ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - வரலாறு - பகத்சிங்கும் கல்பனா தத்தும் | 12th History : Chapter 5 : Period of Radicalism in Anti-imperialist Struggles
பகத்சிங்கும் கல்பனா தத்தும்
தேசியவாதத்தின் ஓர் ஒப்பற்ற நிலையைப் பகத்சிங்
பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவருடைய புரட்சிகர தேசியவாத நிலைப்பாடு, ஒரு தனித்த
வழி என்ற அளவில் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தின் லட்சியங்களுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது.
கிஷன்சிங் (தகப்பனார்), வித்யாவதி கவுர் (தாயார்)
ஆகியோரின் மகனாக பகத்சிங், தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியான பஞ்சாப் மாநிலத்திலுள்ள
லயல்பூர் மாவட்டம், ஜார்ன்வாலா என்ற இடத்தில் 1907 செப்டம்பர் 28இல் பிறந்தார். அவருடைய
தகப்பனார் ஒரு தாராளவாதியாக இருந்தார். அவருடைய குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டக்காரர்களாக
விளங்கினர். பகத்சிங்கின் 14ஆம் வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. அவர்
தனது இளமைக் காலம் முதலாகவே, நவ்ஜவான் பாரத் சபா , ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன்
ஆகிய அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டார். இதில் இரண்டாவது அமைப்பு சச்சின் சன்யால்,
ஜோகேஷ் சட்டர்ஜி ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது. செப்டம்பர்
“நான் படிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய முந்தைய நம்பிக்கைகளும் தீர்மானங்களும் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மாற்றத்திற்கு
உள்ளானது. மிகவும் முக்கியமாக நமது முன்னோடிகளிடையே நிலவிய வன்முறைச் செயல்பாடுகள்
மீதான மோகம் தீவிரமான சித்தாந்தங்களின் மூலம் மாற்றீடு செய்யப்பட்டது. இதில் மாயத்திற்கு
இடமில்லை . கண்மூடித்தனமான நம்பிக்கைக்கும் இடமில்லை. யதார்த்தமான அணுகுமுறையே நமது
ஒழுங்குமுறை ஆனது. தீவிரமான தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே வன்முறையைக் கையாள்வது
நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும். அனைத்து வெகுஜன இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடிய
ஒரு கொள்கையாக அஹிம்சை இருக்கும். வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. நாம் எந்த லட்சியத்திற்காகப்
போரிட்டோமோ அதன் தூய கருதுகோளே மிக முக்கியமானது." பகத்சிங்கின் "நான் ஏன்
நாத்திகனாக இருக்கிறேன்? என்னும் நூலிலிருந்து.
1928இல் அதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட்
ரிபப்ளிகன் அசோசியேஷன் என்று பகத்சிங்காலும் அவரது தோழர்களாலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு
அவ்வமைப்புத் திருத்தியமைக்கப்பட்டது. 1917இல் ரஷ்யாவில் நடந்தேறிய அக்டோபர் புரட்சியும்
சோசலிசச் சித்தாந்தங்களும் இந்தப் புரட்சியாளர்களிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது.
சந்திரசேகர ஆசாத், சிவராம் ராஜகுரு, சுகதேவ் தாபர் ஆகியோருடன் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட்
ரிபப்ளிகன் அசோசியேஷனின் தலைவர்களில் ஒருவராக பகத்சிங் விளங்கினார்.
பகத்சிங்கின் பெயரை நாம் குறிப்பிடும்போதே
நமது நினைவுக்கு வருகிற சித்திரம் அவர் 1929 ஏப்ரல் 8இல் மத்திய சட்டமன்றத்தில் குண்டு
வீசிய நிகழ்வுதான். அந்தக் குண்டுகள் எவரையும் கொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு
எதிரான ஒரு போராட்ட செயலாகச் செயல்பூர்வமான ஒரு நடவடிக்கையாகப் புரட்சியாளர்களால் அது
கருதப்பட்டது. தொழிலாளர் வர்க்கத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு சட்டத்தைச் சட்டமன்றத்தில்
நிறைவேற்றுவதற்காக அதற்கான தொழிற்தகராறுகள் மசோதாவை அறிமுகப்படுத்தும் நாளை அவர்கள் இதற்கெனத்
தேர்ந்தெடுத்திருந்தனர்.
