன. (எ.கா.) பப்பாளி
47. கூட்டுப் பரிணாமம் என்றால் என்ன?
* உயிரினங்களுக்கு இடையிலான இடைச்செயல் களில் இரு உயிரிகளின் மரபியல் மற்றும் புற அமைப்பியல் பண்புகளில் ஏற்படும் பரிமாற்ற மாறுபாடுகள் பல தலைமுறையை தொடர்கிறது. கூட்டுப்பரிணாமம் எனப்படும்.
* இடைச்செயல் புரியும் சிற்றினங்களில் நிகழும் ஒழுங்கு நிலைமாற்றம் ஒருவகை கூட்டுத் தகவமைப்பாகும்.
* (எ.கா) பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் (ஹாபினேரியா மற்றும் மோத்) ஆகியவற்றின் உறிஞ்சும் குழலின் நீளமும் மலரின் அல்லி வட்டக் குழல் நீளமும் சமமானவை. எ.கா. பறவைகளின் அலகு வடிவம் மற்றும் மலரும் வடிவம் மற்றும் அலகு.
48. வெப்பநிலை அடிப்படையில் ராங்கியர் எவ்வாறு உலகத் தாவரக் கூட்டங்களை வகைப்படுத்தியுள்ளார்?
* ஒரு பகுதியில் நிலவும் வெப்பநிலையின் அடிப்படையில் ராங்கியர் உலகின் தாவரங்களை
1. மெகாதெர்ம்கள்
2. மீசோதெர்ம்கள்
3. மைக்ரோ தெர்ம்கள்
4. ஹெக்கிஸ் டோதெர்ம்கள்
என நான்கு வகைகளில் வகைப்படுத்தியுள்ளார்.
* வெப்பநீர் ஊற்றுகளிலும் ஆழமான கடல் நீரோட்டங்களிலும் சராசரி வெப்பநிலை 100°C க்கு அதிகமாக இருக்கும்.
* சகிப்புத் தன்மைக்கான சூழல்காரணி வெப்ப நிலையை பொருத்து இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. யூரிதெர்மல் : இவை அதிக வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்துக் கொள்ளும் உயிரினங்கள். (எ.கா) ஜோஸ்டீரா (கடல் ஆஞ்சியோஸ்பெர்ம்) ஆர்ட்டிமீசியா ட்ரைடென்டேட்டா.
2. ஸ்டெனோதெர்மல் : இவை குறைந்த வெப்ப நிலை மாறுபாடுகளை மட்டும் பொருத்துக் கொள்ளக்கூடிய உயிரினங்கள். (எ.கா) மா மற்றும் பனை (நிலவாழ் ஆஞ்சியோஸ்பெர்ம்)
I. வெப்ப அடுக்கமைவுகள் என்று நீர் சார்ந்த வாழ் விடத்தில் நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பநிலை அடுக்குகளில் ஏற்படும் மாற்றமே வெப்பநிலை அடக்கமைவு என அழைக்கப்படுகிறது. 3 வகைப்படும்.
1. எபிலிம்னியான்: நீரின் வெப்பமான மேல் அடுக்கு
2. மெட்டாலிம்னியான்: நீரின் வெப்பநிலை படிப்படியாகக் குறையும்
3. ஹைப்போலிம்னியான் : குளிர்ந்த நீருள்ள கீழ் அடுக்கு
II. வெப்பநிலை அடிப்படையிலான மண்டலங்கள்
விரிவகலம் மற்றும் குத்துயரம் - இவை பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை மற்றும் தாவரக் கூட்டங்களைப் பாதிக்கிறது.
விரிவகலம் (Latitude)
விரிவகலம் என்பது பூமத்திய ரேகையின் 0° முதல் துருவங்களின் 90° வரையில் காணப்படும் கோணமாகும்.
குத்துயரம் (Altitude)
கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு மேலே அந்தப் பகுதியானது அமைந்துள்ளது என்பதைக் குறிப்பதாகும்.
49. தீயினால் ஏற்படும் ஏதேனும் ஐந்து விளைவுகளைப் பட்டியலிடுக?
