ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பம்பாய், கல்கத்தா | 8th Social Science : History : Chapter 7 : Urban changes during the British period
பம்பாய்
பம்பாய்
ஏழு தீவுகளைக் கொண்டதாகும். இது 1534லிருந்து போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில்
இருந்தது. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்த்துகீசிய மன்னரின் சகோதரியைத்
திருமணம் செய்து கொண்டதற்குப் பம்பாய் பகுதியை 1661இல் சீதனமாகப் பெற்றார். மன்னர்
அப்பகுதியை கிழக்கிந்திய வணிகக்குழுவிற்குக் குத்தகைக்கு அளித்தார். கிழக்கிந்திய கம்பெனி
மேற்கிந்தியாவில் அதன் முக்கிய துறைமுகமாக பம்பாயைப் பயன்படுத்தத் தொடங்கியபோது பம்பாய்
நகரம் வளரத்தொடங்கியது. ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் 1687ஆம் ஆண்டு அதன் தலைமையகத்தைச்
சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றியது.
கல்கத்தா
ஆங்கில
வணிகர்கள் சுதநூதியில் 1690ஆம் ஆண்டு ஒரு குடியேற்றத்தை நிறுவினர். அவர்கள் சுதநூதி,
கல்கத்தா மற்றும் கோவிந்தபூர் மீது ஜமீன்தாரி உரிமைகளைப் 1698ஆம் ஆண்டில் பெற்றனர்.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் கல்கத்தாவில் வில்லியம் கோட்டையை நிறுவியது. கல்கத்தா
மாகாணமாக மாறியதோடு அதன் அலுவல்களை நிர்வகிக்க ஆளுநர் மற்றும் குழு இருந்தது.