தாவரச் சூழ்நிலையியல் கோட்பாடுகள் - தாவரவியல் - கலைச்சொற்கள் | 12th Botany : Chapter 6 : Principles of Plant Ecology
உயிர்மம்: பெரும்பான்மையான நிலப்பரப்ப்பு சார்ந்த ஒத்த உயிரினங்கள் மற்றும் சூழல் நிலைமைகளை கொண்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள்.
உயிரிக்கோளம்: புவியில் காணப்படும் அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய உறை (அடுக்கு).
குழுமம்: ஒரே இடத்தில் வாழும் உயிரினங்களின் தொகுப்பு
ஃபுளோரா: ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படுகின்ற தாவர வகைகள்
பழ உண்ணிகள் : பழங்களை உண்ணும் உயிரினங்கள்
எக்கிஸ்டோதெர்ம்கள்: (70 °C கீழுள்ள வெப்பநிலை கொண்டது) மிகவும் குறைந்த வெப்பநிலை கொண்ட பகுதி மற்றும் இங்கு காணப்படும் ஓங்கிய தாவரக்கூட்டம் மலைமுகடு பனிக்காடுகள் ஆகும்.
நிலப்பரப்பு: புலப்படும் ஓர் நிலப்பரப்பின் பண்புகள்
வன்கொடிகள்: வெப்பகால நிலை கொண்ட காடுகளில் காணப்படும் கட்டைத்தன்மையுடைய பின்னுகொடிகள்
மெகாதெர்ம்கள்: (240 °Cக்கு அதிகமுள்ள வெப்பநிலை கொண்டது) வருடம் முழுவதும் அதிக வெப்பநிலை கொண்ட பகுதி மற்றும் இங்கு காணப்படும் ஓங்கிய தாவரக் கூட்டம் வெப்பமண்டல மழைக்காடுகளாகும்.
மீசோதெர்ம்கள்: (170 °C மற்றும் 240 °Cக்கு இடைப்பட்ட வெப்பநிலை கொண்டது) அதிக மற்றும் குறைந்த வெப்பநிலைகள் மாறிமாறி காணப்படும் பகுதி மற்றும் இங்கு காணப்படும் தாவரக்கூட்டம் வெப்பமண்டல இலையுதிர்க் காடுகளாகும்.
மைக்ரோதெர்ம்கள்: (70 °C மற்றும் 170 °Cக்கு இடைப்பட்ட வெப்பநிலை கொண்டது). குறைந்த வெப்பநிலை கொண்ட பகுதி மற்றும் இங்கு கலப்பு ஊசியிலை காடுகளைக் கொண்டுள்ளது.
உயிரினக்கூட்டம்: ஒரே சிற்றினங்களைக் கொண்ட பல தொகுப்புகளாலான உயிரினங்களைக் கொண்டது.
இரவில் திறக்கும் இலைத்துளை வகை: இரவு நேரங்களில் திறந்தும், பகல் நேரங்களில் மூடியும் காணப்படுகின்ற சதைபற்றுள்ள தாவரங்களில் காணப்படுகின்ற இலைத்துளைகள்.
கனிக்குள் விதை முளைத்தல்: விதை அல்லது கரு முளைத்தலானது கனி தாய்த் தாவரத்தில் இருக்கும்போதே நடைபெறுவதாகும்.