* தீயானது தாவரங்களுக்கு நேரடியான அழிவுக் காரணியாக விளங்குகிறது.
* எரிகாயம் அல்லது எரிதலால் ஏற்படும் வடுக்கள் ஒட்டுண்ணி பூஞ்சைகள் மற்றும் பூச்சிகள் நுழை வதற்கான இடமாக உள்ளது.
* ஒளி, மழை, ஊட்டச்சத்து சுழற்சி, மண்ணின் வளம் ஹைட்ரஜன் அயனிசெறிவு (அ) pH, மண், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றில் மாறுபாடுகளை உண்டாக்குகிறது.
* எரிந்த பகுதியிலுள்ள மண்ணில் வளரும் சில வகையான பூஞ்சைகள் எரிந்த மண் வரும் பைரோஃபில்லஸ் (pyrophilous) எனப்படும். (எer) பைரோனிமா சன்ஃப்பளபென்ஸ்
50. மண் அடுக்கமைவு என்றால் என்ன? மண்ணின் வெவ்வேறு அடுக்குகளைப் பற்றி விவரிக்கவும்
* மண் பொதுவாக வெவ்வேறு அடுக்கு மண்டலங்களாக பல்வேறு ஆழத்தில் பரவியுள்ளது. இவை அவற்றின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பண்புகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
* தொடர்ச்சியான ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மண்ணின் பகுதியே மண்ணின் நெடுக்க வெட்டு விவரம் எனப்படும்.
அடுக்கு
O - அடுக்கு (கரிமப் பகுதி - இலைமட்கு)
விவரம்
* இது புதிய மற்றும் பாதி மட்கிய கரிமப் பொருட்களைப் பெற்றது. - 01 - புதிதாக உதிர்ந்த இலைகள், கிளைகள் மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றைக் கொண்டது. 02 - நுண்ணுயிரிகளால் மட்கிய தாவரங்கள் விலங்குகள் மற்றும் அதன் கழிவுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டது. இது சாகுபடி நிலங்களிலும் பாலைவனங் களிலும் காணப்படுவதில்லை
A - அடுக்கு (திரவப்பொருட்களைக் கசியவிடும் பகுதி)
(இதன் மேற்பகுதி மண் - அதிக அளவு இலை மட்கு மற்றும் கனிமங்களைக் கொண்டது.)
விவரம்
* இது இலைமட்குகள், உயிரினங்கள் மற்றும் கனிமப்பொருட்கள் கொண்ட மண்ணின் மேற்பட்ட பகுதி.
A1 - கரிம மற்றும் கனிமப்பொருட்கள் இரண்டும் அதிக அளவில் கொண்ட கருநிறப் பகுதி.
A2 - பெரிய அளவுள்ள கனிமப்பொருட்களை கொண்ட வெளிறிய பகுதி.
B - அடுக்கு (திரட்சியான பகுதி)
(இதன் அடிமண் - குறைந்த அளவு இலைமட்கு அதிகக் கனிமங்களைக் கொண்ட பகுதி)
விவரம்
* இது இரும்பு, அலுமினியம் மற்றும் சிலிக்கா அதிகம் கொண்ட கரிமக் கலவை கொண்ட களிமண் பகுதி:
C- அடுக்கு (பகுதி உதிர்வடைந்த அடுக்கு)
உதிர்வடைந்த பாறை துண்டுகள் - குறைவான அல்லது தாவரங்கள் விலங்குகள் அற்ற பகுதி
விவரம்
* இது மண்ணின் முதன்மைப் பொருளாகும். இது உயிரினங்கள் காணப்படாத குறைவான கரிமப் பொருட்களைக் கொண்டது.
R - அடுக்கு (கற்படுகை) இது தாய்பாறை எனப்படுகிறது.
விவரம்
* இது முதன்மை கற்படுகை, இதன் மீது தான் நில நீரானது சேமிக்கப்படுகிறது
51. பல்வேறு வகையான ஒட்டுண்ணிகளைப் பற்றி தொகுத்து ஓம்புயிரியின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஓம்புயிரியின் மேல் கஸ்குட்டா எழுதுக.