ராஜகுரு, சுகதேவ், ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன்
பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர். சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு
அவர்கள் ஆளாக்கப்பட்டனர் (இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது).
சிறையின் மோசமான நிலைமைகள், பாரபட்சமான நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து உண்ணாவிரதம்
மேற்கொண்ட ஜதீந்திரநாத் தாஸ் 64 நாட்களுக்குப் பின்னர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.
லாகூர் சதி வழக்கின் விசாரணைகள் முடியும் வரை குண்டு வீச்சு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில்தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு 1930 அக்டோபர் 7 அன்று மரண
தண்டனை விதிக்கப்பட்டது.
தேசத்தின் விடுதலைக்காக மரணத்தை எதிர்கொள்ளும்
தருணத்திலும் இந்தியாவின் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையையும் துணிவையும் காட்டிப்
பஞ்சாப் மாநில ஆளுநருக்கு அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்தக் கடிதத்தில் முதலாளித்துவம்,
ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தப் போர் எங்களுடன் தொடங்கியதுமல்ல,
எங்கள் வாழ்க்கையுடன் முடிவு பெறப்போவதுமல்ல... நாங்கள் போர் தொடுத்ததால் போர்க் கைதிகள்
ஆனோம் என்று உங்கள் நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. அப்படியானால் எங்களைத் தூக்கிலிடுவதற்குப்
பதிலாக சுட்டுக் கொல்லுங்கள் " என்று கோரப்பட்டிருந்தது
பகத்சிங்கையும் அவருடன் இருந்த தேசபக்தர்களையும்
புரட்சிகர தேசியவாதிகள் எனச் சில குறிப்புகள் விவரிக்கின்றன. அது ஒரு தவறான கருதுகோள்
ஆகும். வரலாற்றுப் புகழ்பெற்ற பகத்சிங், பிற புரட்சிகர தேசியவாதிகளிடமிருந்து அவருடைய
குழுவினர் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார். புரட்சி என்பது
வெறும் குண்டு எறிதலோ கைத்துப்பாக்கியால் சுடுவதோ அல்ல. புரட்சி என்பது மனிதகுலத்தின்
பிரிக்க முடியாத உரிமை ஆகும். சுதந்திரம் என்பது அனைவரின் அழியாத பிறப்புரிமை ஆகும்.
உழைப்பாளிகள், சமூகத்தின் உண்மையான ஆதரவாளர்கள்
| ஆவர். இந்தப் புரட்சியின் பலிபீடத்தில் நாம் மாபெரும் லட்சியத்துக்காக அளிக்கும்
எந்தத் தியாகமும் அதற்கு முன் பெரிதல்ல என்று விசாரணையின் போது நீதிமன்றத்தில் அவர்
கூறினார். இதனை உணர்த்தும் விதமாக அவர்களது தரப்பு அறிக்கையை விடுத்த பின்பு புரட்சி
ஓங்குக (Inquilab Zindabad) என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
லாகூர் சிறைச்சாலையில் 1931 மார்ச் 23 அன்று
அதிகாலையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். தங்கள் இறுதி
மூச்சு அடங்கும் வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் 'புரட்சி ஓங்குக என்று
முழங்கியவாறு அவர்கள் தூக்குமரக் கொட்டடியை எதிர்கொண்டனர். தேசியத்தின் புரட்சிகரமான
அணியினரான இந்தப் புரட்சியாளர்களின் ஆகச் சிறந்த தியாகம் இல்லாமல் விடுதலைப்போராட்டத்தின்
வரலாறு முழுமை அடையாது. இது போன்ற வீரம் செறிந்த போராளிகளின் பட்டியலில் இடம்பெறும்
இன்னொரு பெயர் கல்பனா தத்.
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன்
அசோசியேஷன் -என்பது ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷனின் புதுப்பிக்கப்பட்ட ஓர் அத்தியாயமே
ஆகும். முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசைத் தூக்கி எறிந்து புரட்சி ஒன்றின் மூலமாக ஒரு
சோசலிசச் சமூகத்தை நிலைநாட்டுவதே அதன் குறிக்கோளாகும். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன்
அசோசியேஷன் லாகூரில் சாண்டர்ஸினைக் கொன்றது போன்ற பல நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.
