தாவரச் சூழ்நிலையியல் கோட்பாடுகள் - தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) | 12th Botany : Chapter 6 : Principles of Plant Ecology
தாவரவியல் : தாவரச் சூழ்நிலையியல் கோட்பாடுகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)
மதிப்பீடு
1. சூழ்நிலையியல் படிநிலைகளின் சரியான வரிசை அமைப்பினைக் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வரிசைப்படுத்தி அமைக்கவும்.
அ) தனி உயிரினம் → உயிரித்தொகை → நிலத் தோற்றம் → சூழல் மண்டலம்
ஆ) நிலத்தோற்றம் → சூழல் மண்டலம் → உயிர்மம் → உயிர்க்கோளம்
இ) குழுமம் → சூழல் மண்டலம் → நிலத்தோற்றம் → உயிர்மம்
ஈ) உயிரித்தொகை → உயிரினம் → உயிர்மம் → நிலத்தோற்றம்
விடை : இ) குழுமம் → சூழல் மண்டலம் → நிலத்தோற்றம் → உயிர்மம்
2. ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?
i) குழும சூழ்நிலையியல்
ii) சுயச் சூழ்நிலையியல்
iii) சிற்றினச் சூழ்நிலையியல்
iv) கூட்டு சூழ்நிலையியல்
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) 1 மற்றும் iv மட்டும்
ஈ) 11 மற்றும் iii மட்டும்
விடை : ஈ) ii மற்றும் iii மட்டும்
3. ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பணியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு
அ) புவி வாழிடம்
ஆ) செயல் வாழிடம்
இ) நிலத்தோற்றம்
ஈ) உயிர்மம்
விடை : ஆ) செயல்வாழிடம்
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றினைப் படித்து அதில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
i) நீர்வாழ் தாவரங்களை நீரில் நிலை நிறுத்துவறகாக ஏரங்கைமாவினை கொண்டுள்ளது.
ii) விஸ்கம் தாவர விதைகள் ஒளியின் உதவியால் மட்டுமே முளைக்கிறது.
iii) மண்ணின் நுண்துளைகளில் ஈரப்பத நீர்தான் வளரும் தாவரங்களின் வேர்களுக்கு கிடைக்கிறது
iv) அதிக வெப்பநிலையானது வேர்கள் மூலம் நீர் மற்றும் திரவக் கரைசலை உறிஞ்சுவதைக் குறைக்கிறது
அ) i,ii மற்றும் iii மட்டும்
ஆ) ii,iii மற்றும் ivமட்டும்
இ) ii மற்றும் iii மட்டும்
ஈ) i மற்றும் ii மட்டும்
விடை : ஆ) ii,iii மற்றும் iv மட்டும்
5. கீழ்க்கண்ட எந்தத் தாவரத்தில் இதயத்தைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது?
அ) கலோட்ராபிஸ்
ஆ) அக்கேசியா
இ) நெப்பந்தஸ்
ஈ) யூட்ரிகுலேரியா
விடை : அ) கலோட்ராபிஸ்
6. கீழ்கண்ட கூற்றினைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடக்கவும்
i) பசலை மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்ற மண் வகையாகும். இது வண்டல் மண், மணல் மற்றும் களி மண் ஆகியவை கலந்த கலவையாகும்.
ii) அதிகளவு லிக்னின் மற்றும் செல்லுலோஸ் கொண்ட கரிம மட்குகளில் மட்டும் செயல் முறைகள் மெதுவாக நடைபெறுகிறது.
iii) நுண் துளைகளுக்குள் காணப்படும் நுண்புழை நீர் தாவரங்களுக்குக் கிடைக்கும் ஒரே நீராகும்.
iv) நிழல் விரும்பும் தாவரங்களின் செயல் மையத்தில் அதிகளவு பசுங்கணிகங்களிலும், குறைவான அளவு பச்சையம் a மற்றும் b ஆகியவற்றிலும் மற்றும் இலைகள் மெல்லியதாகவும் காணப்படுகின்றன.
அ) i, ii மற்றும் iii மட்டும்
ஆ) ii,iii மற்றும் ivமட்டும்
இ) i, ii மற்றும் iv மட்டும்
ஈ) ii மற்றும் iii மட்டும்
விடை : அ) i, ii மற்றும் iii மட்டும்
7. கீழ்கண்டவற்றை படித்துச் சரியான விடையினைத் தேர்ந்தெடுக்கவும்
கூற்று அ : களைச்செடியான கலோட்ராபிஸ் தாவரத்தைக் கால்நடைகள் மேய்வதில்லை.
கூற்று ஆ : கலோட்ராபிஸ் தாவரத்தில் தாவர உண்ணிகளுக்கு எதிரான பாதுகாப்பிற்காக முட்களும், சிறு முட்களும் கொண்டுள்ளன.
அ) கூற்று அ மற்றும் ஆ ஆகிய இரு கூற்றுகளும் தவறானவை.
ஆ) கூற்று அ சரி, ஆனால் கூற்று ஆ சரியானது அல்ல
இ) கூற்று அ மற்றும் ஆ சரி, ஆனால் கூற்று ஆ கூற்று அ-விற்கான சரியான விளக்கமல்ல.
ஈ) கூற்று அ மற்றும் ஆ சரி, ஆனால் கூற்று ஆ கூற்று அ - விற்கான சரியான விளக்கமாகும்.
விடை : ஆ) கூற்று அ சரி, ஆனால் கூற்று ஆ சரியானது அல்ல
8. கீழ்கண்ட எந்த
மண்ணின் நீ ர் தாவரங்களுக்குப்
பயன்படுகிறது
அ) புவியீர்ப்பு
நீ ர்
ஆ) வேதியியல் பிணைப்பு
நீ ர்
இ) நுண்புழை
நீ ர்
ஈ) ஈரப்பத நீ ர்
விடை : ?