ஒட்டுண்ணி வாழ்க்கை (Parasitism):
இரண்டும் வெவ்வேறான சிற்றினங்களுக்கு இடையிலான இடைச்செயல்களாகும். இதில் சிறிய கூட்டாளியானது (ஒட்டுண்ணி) பெரிய கூட்டாளியிடமிருந்து (ஓம்புயிரி அல்லது தாவரம்) உணவினைப் பெற்றுள்ளது. ஒட்டுண்ணி சிற்றினமானது பயன்பெறும் போது ஓம்புயிரியிகளானது பாதிப்படைகின்றது. இவை இரண்டு வகைகளாக வகைப்படுத்துப்பட்டு உள்ளன. அவை முழு ஒட்டுண்ணி மற்றும் பாதி ஒட்டுண்ணி
முழு ஒட்டுண்ணிகள் (Holoparasites):
ஒரு உயிரினமானது தனது உணவிற்காக ஓம்புயிரி தாவரத்தினை முழுவதுமாகச் சார்ந்திருந்தால் அது முழு ஒட்டுண்ணி என அழைக்கப்படுகிறது. மொத்த ஒட்டுண்ணிகள்.
எடுத்துக்காட்டு :
ஓம்புயிரிகளான அக்கேசியா, டுராண்டா மற்றும் பல்வேறு தாவரங்களின் மீது கஸ்குட்டா என்ற தாவரம் முழுதண்டு ஒட்டுண்ணியாகக் காணப்படுகின்றன.
பாதி ஒட்டுண்ணிகள் (Hemiparasites):
ஓர் உயிரினமானது ஓம்புயிரியிலிருந்து நீர் மற்றும் கனிமங்களை மட்டும் பெற்று, தானே ஒளிச்சேர்க்கையின் மூலமாகத் தனக்குத் தேவை யான உணவினைத் தயாரித்துக் கொள்பவை பாதி ஒட்டுண்ணி எனப்படும். இது பகுதி ஒட்டுண்ணி (partial parasites) எனவும் அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
* விஸ்கம் மற்றும் லோரான்தஸ் தண்டுவாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
* சேண்டலம் (சந்தனக்கட்டை) வேர்வாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
52. நீர்த் தாவரங்களின் வகைகளை அதன் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கவும்.
நீர் அல்லது ஈரமான சூழலில் வாழ்கின்ற தாவரங்கள் நீர்வாழ் தாவரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. நீர் மற்றும் காற்றின் தொடர்பினைப் பொறுத்து அவை கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
i. மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Free floating hydrophytes):
* இவ்வகை தாவரங்கள் நீரின் மேற்பரப்பில் சுதந்திரமாக மிதக்கின்றன. மண்ணுடன் தொடர்பு கொள்ளாமல் நீர் மற்றும் காற்றுடன் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளன. (எ.கா) ஆகாயத்தாமரை
ii. வேரூன்றி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Rooted floating hydrophytes):
இத்தாவரங்களின் வேர்கள் மண்ணில் பதிந்து உள்ளன. ஆனால் அவற்றின் இலைகள் மற்றும் மலர்கள் நீரின் மேற்பரப்பில் மிதக்கின்றன. இத் தாவரங்கள் மண், நீர், காற்று ஆகிய மூன்றுடன் தொடர்பு கொண்டுள்ளன. (எ.கா) நிலம்போ (தாமரை), நிம்ப்ஃ பெயா.
