ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : History : Chapter 7 : Urban changes during the British period
மதிப்பீடு
I. சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. பழங்கால நகரங்கள் எனப்படுவது
அ) ஹரப்பா
மற்றும் மொகஞ்சதாரோ
ஆ) டெல்லி
மற்றும் ஹைதராபாத்
இ) பம்பாய்
மற்றும் கல்கத்தா
ஈ) மேற்கண்ட
எதுவுமில்லை
[விடை: அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ]
2. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம்
/ நகரங்கள்
அ) சூரத்
ஆ) கோவா
இ) பம்பாய்
ஈ) மேற்கண்ட
அனைத்தும்
[விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்]
3. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய
நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை
அ) சூயஸ்
கால்வாய் திறப்பு
ஆ) நீராவிப்
போக்குவரத்து அறிமுகம்
இ) ரயில்வே
கட்டுமானம்
ஈ) மேற்கண்ட
அனைத்தும்
[விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்]
4. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது
அ) வர்த்தகத்திற்காக
ஆ) தங்கள்
சமயத்தைப் பரப்புவதற்காக
இ) பணி
புரிவதற்காக
ஈ) ஆட்சி
செய்வதற்காக
[விடை: அ) வர்த்தகத்திற்காக]
5. புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட
இடம்
அ) பம்பாய்
ஆ) கடலூர்
இ) மதராஸ்
ஈ) கல்கத்தா
[விடை: இ) மதராஸ்]
6. 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின்
முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?
அ) புனித
வில்லியம் கோட்டை
ஆ) புனித
டேவிட் கோட்டை
இ) புனித
ஜார்ஜ் கோட்டை
ஈ) இவற்றில்
எதுவுமில்லை
[விடை: இ) புனித ஜார்ஜ் கோட்டை]
|| கோடிட்ட
இடங்களை நிரப்புக
1. இந்தியாவில்
இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1853
2. இந்தியாவின்
'உள்ளாட்சி அமைப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் ரிப்பன்
3.
1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் இரட்டை ஆட்சி அறிமுகப்படுத்தியது.
4. நகராட்சி
உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர் ஜோசியா சைல்டு
5. 1639
இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசப்பட்டினத்தில் ஒரு தொழிற்சாலை
மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்.
III பொருத்துக
1. பம்பாய்
– சமயமையம்
2. இராணுவ
குடியிருப்புகள் - மலை வாழிடங்கள்
3. கேதர்நாத்
- பண்டைய நகரம்
4. டார்ஜிலிங்
- ஏழு தீவு
5. மதுரை
– கான்பூர்
விடைகள்
1. பம்பாய் – ஏழு தீவு
2. இராணுவ குடியிருப்புகள் - கான்பூர்
3. கேதர்நாத் - சமயமையம்
4. டார்ஜிலிங் - மலை வாழிடங்கள்
5. மதுரை – பண்டைய நகரம்
IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக
1. இந்தியாவில்
வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன. விடை: சரி
2. பிளாசிப்போருக்குப்
பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். விடை: சரி
3. புனித
வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது. விடை: தவறு
4. குடியிருப்புகளில்
இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர். விடை: சரி
5. மதராஸ்
1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது. விடை: தவறு
V சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்
1. கூற்று: இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக
மாறியது.
காரணம்: பிரிட்டிஷாரின்
ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழில்துறை புரட்சி இந்திய உள்நாட்டு
தொழில்களை அழித்தன.
அ) கூற்று
சரி மற்றும் காரணம் தவறு
ஆ) கூற்று
தவறு மற்றும் காரணம் சரி
இ) கூற்று
சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
ஈ) கூற்று
சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை: இ) கூற்று சரி மற்றும் காரணம்
கூற்றை விளக்குகிறது
2. பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?
i) ஸ்ரீரங்க
ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக வழங்கினார்.
ii) டே
மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.
iii)
1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
அ) i
மட்டும்
ஆ) I
மற்றும் ii
இ)
ii மற்றும் iii
ஈ)
iii மட்டும்
விடை: அ) i மட்டும்
3.கூற்று: ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை
மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்.
காரணம்: அவர்கள்
இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
அ) கூற்று
சரி மற்றும் காரணம் தவறு
ஆ) கூற்று
தவறு மற்றும் காரணம் சரி
இ) கூற்று
சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
ஈ) கூற்று
சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை: இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது
VI.பின்வரும்
வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி
1. நகர்ப்புற பகுதி என்றால் என்ன?
ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியில்லாத
தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.
2. மலைப்பிரதேசங்கள் காலனித்துவ நகர்ப்புற
வளர்ச்சியில் தனித்துவமான அம்சமாக இருந்தன. ஏன்?
> குளிர்ந்த கால நிலையிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில்
கோடை காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
> அவர்களுக்கு இந்திய மலைகளின் குளிர்ந்த காலநிலை பாதுகாப்பானதாக
மற்றும் நன்மை அளிப்பதாக இருந்தது.
> இது வெப்பமான வானிலையிலிருந்தும் தொற்று நோயிலிருந்தும் அவர்களைப்
பாதுகாத்தது. எனவே அவர்கள் மலைப்பிரதேசங்களில் குடியேற ஆரம்பித்தனர்.
3. மாகாண நகரங்கள் மூன்றின் பெயர்களைக் குறிப்பிடுக?
> மதராஸ்
> பம்பாய்
> கல்கத்தா
4. 19ஆம் நூற்றாண்டில் நகரமயமாக்கலின் புதிய
போக்குக்கு ஏதேனும் நான்கு காரணங்களைக் கூறுக.
> சூயஸ் கால்வாய் திறப்பு - நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
> ரயில்வே சாலைகள் அமைத்தல் தொழிற்சாலைகள் வளர்ச்சி
5. இராணுவ குடியிருப்பு நகரங்கள் பற்றி சிறு
குறிப்பு எழுதுக.
> ஆங்கிலேயர்கள் இராணுவக்குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
> இராணுவக்குடியிருப்புகள் முற்றிலும் புதிய நகர்ப்புற மையங்களாக
இருந்தன.
> இந்த பகுதிகளில் இராணுவ வீரர்கள் வசித்தனர்.
> மேலும் இப்பகுதிகள் படிப்படியாக நகரங்களாக வளர்ந்தன.
எடுத்துக்காட்டு: கான்பூர், லாகூர்.
6. பிரிட்டிஷ் ஆட்சியின் போது மதராஸ் மாகாணம்
உள்ளடக்கிய பகுதிகள் யாவை?
சென்னை மாகாணம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தெற்குப்
பகுதியில் பெரிய நிலப்பகுதிகளை உள்ளடக்கி தற்போதைய தமிழ்நாடு, லட்சத்தீவு, வடக்கு கேரளா,
ராயலசீமா, கடலோர ஆந்திரா, கர்நாடக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஒரிசாவின் பல்வேறு மாவட்டங்களைக்
கொண்டிருந்தது.
VII விரிவான
விடையளி
1. காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியைப் பற்றி
விளக்குக.
> கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளிலுள்ள கல்கத்தா, மதராஸ்
மற்றும் பம்பாய் போன்ற இடங்களில் பிரிட்டிஷ் புதிய வர்த்தக மையங்களை உருவாக்கியது.
> இந்நகரங்களை வலுப்படுத்தினர்.
> இவை அனைத்தும் முன்னர் மீன்பிடித்தல் மற்றும் நெசவுத் தொழில் செய்யும்
கிராமங்களாகும்.
> இங்கு ஆங்கிலேயர்கள் வீடுகள், கடைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டினர்.
மேலும் வணிக மற்றும் நிர்வாகத் தலைமையகத்தையும் அமைத்தனர்.
> 1757ஆம் ஆண்டு பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக
அரசியல் ஆதிக்கம் பெற்றனர். ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடைந்தது.
> பின்னர் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியின்
கீழ் மாகாண நகரங்களாக முக்கியத்துவம் பெற்றன.
> சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே
சாலைகள் அமைத்தல், கால்வாய்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, நிலக்கரிச்
சுரங்கம், தேயிலைத் தோட்டம், வங்கிப் பணி, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு வளர்ச்சியினால்
நகரமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது.
> வர்த்தக பிணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியில்
பிரதிபலித்தது.
> இவ்வாறுதோன்றிய நகர்ப்புறமையங்கள் துறைமுக நகரங்கள், இராணுவக்குடியிருப்பு
நகரங்கள், மலைவாழிடங்கள், இரயில்வே நகரங்கள் என நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டன.
எடுத்துக்காட்டுகள் :
துறைமுக நகரங்கள் : சென்னை , கல்கத்தா மற்றும் பம்பாய்.
இராணுவக் குடியிருப்பு நகரங்கள்
: கான்பூர் மற்றும் லாகூர் மலைவாழிடங்கள் : டார்ஜிலிங், டேராடூன், சிம்லா,
கொடைக்கானல் மற்றும் உதக மண்டலம்.
