ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : History : Chapter 7 : Urban changes during the British period
முடிவுரை
பிரிட்டிஷ்
பேரரசு படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டு நிர்வாகத்தில் இடம்சார்ந்த கட்டமைப்பை ஒருங்கிணைத்து
சாம்ராஜ்யத்தின் தலைநகரம், மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களை உருவாக்கியது.
புதிய ஆட்சியாளர்கள், புதிய அலுவலர்களையும், புதிய நிறுவனங்கள் மற்றும் புதிய கட்டமைப்பைக்
கொண்ட நகரங்கள் இராணுவ குடியிருப்பு, காவல் நிலையம், சிறை, கருவூலம், பொதுத் தோட்டம்,
அஞ்சல் அலுவலகம், பள்ளிகள், சிகிச்சை மையங்கள் கொண்டு வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக
நகராட்சிக்குழு ஒன்றையும் கொண்டிருந்தது. இவ்வாறு காலப்போக்கில் நிர்வாக தலைமையகம்
நாட்டின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் மாநகரங்களாகவும் உருவெடுத்தன. உதாரணமாக இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் இந்தியாவின் முதன்மை நிர்வாக,
வணிக மற்றும் தொழில்துறை நகரங்களாக மாறியிருந்தன. இந்நகரங்கள் ஐரோப்பிய பாணியிலான கட்டடங்களுடன்
வணிக மையமாக மாறின. துணை நகர்ப்புற இரயில்வே டிராம் வண்டி மற்றும் நகரப்பேருந்துகள்
குடியேற்ற நகரங்களுக்குப் புதிய தோற்றத்தையும் மதிப்பையும் அளித்தன.
மீள்பார்வை
•நகர்ப்புற
குடியேற்றத்தின் பரிணாமம் பல்வேறு வழிகளில், பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்துள்ளது.
•மன்னரின்
அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றின. இடைக்காலத்தில் நகரங்கள் கோட்டை
நகரம் அல்லது துறைமுக நகரமாக செயல்பட்டன.
•ஆதிக்கத்தின்
விரிவாக்கத்துடன் பிரிட்டிஷ் அதன் இருப்பிடம், நோக்கம் மற்றும் வளங்களைப் பொறுத்து
புதிய நகரங்களை உருவாக்கியது.
•18ஆம்
நூற்றாண்டின் கடைசியில் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணம் நகரங்களாக எழுச்சிபெற்றது.
•சென்னை
ஒரு காலத்தில் கிராமங்களின் தொகுப்பாக இருந்தது. 1639ஆம் ஆண்டு தொழிற்சாலை அமைக்க கிழக்கிந்திய
நிறுவனத்தைச் சேர்ந்த சர் பிரான்சிஸ் டே என்பவருக்கு நிலம் வழங்கப்பட்டது. அது பின்னர்
சென்னை என ஆயிற்று.
மேற்கோள்
நூல்கள்
1.
G. Venkatesan, Development of Rural Local Self Government, Rainbow
Publications, Coimbatore, 1983.
2.
Saroja Sundarajan, Madras Presidency in Pre-Gandhian era; a historical
perspective, 1884-1915, Lalitha Publications, 1997.
3.
Atlas of the Madras Presidency, Central Survey Office, Madras, 1921.
4.
India, Dorling Kindersely Limited, London, 2002.
இணையச் செயல்பாடு
ஆங்கிலேயர்
ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
இந்த செயல்பாட்டின் மூலம் உலக நாடுகளின் வரலாற்று
வரைபடங்களை அறிந்து கொள்ள முடியும்
படி-1 URLஅல்லதுQR குறியீட்டினைப்பயன்படுத்தி
இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்குச் செல்க.
படி- 2 திரையின் இடது பக்கத்தில்
“Play” பொத்தானைச் சொடுக்கவும்.
படி-3 திரையின் கீழே தோன்றும்
வரைபடங்களை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுக்கவும்
உரலி:
https://www.zum.de/whkmla/region/india/xpresbengal.html
*படங்கள்
அடையாளத்திற்கு மட்டும்.
*தேவையெனில்
Adobe Flash ஐ அனுமதிக்க