iii. நீருள் மூழ்கி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Submerged floating hydrophytes):
இத்தாவரங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இவைகள் மண் மற்றும் காற்றோடு தொடர்பு பெற்றிருப்பதில்லை. (எ.கா) செரட்டோஃபில்லம்
iv. நீருள் மூழ்கி வேரூன்றிய நீர்வாழ் தாவரங்கள் (Rooted-submerged hydrophytes):
இத்தாவரங்கள் நீருள் மூழ்கி மண்ணில் வேறூன்றி காற்றுடன் தொடர்பு கொள்ளாதவை. (எ.கா) ஹைட்ரில்லா, வாலிஸ்நேரியா
iv) நீருள் மூழ்கி வேரூன்றிய நீர்வாழ் தாவரங்கள் . வாலிஸ்நேரியா
v. நீர் நில வாழ்பவை அல்லது வேர் ஊன்றி வெளிப்பட்ட நீர் வாழ் தாவரங்கள் (Amphibious hydrophytes (Rooted emerged hydorphytes):
இத்தாவரங்கள் நீர் மற்றும் நிலப்பரப்பு தக அமைவு முறைகளுக்கு ஏற்றவாறு வாழ்கின்றன. இலைகள், ஆழமற்ற நீரில் வளர்கின்றன. (எ.கா) ரெனன்குலஸ், டைஃபா மற்றும் சாஜிடேரியா. ஹைக்ரோபைட்கள் (Hygrophytes) : ஈரத் தன்மையுடைய சூழல் மற்றும் நிழல் உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள் ஹைக்ரோ ஃபைட்கள் என்று அழைக்கப்படுகின்றன. (எ.கா) ஹேபினேரியா (ஆர்கிட்கள்) மாஸ்கள் (பிரையோ ஃபைட்கள்) முதலியன,
v) வேர் ஊன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்கள்
53. வறண்ட நீர் தாவரங்களின் உள்ளமைப்பு தகவமைப்புகளை எழுதுக.
* உள்ளமைப்பில் தக அமைவுகள் : நீராவிப் போக்கின் நீர் இழப்பினைத் தடுப்பதற் காகப் பல்லடுக்கு புறத்தோலுடன் தடித்த கியூட்டிகளும் காணப்படுகின்றன.
பெப்பரோமியா சதைப்பற்றுள்ள இலை - குறுக்குவெட்டுத்தோற்றம் (இலையின் பக்கவாட்டு பகுதி)
* ஸ்கிளிரங்கைமாவினாலான புறத்தோலடித்தோல் (Hypodermis) நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது.
* உட்குழிந்த குழிகளில், தூவிகளுடன் கூடிய உட் குழிந்தமைந்த இலைத் துளைகள் (Sunken stomata) கீழ்புறத் தோலில் மட்டுமே காணப்படுகின்றன.
* இரவில் திறக்கும் (Scotoactivestomata) வகை யான இலைத்துளைகள் சதைப்பற்றுள்ள தாவரங்களில் காணப்படுகின்றன.
* பல்லடுக்கு கற்றைஉறை கொண்ட வாஸ்குலத் தொகுப்புகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
* இலையிடைத் திசுவானது பாலிசேடு மற்றும் பஞ்சு திசுவாக நன்கு வேறுபாடு அடைந்துள்ளது.
* சதைப்பற்றுள்ளவற்றில் தண்டுப்பகுதியில் நீர் சேமிக்கும் திசுக்களைப் பெற்ற பகுதியாக விளங்குகிறது. .
54. உவர்சதுப்பு நிலத்தாவரங்களில் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.
புற அமைப்பில் தக அமைவுகள் :
மித வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத்தாவரங்கள் சிறுசெடிகளாகவும் வெப்ப மண்டலப்பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத்தாவரங்கள் பெரும்பாலும் புதர் செடிகளாகவும் காணப்படுகின்றன.
* இயல்பான வேர்களுடன் கூடுதலாக முட்டு வேர்கள் (stiltroots) இவற்றில் தோன்றுகின்றன
* சிறப்பு வகை வேர்கள் நிமட்டோஃபோர்கள் (pneumatophores) எனப்படுகின்றன. அதில் அமைந்துள்ள நிமத்தோடுகள் (pneumathodes) கொண்டு தாவரம் அதற்குத் தேவையான அளவு காற்றோட்டத்தைப் பெறுகிறது. இவை சுவாசிக்கும் வேர்கள் (breathingroots) எனவும் அழைக்கப்படுகின்றன. (எ.கா) அவிசென்னியா
நிமட்டோஃபோர்கள் கொண்ட சதுப்பு நிலத்தாவரம்
சதைப்பற்றுள்ள சதுப்பு நிலத்தாவரம் - சாலிகோர்னியா
* தாவர உடலத்தின் தரைமேல் பகுதிகள் தடித்த கியூட்டிக்கிளை பெற்றுள்ளது.