இரயில்வே நகரங்கள் : சென்னை , பம்பாய், கல்கத்தா.
2. மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப்
பற்றி எடுத்துரைக்கவும்.
> ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி. 1600இல் தொடங்கப்பட்டது.
> பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்குக் கடற்கரையில் சூரத்தில்
ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
> ஆங்கிலேயர்கள் கிழக்குக் கடற்கரையிலும் தங்களுக்கு ஒரு துறைமுகம்
வேண்டும் என விரும்பினர்.
> சில முயற்சிகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்தில்
ஒரு தொழிற்சாலையைக் கட்டும் உரிமையைப் பெற்றனர். இது பருவாக்காற்று பாதிப்பிலிருந்து
நன்கு பாதுகாக்கப்பட்டது.
> ஆனால் மசூலிப்பட்டினம் பஞ்சத்தின் பிடியில் சிக்கியதால், அவ்விடத்தில்
ஆங்கிலேயரின் வர்த்தகம் செழிக்க வில்லை .
> பின்னர் ஆங்கில வணிகர்கள் புதிய தளத்தைத் தேடினர்.
> இறுதியில் மதராசப்பட்டிணத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
> அந்த இடம் தொழிற்சாலை அமைப்பதற்கு ஏற்ற இடம் என்பதை பிரான்சிஸ்
டே கண்டறிந்தார்.
> சந்திரகிரி அரசரின் பிரதிநிதியான தமர்லா வெங்கடபதி அவர்களால் அதிகார
பூர்வமான மானியமாக நிலம் வழங்கப்பட்டது.
> அந்த இடம் கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் அமைந்திருந்தது.
> 1939ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரான்சிஸ்
டே என்பவரால் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி மதராசபட்டிணத்தில் ஒரு கோட்டையை
அமைப்பதற்கும், வணிகத்தளத்துடன் கூடிய தொழிற்சாலை அமைப்பதற்கும் அனுமதி கிடைத்தது
> இக்கோட்டைக் குடியிருப்பு புனித ஜார்ஜ் குடியிருப்பு எனப் பெயர்பெற்றது.
இது வெள்ளைநகரம் mஎன அழைக்கப்பட்டது.
> இதன் அருகில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி கருப்பு நகரம்
என அழைக்கப்பட்டது.
> வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் ஆகியவை இணைந்து மதராஸ் என
அழைக்கப்பட்டன.
3. இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக
மாறியது. எப்படி?
> ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் நகரமயமாக்கலுக்கு
எதிரானதாக இருந்தது.
> பின்னர் அவர்களின் கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை விரைவாக
ஒரு காலனித்துவப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் நகரங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன.
> பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகத்தின் விளைவாக
இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.
> உற்பத்தித் தொழில்களின் மொத்த அழிவின் விளைவாக லட்சக்கணக்கான கலைஞர்கள்
மற்றும் கைவினைஞர்கள் நசித்துப்போயினர்.
> இந்தியாவின் நகர்ப்புற கைவினைத் தொழில்களில் திடீர் சரிவு ஏற்பட்டது.
> இந்தியப் பொருட்களுக்கான சந்தைகள் குறைந்தன.
> பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா, மூர்ஷிதாபாத், சூரத் மற்றும்
லக்னோ போன்றவை தங்களது முக்கியத்துவத்தை இழந்தன.
> இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் கடுமையான போட்டியினால் இந்தியாவின்
ஒட்டுமொத்த தொழிற்துறையும் செயலிழந்து போனது.
> அதிகப்படியான இறக்குமதிவரி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பிற கட்டுப்பாடுகளின்
காரணமாக இந்தியப் பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இறக்குமதி செய்யப்படுவது
குறையலாயிற்று. இவ்வாறு இந்தியா பிரிட்டனின் வேளாண்மைக் குடியேற்றமாக மாறியது.
VIII செயல்திட்டம்
மற்றும் செயல்பாடுகள்
1. ஒரு புகைப்படத்தொகுப்பை உருவாக்கவும் "சென்னை
உருவாகுதல்" (தொடக்க காலத்திலிருந்து தற்போது வரை)
2. இந்திய வரைபடத்தில் துறைமுக நகரங்கள், இராணுவ
குடியிருப்புகள், மலைவாழிடங்களைக் குறிக்கவும். (ஒவ்வொன்றிலிருந்தும் ஏதாவது நான்கு
இடங்கள்)