1928 டிசம்பர் மாதத்தில் லஜபதி ராய் மீது கொடுந்தாக்குதல் நடத்தியதற்கும் அதனைத் தொடர்ந்த
ராயின் மரணத்திற்கும் பொறுப்பான லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ. ஸ்காட்டுக்குப்
பதில் தவறுதலாக சாண்டர்ஸ் பலியானார். 1929, டிசம்பரில் இர்வின் பிரபு (1926 -1931ஆம்
ஆண்டுகளில் கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவும் இருந்தவர்) பயணம் செய்துகொண்டிருந்த
ரயிலைக் கொளுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். 1930ஆம் ஆண்டில் பஞ்சாபிலும்
உத்தரப்பிரதேசத்திலும் இதுபோன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1920 களின் பிற்பகுதியில் கல்பனா தத் என்னும்
ஓர் இளம்பெண் (கம்யூனிஸ்ட் தலைவர் பி. சி. ஜோஷியைத் திருமணம் செய்து கொண்ட பின்னர்
கல்பனா ஜோஷி என்று அறியப்பட்டவர்) சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கியதன்
மூலம் இளம் நெஞ்சங்களில் தேசபக்தியைக் கனன்றெழச் செய்தவர்.
கல்பனா தத்தின் வீரத்தை அறிந்துகொள்வதற்கு,
இந்த லட்சியங்களின்பால் அவரைப் போன்ற பெண்களை ஈர்த்த தேசியத்தின் புரட்சிகரத் தன்மையைக்
குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிரிட்டிஷ் இந்தியாவில் பல புரட்சிக் குழுக்கள்
இருந்தன என்று ஏற்கெனவே அறிந்துகொண்டீர்கள். தனித்தனியாக ஒவ்வொருவரைக் கொன்றொழிப்பது
என்பதிலிருந்து சமூக அமைப்பில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் கூட்டான
நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதாக இந்த அமைப்புகளின் தன்மை படிப்படியாக மாறியது.
சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலின் புரட்சிகரத்
தலைவரான சூரியா சென் "தனிப்பட்ட நடவடிக்கைகளின் இடத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை
ஏற்பாடு செய்வது என்னும் பாதையை ஓர் அர்ப்பணிப்பு மிக்க இளைஞர் பட்டாளம் காட்டித்தர
வேண்டும். அதன் போக்கில் நம்மில் பலர் இறக்க நேரிடும். ஆனால் அத்தகைய உன்னத நோக்கத்திற்கான
நமது தியாகம் வீண் போகாது" என்று ஆனந்த குப்தாவிடம் கூறினார். 1920களின் நடுப்பகுதியில்
யுகந்தர், அனுஷிலன் சமிதி போன்ற புரட்சிகரக் குழுக்கள் தேக்கமடைந்துவிட, அவற்றிலிருந்து
புதிய குழுக்கள் தோன்றின. அவற்றுள் வங்காளத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப்
பணிபுரிந்த சூரியா சென்னின் தலைமையில் செயல்பட்ட குழு முக்கியமானதாகும். அவர் ஒத்துழையாமை
இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுடன், கதரையும் அணிந்து வந்தவர். அவருடைய குழு இந்திய
தேசிய காங்கிரசின் சிட்டகாங் பிரிவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது.
போர்த் தளவாடக்கிடங்குத் தாக்குதலின்
போது தப்பித்த இருவர் 1932 ஜூன் 13இல் அரசுப் படைகளுக்கு எதிராக நேருக்கு நேர் மோதல்
ஏற்பட்டபோது, கொல்லப்பட்டனர். அதே வேளையில் அவர்கள் தல்காட் கிராமத்தில் அரசுப்படைகளின்
தளபதி கேப்டன் கேமரூனை ஒரு ஏழை பிராமண விதவையான சாவித்ரி தேவி என்பாரின் வீட்டில் கொன்றனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அவ்விதவைப் பெண்மணி அவரது குழந்தைகளுடன் கைதுசெய்யப்பட்டார்.
விசாரணையின்போது அப்பெண்மணிக்கு வேண்டியளவு உதவி செய்வதாகத் தூண்டியும் அவரிடமிருந்து
ஒரு வார்த்தையைக் கூட காவல்துறையால் பெற முடியவில்லை . படிப்பறிவற்ற ஏழையாயிருந்தும்
தங்கம் போன்றப் பொருள்களுக்கு ஆசைப்படாமல் தயக்கமின்றி அத்தனைக் கொடுமைகளையும் பழியையும்
தாங்கிக்கொள்ள முடிந்தது.