* இலைகள் தடித்தவை, முழுமையானவை, சதைப் பற்றுள்ளவை, பளபளப்பானவை. சில சிற்றினங்களில் இலைகள் காணப்படுவதில்லை (Aphyllous) '
* கனிக்குள் விதை முளைத்தல் காணப்படுகிறது.
55. விதை பரவுதலின் நன்மைகள் யாவை?
* தாய் தாவரத்தின் அருகில் விதைகள் முளைப் பதைத் தவிர்ப்பதால் விலங்குகளால் உண்ணப் படுவது அல்லது சக போட்டிகளைத் தவிர்ப்பது போன்ற செயல்களிலிருந்து தாவரங்கள் தப்பிக்கின்றன.
* விதை பரவுதல் விதை முளைத்தலுக்கு உகந்த இடத்தினைப் பெறும் வாய்ப்பை அளிக்க விதை பரவுதல் உதவுகிறது.
* தன் மகரந்தசேர்க்கை நிகழ்த்தும் தாவரங்களில் அவற்றின் மரபணுக்களின் இடம் பெயர்வதற்கு உதவும் முக்கியச் செயலாக இது உள்ளது.
* அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் தாவரங் களில் மரபணு பரிமாற்றத்திற்கு விதை பரவுதல் உதவி செய்கிறது.
* மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்ட சூழல் மண்டலத்திலும் கூடச் சிற்றினங்களின் பாதுகாப்பிற்கு விதை பரவும் செயல் உதவுகிறது.
* பாலைவனம் முதல் பசுமை மாறாக் காடுகள் வரையிலான பல்வேறு சூழல்மண்டலங்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் உயிரி பன்மத்தை தக்க வைத்துப் பாதுகாக்கவும் கனிகள் மற்றும் விதைகள் பரவுதலடைதல் அதிகம் உதவுகிறது.
56. விலங்குகள் மூலம் கனி மற்றும் விதைகள் பரவுதல் பற்றி குறிப்பு வரைக.
கனிகள் மற்றும் விதைகள் பரவுதலில் மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகள், பறவைகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
i. கொக்கிகளுடன் கூடிய கனிகள் (Hooked fruit) :
கனிகள் மற்றும் விதைகளில் காணப்படும் கொக்கிகள் (சாந்தியம்) நுண்ணிழை செதில்கள் (அன்ட்ரொபோகன்) முள் போன்ற அமைப்புகள் (அரிஸ்டிடா) விலங்குகளின் உடல்கள் மீது
ii. ஒட்டிக் கொள்ளும் கனிகள் மற்றும் விதைகள் (Sticky fruits and seeds) :
அ) சில கனிகளில் ஒட்டிக்கொள்ளும் சுரப்புத்தூவிகள் காணப்பட்டு அவற்றின் உதவியால் மேயும் விலங்குகளின் ரோமங்கள் மீது ஒட்டிக்கொண்டு எளிதில் பரவுகின்றன.
(எ.கா) போயர்ஹாவியா மற்றும் கிளியோம்
ஆ) கனிகளின் மீது காணப்படும் பிசுபிசுப்பான அடுக்கு பறவைகள் கனிகளை உண்ணும் போது அவற்றின் அலகுகளில் ஒட்டிக்கொண்டு, பறவைகள் அலகினை மரக்கிளைகளின் மீது தேய்க்கும் போது விதைகள் பரவிப் புதிய இடங்களை அடைகிறது. (எ.கா) கார்டியா மற்றும் அலாஞ்சியம்
iii. சதைப்பற்றுள்ள கனிகள் (Fleshy fruits) :
சில பகட்டான நிறமுடைய சதைப்பற்றுள்ள கனிகள் மனிதர்களால் உண்ணப்பட்டு பின்னர் அவற்றின் விதைகள் வெகு தொலைவில் வீசப்பட்டு பரவுதலடைகின்றன. எ.கா: மா, பப்பாளி