9. கீழ்கண்ட கூற்றுகளில் காணப்படும் கோடிட்ட இடங்களுக்கான சரியான விடைகளைக் கொண்டு பூர்த்தி செய்க.
i) மண்ணில் காணப்படும் மொத்த நீர் ...
ii) தாவரங்களுக்குப் பயன்படாத நீர் ........
iii) தாவரங்களுக்குப் பயன்படும் நீர் .......
விடை : அ) ஹாலார்டு – எக்ஹார்டு - கிரிஸ்ஸார்டு
10. நிரல் I ல் மண்ணின் அளவும், நிரல் II ல் மண்ணின் ஒப்பீட்டளவும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்கண்டவற்றில் நிரல் 1 மற்றும் நிரல் II ல் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைக் கண்டுபிடிக்கவும்.
அ | ii | iii | iv | i II |
ஆ | iv | i | iii | ii |ii|
இ | iii ii i | iv |IV | |
ஈ எதுவுமில்லை
விடை : இ) I-iii, II-ii, III-i, IV-iv
11. எந்தத் தாவர வகுப்பானது பகுதி தண்ணீரிலும் பகுதி நிலமட்டத்திலும் மேல் பகுதி மற்றும் நீர் தொடர்பின்றி வாழும் தகவமைப்பினைப் பெற்றுள்ளது.
அ) வறண்ட நிலத் தாவரங்கள்
ஆ) வளநிலத்தாவரங்கள்
இ) நீர்வாழ் தாவரங்கள்
ஈ) உவர் சதுப்புநிலத் தாவரங்கள்
விடை : ஈ) உவர் சதுப்புநிலத் தாவரங்கள்
12. கீழ்கண்ட அட்டவணையில் A, B, C மற்றும் D ஆகியவற்றைக் கண்டறியவும்.
அ. (+) ஒட்டுண்ணி (-) அமன்சாலிசம்
ஆ (-) ஒருங்குயிரி நிலை (+) போட்டியிடுதல்
இ (+) போட்டியிடுதல் (0) ஒருங்குயிரி நிலை
ஈ. (0) அமன்சாலிசம் (+) ஒட்டுண்ணி
விடை : அ) (+) ஒட்டுண்ணி , (-) அமன்சாலிசம்
13. ஓபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்து காணப்பட்டு, ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற செயல்முறை இதுவாகும்
அ) மிர்மிகோஃபில்லி
ஆ) சூழ்நிலையியல் சமானங்கள்
இ) பாவனை செயல்கள்
ஈ)எதுவுமில்லை
விடை : இ) பாவனை செயல்கள்
14. தனித்து வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றும் அசோலா என்ற நீர் பெரணியில் ஒருங்குயிரியாக வாழும் சயனோபாக்டீரியம் எது?
அ) நாஸ்டாக்
ஆ) அனபீனா
இ) குளோரெல்லா
ஈ) ரைசோபியம்
விடை : ஆ) அனபீனா
15. பெடாஜெனிஸிஸ் (Pedogenesis) என்பது எதனுடன் தொடர்புடையது?
அ) தொல்லுயிரி படிவம்
ஆ) நீர்
இ) உயிரித்தொகை
ஈ) மண்
விடை : ஈ) மண்
16. தாவர வளர்ச்சியில் பூஞ்சை வேர்கள் எதை ஊக்குவிக்கின்றன?
அ) தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளாக செயல்படுகிறது
ஆ) கனிம அயனிகளை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது
இ) இது வளி மண்டல நைட்ரஜன் பயன்படுத்துவதில் துணைபுரிகிறது
ஈ) தாவரங்களை நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது.
விடை : ஆ) கனிம அயனிகளை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது
17. கீழ்கண்ட எந்தத் தாவரத்தில் மெழுகு பூச்சுடன் கூடிய தடித்த தோல் போன்ற இலைகள் காணப் படுகின்றன?
அ) பிரையோஃபில்லம்
ஆ) ரஸ்கஸ்
இ) நீரியம்
ஈ) கலோட்ரோபஸ்
விடை : இ) நீரியம்
18. நன்னீர் குளச்சூழலில் வாழும் வேரூன்றிய தற்சார்பு ஜீவிகள் ?
அ) அல்லி மற்றும் டைஃபா
ஆ) செரட்டோபில்லம் மற்றும் யூட்ரிக்குளேரியா
இ) உல்ஃபியா மற்றும் பிஸ்டியா
ஈ) அசோலா மற்றும் லெம்னா
விடை : அ) அல்லி மற்றும் டைஃபா
19. கீழ்கண்டவற்றை பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
I II III IV V
அ) i ii iii iv v
ஆ) ii iii iv v i
இ) iii iv v i ii
ஈ) iv iii ii v i
விடை : ஈ) iv iii ii v i
20. எந்தத் தாவரத்தின் கனிகள் விலங்குகளின் பாதங்களில் ஒட்டிக் கொள்ளக் கடினமான, கூர்மையான முட்கள் கொண்டிருக்கின்றன.
அ) ஆர்ஜிமோன்
ஆ) எக்பெல்லியம்
இ) எரிடியரா
ஈ) கிரசான்டிரா
விடை : அ) ஆர்ஜிமோன்
21. ஓட்டிக்கொள்ளும் சுரப்பி தூவிகளை கொண்டுள்ள போயர்ஹாவியா மற்றும் கிளியோம் இவற்றிற்கு உதவி செய்கிறது
அ) காற்று மூலம் விதை பரவுதல்
ஆ) விலங்குகள் மூலம் விதை பரவுதல்
இ) தன்னிச்சையாக விதை பரவுதல்
ஈ) நீர் மூலம் விதை பரவுதல்