கல்பனா தத்தின் சுயசரிதையில்
இருந்து. (Chittagong Armoury Raiders
Reminiscences)
சூரியா சென்னின் புரட்சிகரக் குழுவான இந்தியக்
குடியரசு இராணுவம் ஐரிஷ் குடியரசுப் படைக்குப் பின் அதுபோன்று பெயர் சூட்டிக்கொண்டது.
சிட்டகாங்கைக் கைப்பற்று வதற்காக மறைந்திருந்து தாக்கும் கொரில்லா பாணி தாக்குதலை நடத்த
அவர்கள் திட்டமிட்டனர். 1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கித்
தகர்க்கப்பட்டது. மாகாணத்தின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தும் முகமாக ரயில்வே
உட்பட அனைத்துத் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களையும் துண்டிக்கும் பொருட்டு தந்தி ,
அலுவலகங்கள், படைத்தளங்கள், காவல்துறை முகாம்கள் ஆகியவற்றின் மீது அது போன்ற தாக்குதல்கள்
தொடுக்கப்பட்டன. காலனிய நிர்வாகத்திற்கு நேரடியாகச் சவால் விடுக்கும் நோக்குடன் அது
நடந்தேறியது.
புரட்சியாளர்கள் தேசியக்கொடியை ஏற்றி வந்தே
மாதரம்', 'புரட்சி ஓங்குக' போன்ற கோஷங்களை முழங்கிக் குறிப்புணர்த்தினர். இந்தத் தாக்குதல்களும்
எதிர்ப்பும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன. பெரிதும் அவர்கள் கிராமங்களிலிருந்து
செயல்பட்டனர். கிராமத்தினர் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்தனர். அதற்காக அவர்கள்
காவலர்களால் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். தொடர்ந்த நடவடிக்கைகளின் காரணமாக ஆயுதப்படைத்
தாக்குதல் தொடர்பான விசாரணையும் நடைபெற்றது. சூரியா சென்னைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள்
பிடித்தன. பிப்ரவரி 1933இல் அவர் கைதானார். பதினொரு மாதங்கள் கழித்து 1934 ஜனவரி
12இல் அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சிட்டகாங் தாக்குதலில் ஈடுபட்டவர்களில்
கல்பனா தத்தும் ஒருவர் ஆவார்.
நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட
இளைஞர்கள் பலரைப் பிரதிநிதித்துவப்படுத்த பகத்சிங் போன்றோர் இருக்கின்ற அதே வேளையில்,
ஆணாதிக்கமிக்க இச்சமூகத்தில் தாய்நாட்டைக் காப்பதற்காய் இளம்பெண்களின் பிரதிநிதியாய்
விடுதலைப்போரில் ஆயுதந்தாங்கி கல்பனா தத் போன்றோரும் பங்கேற்றனர். வெறும் செய்திகளை
அங்குமிங்கும் எடுத்துச் செல்பவராய் மட்டுமின்றி, போரின் நேரடி நடவடிக்கைகளில் பங்கு
பெற்று, துப்பாக்கிக் கொண்டு ஆண்களுடன் இணைந்து போராடினர்.
புரட்சிகர சிட்டகாங் இயக்கத்தில் தீவிரமாகப்
பங்கேற்றதினால் கல்பனாதத்கைது செய்யப்பட்டார். தண்டனையாக சூர்யா சென்னும் கல்பனா தத்தும்
வாழ்நாள் முழுதும் நாடுகடத்தப்பட்டனர். சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு யாதெனில்
"பேரரசருக்கு எதிரான போரை நடத்தியது." சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல்
தொடங்கி அவர்கள் மீதான ஒட்டுமொத்த வழக்கு விசாரணையும் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு வழக்கு
என அறியப்படுகிறது.
Chittagong
Armoury Raiders' Reminiscences என்னும் தனது நூலில் சிட்டகாங்கின்
புரட்சிகர இளைஞர்கள் நம்பிக்கையுடன் போரிட்டால் வெளியாட்களின் உதவியின்றி கூட அரசாங்கத்தை
எதிர்த்துப் போராட முடியும் என்று நிரூபித்துள்ளதை நினைவூட்டுகிறார்.